கோவிட் 19: கொரோனா வைரஸ் பரவியதிலிருந்து சீனா மேற்கொண்ட நடவடிக்கைகள் என்னென்ன? - TimeLine Story

பட மூலாதாரம், Getty Images
சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கியவுடனே இது குறித்த தகவலை சீனா முழுவதுமாக வெளிப்படுத்தியதா எனவும் அந்த நேரத்தில் சீனா என்ன செய்தது எனவும் அமெரிக்கா மற்றும் வேறு சில நாடுகள் கேள்வியெழுப்பியுள்ளன.
கொரோனா வைரஸை முதலில் கண்டறிந்ததிலிருந்து சீனா என்ன சொன்னது என்ன செய்தது என்பதன் கால வரைப்பட விளக்கம்:
டிசம்பர் 1: லன்செட் என்ற மருத்துவ சஞ்சிகையின் தகவல்படி, முதன் முதலில் கொரோனா வைரஸுக்கான அறிகுறிகள் கவனத்துக்கு வந்தது. ஆனால் வைரஸ் முதலில் நவம்பர் மாதமே தோன்றி விட்டது என பரவலாக நம்பப்படுகிறது.
டிசம்பர் 27: சார்ஸ் போன்ற ஒரு நோய் பற்றிய தகவலை ஹூபே மாகாணத்தில் உள்ள மருத்துவமனையின் மருத்துவர்கள் சீன அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.
ஆனால் இந்த நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பெருகிக்கொண்டிருந்தது.

பட மூலாதாரம், Getty Images
டிசம்பர் 30: வுஹானின் மருத்துவக் குழு காரணம் இல்லாமல் பலருக்கு நிமோனியா வருவதைக் கண்காணித்தனர். மேலும் இது போன்ற நோயாளிகள் ஏற்கனவே யாரெனும் இருந்தால் அவர்கள் குறித்த தகவல்களை அளிக்கக் கூறினர். வுஹான் மத்திய மருத்துவமனையில் உள்ள முக்கிய மருத்துவர்களில் ஒருவரான ஐ ஃபென் ஒரு நோயாளியின் மருத்துவ பரிசோதனை அறிக்கையைப் பார்த்து கொரோனா வைரஸ் என சந்தேகித்தார். அந்த அறிக்கையை அதே பகுதியில் இருக்கும் மற்றொரு மருத்துவருக்கு அனுப்பினார். அப்படி அது வுஹானின் மருத்துவ குழுவில் பகிரப்பட்டது.
பிறகு சீனாவின் சமூக வலைதளத்தில் மர்மமான முறையில் நிமோனியா ஒரு உயிர்க்கொல்லி வைரஸால் பரவுகிறது என்ற செய்தி பரவலானது.
டிசம்பர் 31: 27 நிமோனியா நோயாளிகளை விசாரிக்கின்றோம் என சீன தெரிவித்தது. மேலும் பாதிக்கப்பட்ட வுஹானுக்கு ஒரு மருத்துவ குழு சென்றிருக்கிறது என சீன அதிகாரிகள் கூறுகின்றனர். ஏழு பேர் தீவிர நிலையிலிருந்த போதும் மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்குப் பரவுவதாகத் தெரியவில்லை என அதிகாரிகள் கூறினர். பிறகு சீன அதிகாரிகள் உலக சுகாதார நிறுவனத்துக்குத் தகவல் அளித்து எச்சரித்தனர்.
ஜனவரி 1: வுஹானில் உள்ள ஒரு மருத்துவமனை சீன சமூக வலைதளமான வீ சாட்டில் மர்மமான நிமோனியாவுடன் போராடிக்கொண்டிருக்கிறோம் என பதிவிட்டிருந்தனர்.
மருத்துவர் ஐ ஃபென் வதந்தியைப் பரப்புகிறார் என அவர் வேலை செய்யும் மருத்துவமனையிலிருந்து அவரை வெளியே அனுப்பிவிட்டனர்.
இந்த சமயத்தில் உலக சுகாதார நிறுவனம் இந்த வைரஸ் பரவல் குறித்து எச்சரித்தது.
பிறகு சீன அதிகாரிகள் வைரஸுக்கு காரணமாகக் கருதப்பட்ட ஹுவனான் கடல் உணவு மொத்த வியாபார சந்தையை மூடினர்.

- கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி? - விரிவான அறிவியல் விளக்கம்
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா பரவல் தீவிரமானால் இந்தியாவால் சமாளிக்க முடியுமா?
- முறையாக கை கழுவுதல் எப்படி?
- கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்
- கொரோனா வைரஸ் அச்சங்களுக்கு நடுவில் உங்கள் மனநலத்தை பாதுகாப்பது எப்படி?
- கொரோனா வைரஸ் தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும்?

ஜனவரி 3: சீன சமூக வலைதளத்தில் வுஹானின் மருத்துவ அதிகாரிகள் வுஹான் மருத்துவமனை பணியாளர்களைப் பேச விடுவதில்லை என குற்றச்சாட்டு வந்துகொண்டிருந்தது.
(இந்த குற்றசாட்டு குறித்து விசாரிக்க முடியவில்லை. ஆனால் இணையத்தை கண்காணித்துக்கொண்டிருந்த சீன அதிகாரிகள் பல பதிவுகளை நீக்கினர்.)
வுஹான் அதிகாரிகள் முதன்முதலில் வைரஸ் எப்படிப் பரவ தொடங்கியது என விசாரித்துக் கொண்டிருக்கிறோம் என தெரிவித்தனர். அதே நேரம் மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு இந்த வைரஸ் பரவுவதில்லை என்றனர்.
ஜனவரி 7: சீனாவின் கம்யூனிச பொலிட் பீரோவில் இந்த வைரஸ் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் சீன அதிபர் ஷி ஜின்பிங் உட்பட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.
ஜனவரி 8: தொற்று பரவுவதைக் குறித்து விசாரிக்க இரண்டாம் குழு அனுப்பப்பட்டது.

பட மூலாதாரம், Getty Images
ஜனவரி 9: கொரோனா வைரஸின் மரபணு குறித்த சீனா பொதுவெளியில் பகிர்ந்தது. இந்த வைரஸுக்கும் சார், மெர்ஸ் வைரஸுக்கும் உள்ள தொடர்பை நிரூபித்தது. இந்த சமயத்தில் விஞ்ஞானிகள் இந்த வைரஸ் குறித்து ஆய்வு செய்ய முடிந்தது.
ஜனவரி 11-17: ஹூபே மாகாணத்தில் ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு நடந்தது. ஆனால் அப்போது வரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகவில்லை.
ஜனவரி 14: சீனாவில் நடந்த முதல் கட்ட விசாரணையில் மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு இந்த வைரஸ் பரவுவதற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என உலக சுகாதார நிறுவனம் ட்விட்டரில் பதிவிட்டிருந்தது.
ஆனால் உள்ளூர் மருத்துவமனைகள் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமானதால் இது குறித்த சந்தேகத்திலிருந்ததாக தகவல் இருந்தது.
ஜனவரி 15: வுஹானிலிருந்து அமெரிக்காவுக்கு சென்ற ஒருவர் கோவிட்-19 ஆல் பாதிக்கப்பட்டிருந்தார். அவர்தான் அமெரிக்காவில் பாதிக்கப்பட்டவர்களுள் முதல் நபர் ஆவார்.
ஜனவரி 20: சீனா தேசிய சுகாதாரத்துறை மனிதர்களிடமிருந்து இந்த வைரஸ் மனிதர்களுக்குப் பரவுகிறது என உறுதி செய்தனர்.
தங்கள் நாட்டிலும் இந்த வைரஸால் ஒருவர் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தென் கொரியா அறிவித்தது.
ஜனவரி 20-21: உலக சுகாதார நிறுவனம் வுஹானில் கள ஆய்வு செய்ய ஒரு குழுவை அனுப்பியது. மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்குப் பரவுவதற்கான ஆதாரம் இருந்தாலும் இது குறித்து விரிவான ஆய்வு தேவை என கூறி இருந்தது.
ஜனவரி 21: சீன அரசு நடத்தும் நாளிதழான பீப்புள்ஸ் டெய்லி, கொரோனா வைரஸ் குறித்தும் அதற்காக ஷி ஜின்பிங் என்ன செய்கிறார் என்பது குறித்தும் முதன்முதலில் செய்தி வெளியிட்டது.
அதுவரை பிற ஊடகங்கள் வைரஸ் குறித்த செய்திகளுக்கு முக்கியத்துவம் தவறாமல் சீன புத்தாண்டு குறித்து செய்தி வெளியிட்டு வந்தனர்.
பிறகு சீன அரசு ஊடகம் 291 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதி செய்தது.
இந்த வைரஸ் குறித்த தகவலை சீனா மூடி மறைத்தது என சர்வதேச சமூகம் அழுத்தம் தந்ததை அடுத்து, சீனாவின் சட்ட ஒழுங்கை கண்காணிக்கும் அமைப்பு, இந்த வைரஸ் குறித்த தகவலை யாரேனும் மூடி மறைத்தால், அவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள் எனக் கூறியது.
பிறகு சர்வதேச அளவில் இதை சுகாதாரத்திற்கான அவசர நிலை என பிரகடனப்படுத்த உலக சுகாதார நிறுவனம் கலந்தாலோசித்தது.

பட மூலாதாரம், Getty Images
ஜனவரி 23: வுஹான் நகரம் முற்றிலுமாக முடக்கப்பட்டது.
ஜனவரி 23-25: சீனாவில் இரண்டு புதிய மருத்துவமனைகள் கட்டப்பட்டன.
ஜனவரி 24: சீன அரசு வனவிலங்குகளின் இறைச்சியை விற்பனை செய்ய நாடு முழுவதும் தடை விதித்தது.
ஜனவரி 24-30: சீனா லூனார் புத்தாண்டைக் கொண்டாடியது. அதே நேரத்தில் மக்கள் நாடு முழுவதும் பயணம் செய்து கொண்டிருந்தனர்.
ஜனவரி 25: மற்ற நாடுகளுக்குப் பயணம் செய்பவர்கள் தங்கள் உடல் நிலை குறித்து தகவல் அளிக்கும்படி சீன அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.
ஜனவரி 28:உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் மருத்துவர் டெட்ரோஸ் மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோர் தொற்று குறித்தும் முதலில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கலந்தாலோசித்தனர்.
ஜனவரி 30: சீனாவுக்கு வெளியில் 82 பேர் பாதிக்கப்பட்டிருந்ததைத் தொடர்ந்து, உலக சுகாதார நிறுவனம் சர்வதேச அளவில் அவசர நிலை அறிவித்தது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












