சுடப்பட்ட உக்ரைன் விமானம், 176 பயணிகள் பலியான விவகாரம் - இதுதான் காரணம் என்கிறது இரான் மற்றும் பிற செய்திகள்

விமானம்

பட மூலாதாரம், Getty Images

கடந்த ஜனவரி மாதம் இரானில் உக்ரைன் பயணிகள் விமானம் ஒன்று சுடப்பட்டதில் அதில் பயணித்த 176 பேர் பலியானார்கள். இது குறித்து விசாரித்து வரும் இரான் விமான போக்குவரத்து அமைப்பு, இந்த விபத்திற்கு மனித தவறும், மோசமான ராணுவ தகவல் பரிமாற்றமே காரணம் என்று கூறி உள்ளது.

ஜனவரி மாதம் 8ஆம் தேதி உக்ரைன் விமானம் ஒன்று ஏவுகணையால் தாக்கப்பட்டது. முதலில் இதனை இரான் மறுத்தது. அந்த சமயத்தில் இரானின் உள்நாட்டு விமானப் போக்குவரத்து தலைவர், நிச்சயமாக அந்த விமானம் ஏவுகணையால் தாக்கப்படவில்லை என்று தெரிவித்து இருந்தார்.

இராக்கில் உள்ள அமெரிக்க படைகள் மீது இரான் தாக்குதல் நடத்திய சிறிது நேரத்தில் 176 பயணிகளுடன் சென்ற உக்ரைனை சேர்ந்த விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.

இது குறித்து விசாரித்து வரும் விமான போக்குவரத்து அமைப்பு, ராணுவ தொலைத்தொடர்பில் ஏற்பட்ட தவறே இந்த விபத்துக்கு காரணம் என்பதை ஒப்பு கொண்டுள்ளது. இந்த விமானத்தின் `கருப்புப் பெட்டி' தரவுகளை வெளியிடுவதை தாமதப்படுத்தி வரும் இரான், ஜூலை 20ஆம் தேதி அதனை ஆய்வுக்காக பிரான்ஸ் அனுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Presentational grey line

ராஜஸ்தான்: சச்சின் பைலட், அசோக் கெலாட் இடையே என்ன பிரச்சனை?

சச்சின் பைலட்

பட மூலாதாரம், Getty Images

ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸ் கட்சி இரண்டு கோஷ்டிகளாகப் பிரியும் நிலை ஏற்பட்டுள்ளதால் அங்கு ஆட்சி ஆட்டம் காணும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக, முதல்வர் அசோக் கெலாட் உடனான கருத்து வேறுபாடு அதிகரித்ததை அடுத்து, துணை முதல்வர் சச்சின் பைலட் தனது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களுடன் தில்லி சென்றுள்ளார்.

Presentational grey line

'வேளாளர்' என்பவர்கள் உண்மையில் யார்?

வேளாளர்

பட மூலாதாரம், Getty Images

இந்த மாதத் தொடக்கத்தில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் எல். முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்று புதிய சாதி - அரசியல் விவாதத்தை தமிழகத்தில் உருவாக்கியுள்ளது.

Presentational grey line

ஆன்லைன் வகுப்புகளில் இருக்கும் இந்த பெரும் சிக்கலை கவனித்தீர்களா?

ஆன்லைன் வகுப்பு

பட மூலாதாரம், Getty Images

கொரோனா பொது முடக்கம் நமது வாழ்க்கையில் பல புதிய விஷயங்களை பரிச்சயமாக்கிகொண்டு வருகிறது. அதில் ஒன்றுதான் ஆன்லைன் வகுப்புகள். கொரோனா பரவலை தடுக்க பள்ளி கல்லூரிகள் கிட்டதட்ட 4 நான்கு மாதங்களாக மூடிக்கிடக்கின்றன. பல தனியார் பள்ளிகள் இணையத்தில் மாணவர்களுக்குப் பாடம் நடத்தி வருகின்றன.

Presentational grey line

கொரோனா வைரஸ்: மூச்சுத் திணறும் இந்தியா

மூச்சுத் திணறும் இந்தியா

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவிலேயே கொரோனா வைரஸ் நோய்த்தொற்றால் மிகவும் பாதிக்கப்பட்ட மாநிலமான மகாராஷ்டிராவின் நாக்பூர் நகருக்கு தெற்கு 80 கிலோமீட்டர்கள் தொலைவில் இருக்கிறது சேவக்ரம் என்னும் அந்த கிராமம். இலவச மருத்துவம் பார்க்கப்படும் இந்த மருத்துவமனைக்கு ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கானோர் சிகிச்சைக்காக வருகின்றனர்.

Presentational grey line

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :