ஹாங்காங்: கொரோனாவில் இருந்து குணமடைந்தவருக்கு மீண்டும் வைரஸ்

பட மூலாதாரம், Getty Images
ஹாங்காங்கில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்ட 30 வயதான நபருக்கு நான்கரை மாதத்துக்குப் பிறகு மீண்டும் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா வைரஸின் முதலாவது மற்றும் தற்போதைய திரிபுகளின் மரபணு கூறுகள் வெவ்வேறாக இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளதால் இது உலகின் முதலாவது மறுதொற்று என்று அவர்கள் கூறுகின்றனர்.
ஆனால் ஒரு நோயாளியை வைத்து மறு தொற்று குறித்த முடிவுக்கு வர வேண்டாம் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஒரு முறை கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபருக்கு மீண்டும் ஒரு முறை தொற்று பாதிப்பு ஏற்படுவது மிகவும் அரிது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
உலகம் முழுவதும் 23 மில்லியன் மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸால் தீவிர பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த பல நோயாளிகளுக்கு ஒரு கட்டத்தில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளது.
ஆனால் இந்த நோய் எதிர்ப்பு சக்தி உடல் ஆரோக்கியத்திற்கு எவ்வளவு பாதுகாப்பானது? மீண்டும் கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்க உதவுமா என்பது குறித்து தெளிவான விளக்கங்கள் எதுவும் வெளிவரவில்லை.

- கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ்: உங்களை தற்காத்துக் கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு மருந்து எப்போது கிடைக்கும்?
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா வைரஸ் : இதுவே கடைசி கொள்ளை நோய் அல்ல
- கொரோனா வைரஸ்: கோவிட் - 19 பற்றி நமக்கு தெரியாத விஷயங்கள் என்ன?

ஹாங்காங் பல்கலைக்கழக அறிக்கையின்படி, ஏற்கனவே கொரோனா வைரஸ் நோய் தொற்று ஏற்பட்டபோது 14 நாட்களுக்கு அந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளார்.
இந்நிலையில் நான்கரை மாதத்திற்கு பிறகு அதே நபருக்கு விமான நிலையத்தில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டபோது வைரஸ் பாதிப்பிற்கான அறிகுறிகள் எதுவுமின்றி மீண்டும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது மிகவும் அறிதான வகை மறு தொற்று என்கிறார் லண்டன் ஸ்கூல் ஆஃப் ஹைஜென் அண்ட் ட்ரோபிக்கள் மெடிசன் நிறுவனத்தின் பேராசிரியர் ப்ரெண்டன் வேர்ன்.
"மேலும் இது கோவிட் -19 தடுப்பூசிகளை உருவாக்குவதற்கான தூண்டுதலாக மறுக்கக்கூடாது'' என்றும் பேராசிரியர் ப்ரெண்டன் வேர்ன் குறிப்பிட்டார்.
ஒரு கட்டத்துக்குப் பிறகு இயற்கையாகவே உடலில் கொரோனா வைரஸ் திரிபுகள் உருவாகும் என என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் இந்த நேரத்தில் ஒருவருக்கு மட்டும் மறு தொற்று ஏற்பட்டிருப்பது ஆச்சரியம் அளிக்கவில்லை என மருத்துவர் ஜெப்ரி பாரெட் கூறுகிறார்.
மேலும் ஒருவருக்கு இரண்டாவது முறை வைரஸ் பாதிப்பு ஏற்படும்போது, நோயின் தீவிர தன்மை குறைந்திருக்க வாய்ப்புள்ளது. பரிசோதினை மேற்கொள்ளாமல் ஒருவருக்கு இரண்டாவது முறை நோய் பாதிப்பு உள்ளதா என்பதை உறுதியாக கூறமுடியாது.
பலருக்கு மறு தொற்று ஏற்பட்டு அவர்களின் உடல்நிலை குறித்து நாம் புரிந்துக்கொண்டால் மட்டுமே இந்த மறு தொற்று குறித்து தெளிவாக தெரிந்துகொள்ள ஆய்வு மேற்கொள்ள முடியும் என்கிறார் யூனிவர்சிட்டி ஆஃப் ஈஸ்ட் ஏங்லியாவை சேர்ந்த பேராசிரியர் பால் ஹன்டர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












