கொரோனா வைரஸ் ஊரடங்கு: வெளிமாநில தொழிலாளர்களின் பயணச் செலவை ஏற்கிறது தமிழக அரசு

north indian migrant workers in tamil nadu

தமிழகத்தில் இருந்து சொந்த மாநிலத்துக்கு வெளிமாநிலத்தவர்களை அனுப்புவதற்கான செலவை சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் ஏற்காதபட்சத்தில் தமிழக அரசே ஏற்கும் என அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பிற மாநிலங்களில் தவித்தும் வரும் தொழிலாளா்களை சொந்த மாநிலங்களுக்கு அனுப்புவதற்கான விதிகளை மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த மாதம் 29ஆம் தேதி வெளியிட்டது.

இதன்படி, அனைத்து மாநில அரசுகள், மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகங்கள், இதற்கென நிலையான விதிமுறைகளை உருவாக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்தப் பணிகளை மேற்கொள்வதற்காக, தமிழக அரசு சார்பில் ஐஏஎஸ் அதிகாரி அதுல்ய மிஸ்ரா நியமிக்கப்பட்டார்.

அதோடு, ஒவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களோடு தொடர்பு கொண்டு தமிழகர்களை மீட்டு கொண்டு வரவும், தமிழகத்தில் உள்ள பிற மாநிலத்தவர்களை அவர்களது சொந்த மாநிலத்துக்கு அனுப்பி வைக்கவும் மாநில வாரியாக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.

Banner image reading 'more about coronavirus'
Banner

இந்நிலையில் வெளி மாநிலத்தவர்களை அவர்களது சொந்த மாநிலத்துக்கு அனுப்புவதற்கான வழிகாட்டுமுறைகளை பிறப்பித்ததோடு, அதுல்ய மிஸ்ராவுடன் இணைந்து பணியாற்ற மாநில அளவில் ஒரு குழுவை தமிழக அரசு அமைத்தது.

கொரோனா வைரஸ்

அதன்படி, ரயில் மூலம் அனுப்பப்படும் வெளி மாநிலத்தவர்களின் செலவை சம்பந்தப்பட்ட மாநிலம் ஏற்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது அந்த சரத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் செலவை ஏற்க முடியாதபட்சத்தில், தமிழக அரசே ஏற்கும் எனவும், இதற்கான நிதி மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து எடுத்து கொள்ளப்படும் என திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: