கொரோனா வைரஸால் அச்சம்: அமெரிக்காவில் சிறை கைதிகள் விடுதலை மற்றும் பிற செய்திகள்

கொரோனா

பட மூலாதாரம், Getty Images

அமெரிக்காவின் சிறைச்சாலைகளில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியதை அடுத்து கைதிகளை விடுதலை செய்யும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

"சிறு குற்றங்கள் செய்த கைதிகளை" நியூயார்க் விடுவிப்பதாக அந்த நகரத்தின் மேயர் தெரிவித்துள்ளார். இதற்கு முன்பு, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் மற்றும் கிளைவ்லேண்ட் உள்ளிட்ட நகரங்களில் உள்ள சிறைச்சாலைகளிலிருந்து நூற்றுக்கணக்கான கைதிகள் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.

முன்னதாக, சிறை கைதிகளுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படுவதுடன், அது மற்றவர்களுக்கும் பரவும் அபாயம் உள்ளதாக வழக்கறிஞர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

அமெரிக்காவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பத்தாயிரத்தை நெருங்கி வரும் வேளையில், இந்த நோய்த்தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 150ஐ தாண்டியுள்ளது.

இதற்கு முன்னதாக, கொரோனா வைரஸால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஒன்றான இரான், இந்த நோய்த்தொற்று அச்சத்தின் காரணமாக சிறை கைதிகளை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Presentational grey line

22-ம் தேதி இந்தியாவில் மக்கள் ஊரடங்கு

கொரோனா

பட மூலாதாரம், Getty Images

கொரோனா அச்சுறுத்தலை எதிர்கொள்ள மார்ச் 22-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இந்தியாவில் மக்கள் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார் பிரதமர் நரேந்திர மோதி.

அன்று காலை காலை 7 முதல் இரவு 9 வரை இது அமலில் இருக்கும் என்றும் இதனை மக்கள் ஏற்று நடக்கவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Presentational grey line

தமிழ்நாட்டில் பெரிய கோவில்கள், பெரிய கடைகள், சந்தைகளை மூட உத்தரவு

கொரோனா

பட மூலாதாரம், Getty Images

மதுரை மீனாட்சியம்மன் கோவில், திருவரங்கம், ராமேஸ்வரம் கோவில் உள்ளிட்ட பெரிய கோவில்களை மூடுவதற்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. ஒருங்கிணைந்த குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ள பெரிய ஜவுளி, நகைக் கடைகளை மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Presentational grey line

கொரோனா வைரஸ் தொற்றை தடுக்குமா கோமியம்?

கொரோனா

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவில் கொரோனா தொற்று குறித்து பல விழிப்புணர்வு செய்திகள் பிரசாரம் செய்யப்பட்டு வந்தாலும், ஒரு பக்கம் பல தவறான செய்திகளும் வலம் வந்து கொண்டிருக்கின்றன.

அதில் சிலவற்றை பிபிசியின் உண்மை பரிசோதிக்கும் குழு சரி பார்த்தது.

Presentational grey line

இந்தியர்களுக்கு வங்கிகளின் மீது நம்பிக்கை உள்ளதா?

கொரோனா

பட மூலாதாரம், Getty Images

என் கணவரின் 8வது நினைவு நாளான்று நான் அலுவலக விடுப்பில் இருந்தேன். அப்போது தான் யெஸ் பேங்க் குறித்த செய்தி வெளியானது. இந்த வங்கி பிரச்சனையை எப்படி எதிர்கொள்வதென்றே தெரியவில்லை என்கிறார் ஜலஜா சந்தீப் மெஹ்தா.

Presentational grey line

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: