இந்தியர்களுக்கு வங்கிகளின் மீது நம்பிக்கை உள்ளதா ?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், அக்ரித்தி தாப்பர்
- பதவி, பிபிசி செய்தியாளர், மும்பை
என் கணவரின் 8வது நினைவு நாளான்று நான் அலுவலக விடுப்பில் இருந்தேன். அப்போது தான் யெஸ் பேங்க் குறித்த செய்தி வெளியானது. இந்த வங்கி பிரச்சனையை எப்படி எதிர்கொள்வதென்றே தெரியவில்லை என்கிறார் ஜலஜா சந்தீப் மெஹ்தா.
ஃபோர்டிஸ் மருத்துவமனையில் வர்த்தகத்துறையில் பணிபுரியும் 50 வயதான ஜலஜா சந்தீப் மிகவும் கவலையோடு காணப்படுகிறார். தனது யெஸ் பேங்க் கணக்கில் மாத ஊதியம் கிரெடிட் ஆகும், மேலும் தனது வாழ்நாள் முழுவதும் சம்பாதித்த பணத்தை பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிர வங்கியில் சேகரித்து வைத்ததாக ஜலஜா சந்தீப் கூறுகிறார்.
தனது வயதான தாய் மற்றும் இரண்டு குழந்தைகளையும் பார்த்துக்கொள்ள தனது ஊதியம் மட்டுமே உதவியது, ஆனால் தற்போது நண்பர்களிடம் பணம் பெற்று அதில் தான் குடும்பத்தை கவனித்துக்கொள்வதாகவே கூறுகிறார்.
இந்த மாத தொடக்கத்தில், இந்தியாவின் மத்திய வங்கி நாட்டின் 5வது பெரிய தனியார் வங்கியான யெஸ் வங்கியின் கட்டுப்பாட்டை கைப்பற்றி கணக்கு வைத்திருப்பவர்கள் அணைவரும் தங்கள் பணத்தை திரும்ப எடுக்க வரம்புகள் விதிக்கப்பட்டன.
ஒரு காலத்தில் இந்திய வங்கிகளில் மிக முக்கியமான வளர்ச்சி அடையும் வங்கியாக கருதப்பட்ட யெஸ் பேங்க், மோசமாக கடன் சுமையில் சிக்கிக்கொண்டது. வங்கியின் இணை நிறுவனர் மற்றும் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியான ராணா கபூர் பணமோசடி மற்றும் ஊழல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
ஏற்கனவே ஓர் இந்திய வங்கி, பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிர வங்கிகள் 600மில்லியன் டாலர் பணமோசடி செய்த குற்றச்சாட்டிற்காக விசாரணையை எதிர்கொண்டு வருகின்றனர். இதனால் மில்லியன் கணக்கான பயன்பாட்டாளர்கள் தங்கள் வங்கி கணக்கை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வங்கி வாடிக்கையாளர்கள் பலர் இந்த இரண்டு வங்கிகளின் முன்பும் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கள் பணத்தை திரும்பி எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
அடுத்தடுத்து ஆறு மாதங்களில் இந்தியாவின் இரண்டு வங்கிகள் தங்களின் செல்வாக்கை இழக்க நேரிட்ட இந்த சூழலில் மக்களுக்கு வங்கிகளின் மீது நம்பிக்கை ஏற்படுகிறதா ?
இந்த கேள்வியை ஜலஜா சந்திப்பிடம் கேட்டபோது, ''இப்போது வேறொரு வங்கி கணக்கிற்கு பணத்தை மாற்றும் யோசனையை என்னால் மேற்கொள்ள முடியாது. ஏனெனில் என்னிடம் போதுமான பணம் இல்லை. இருப்பினும் கையில் இருக்கும் சிறிய தொகையை கூட தேசிய வங்கியில் சேமிக்க முயற்சிக்கிறேன். பணத்தை வங்கியில் சேமிப்பதே சிறந்த வழி என்ற எண்ணத்தில் இப்போதும் மாற்றம் இல்லை, ஆனால் சிறிய பணத்தை வங்கியில் வைப்பதும் சிறந்த யோசனை இல்லை. எனவே சிறிய தொகையை எப்போதும் வீட்டில் வைப்பது நல்லது என கருதுகிறேன்.''

பட மூலாதாரம், Getty Images
மும்பையில் உள்ள பட்டய கணக்காளர் ஷுபம் அகர்வால் தனக்கு பலர் தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்து, பணத்தை பாதுகாப்பாக வைப்பது குறித்து ஆலோசனை கேட்டதாக கூறினார். வங்கிகளை நம்புவது தவிர வேறென்ன வழி உள்ளது என்ற கேள்வியை சமீப காலமாக பலர் தன்னிடம் கேட்டதாக ஷுபம் கூறினார். பொதுவாக மக்கள் தங்கள் வீடுகளுக்கு அருகில் உள்ள வங்கியை தேர்வு செய்து, அங்கு தான் வங்கி கணக்கை துவங்குவார்கள்.
ஆனால் தற்போது வங்கிகள் இது வரை செயல்பட்ட விதத்தை விசாரித்து வங்கியின் நற்பெயரை கருத்தில் கொண்டு மக்கள் தங்கள் வங்கி கணக்கை துவங்குவதாக ஷுபம் தெரிவித்தார். மேலும் தங்களின் ஒரே வங்கி கணக்கில் மொத்த பணத்தையும் சேமிக்காமல், இரண்டு வங்கி கணக்குகளை ஆரம்பித்து பணத்தை இரண்டு இடத்தில் பிரித்து சேமிக்குமாறு தனது வாடிக்கையாளர்களுக்கு ஆலோசனை வழங்கியதாக கூறுகிறார்.
இது குறித்து டெல்லியின் ஊடகவியலாளர் தாவுத் ஆரிஃப் கூறுகையில் வங்கி கணக்கை ஆரம்பிக்க நம்மிடம் பல சான்றிதழ்கள் கேட்கப்படுகிறது. இருந்தாலும் எப்படி தவறுகள் நடக்கிறது? சிலரை மட்டுமே தேர்வு செய்து வங்கி கடன் வழங்கிய வங்கிகளும் ஏன் கடனை வசூலிக்க முடியாமல் திணறுகின்றனர். ? வாடிக்கையாளர்களுக்கும் வங்கி நிறுவனங்களுக்கும் இடையில் நம்பிக்கையின்மை நிலவுகிறது.

பட மூலாதாரம், Getty Images
இதே போன்ற கருத்தை தான் நிதிக்கா கக்கர் முன்வைக்கிறார். பி.எம்.சி மற்றும் யெஸ் பேங்க் வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளால் இந்தியாவின் நடுத்தர மக்களுக்கு வங்கிகளின் மீது இருந்த பாதுகாப்பு உணர்வு திடீரென குறைந்துவிட்டது. வங்கி நிறுவனங்கள் பெரும்பாலும் தவறானவை என்ற கருத்து மக்கள் மத்தியில் நிலவுகிறது. பல கேள்விகள் வாடிக்கையாளர்களிடம் உள்ளது, அதில் மிக பெரிய கேள்வி வங்கிகள் நஷ்டமடைந்தால், நாங்கள் என்ன செய்வது ?
கொல்கத்தாவில் மென் பொறியாளராக பணிபுரியும் சுமன் தார், வங்கிகள் மீதான மக்களின் நம்பிக்கை குறையவில்லை என நம்புகிறார். வங்கிகளை குறை சொல்லி பயனும் இல்லை என்கிறார். கார்பொரேட்களுக்கு கடன் வழங்குவதில் கடுமையான விதிமுறைகளை அரசு விதிக்க வேண்டும், இல்லாவிட்டால் தவறுகள் நடப்பதை தவிர்க்க முடியாது என சுமன் விளக்கம் அளிக்கிறார்.
போலி செய்திகள் பரவும் இந்த காலகட்டத்தில், பல வங்கிகள் கடனில் இருப்பதாக வாட்ஸ் அப்பில் செய்திகள் பரவுகிறது. ஆனால் மும்பையின் மூத்த வர்த்தக பொருளாதார நிபுணர் பிருந்தா ஜகிர்தர், வங்கிகள் குறித்து கவலை வேண்டாம் என அறிவுறுத்துகிறார். இந்தியாவின் வங்கி சேவைகள் மிகவும் பாதுகாப்பாகவும் வெளிப்படை தன்மையுடனும் செயல்படுவதாக கூறுகிறார். வங்கி துறை மீதான அடிப்படை நுகர்வோர் நம்பிக்கையை அசைக்க முடியாது. வங்கியில் உள்ள பணத்தை எடுத்து சுலபமாக வேறெங்கும் பாதுகாக்க முடியாது. வங்கிகள் அல்லாத வேறெந்த நிறுவனங்கள் மீதும் நிச்சயமற்ற தன்மை நிலவுவதாகவே மக்கள் கருதுகின்றனர். மேலும் பங்கு சந்தை மற்றும் ரியல் எஸ்டேட் துறைகள் சரிந்துள்ளதை கவனியுங்கள் என்று ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் முன்னாள் பொது மேலாளர் குறிப்பிடுகிறார்.

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவில் வங்கிகள் சரிவை சந்திப்பது ஒன்றும் புதிதல்ல, மோசமான கார்ப்பரேட் நிர்வாகம் மற்றும் வங்கிக்குள்ளேயே மேற்பார்வை குழுக்கள் சரியாக செயல்படாவிட்டால் இத்தகைய சூழ்நிலைகள் ஏற்படும் என பிருந்தா கூறுகிறார். இந்த பிரச்சனைகளை வங்கியில் உள்ள தணிக்கையாளர்கள் தான் சரி செய்ய வேண்டும். விதிமுறைகளும் கொள்கைகளும் ஒரு குறிப்பிட்ட கட்டம் வரை மட்டுமே உதவும். இந்திய ரிசர்வ் வங்கி யெஸ் பேங்க்கை கையாண்ட விதம் பாராட்டுதலுக்கு உரியது என பிருந்தா கூறுகிறார்.
முதன்முறையாக, அரசாங்கமும் நாட்டின் சில பெரிய நிதி நிறுவனங்களும் ஒன்றிணைந்து நெருக்கடியால் பாதிக்கப்பட்ட யெஸ் வங்கியை காப்பாற்ற முயற்சிக்கிறது. இந்த முயற்சியில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா பெரும் பங்கு வகிக்கிறது. யெஸ் வங்கியின் உடனடி தேவைகளை பூர்த்திசெய்ய எஸ்.பி.ஐ வங்கி முதலீடுகளை செய்துள்ளது.
நுகர்வோருக்கு உறுதியளிக்கும் விதமாக, இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்த தாஸ் கூறுகையில் "யெஸ் பேங்கின் வாடிக்கையாளர்கள் அவர்களின் பணம் முற்றிலும் பாதுகாப்பாக உள்ளது, கவலைப்பட ஒன்றுமில்லை என்று தெரிவித்தார்.
பணத்தை வங்கியில் இருந்து எடுக்க மக்கள் அலைமோத வேண்டாம். இந்திய வரலாற்றில் முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை இழந்தது இல்லை. தற்போதைய திட்டம் முதலீட்டாளர்களின ஆர்வத்தையும் ஊக்குவிக்கும் என்று சக்திகாந்த தாஸ் குறிப்பிட்டார்.
ரிசர்வ் வங்கி இந்திய மாநிலங்களுக்கு எழுதிய கடிதத்தில், தனியார் வங்கிகளை ஒழுங்குபடுத்துவதற்கும் மேற்பார்வையிடுவதற்கும் மாநிலங்களுக்கு உள்ள அதிகாரங்களை மீண்டும் வலியுறுத்துகிறோம் என குறிப்பிட்டது.
கடந்த செப்டம்பர் மாதம் முதல் யெஸ் பேங்கில் முதலீட்டுகள் 34 சதவீதமாக குறைந்துள்ளது. ஆனால் யெஸ் வங்கி தனது சேவைகளை மீண்டும் தொடங்கினாலும், வழக்கம் போல வாடிக்கையாளர்கள் முதலீடு செய்வார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. நீண்ட கால முதலீடுகளை பெற யெஸ் வங்கி தனது வாடிக்கையாளர்களின் நம்பிகையை பெற வேண்டும் என வர்த்தகர்கள் கூறுகின்றனர்.
பி.எம்.சி வங்கியின் நிலை என்ன என்பதை உறுதியாக கூற முடியவில்லை. யெஸ் வங்கிக்கு அரசாங்கத்தால் உதவ முடியுமானால், பி.எம்.சி வங்கியை ஏன் காப்பாற்ற முடியவில்லை ? நான் கடின உழைப்பால் சம்பாதித்த பணம். நான் சம்பாதித்த பணத்தை தானே திரும்ப கேட்கிறேன், என்கிறார் ஜலஜா மெஹ்தா.
பிற செய்திகள்:
- கொரோனா வைரஸ்: திணறும் இத்தாலி, பிரிட்டன், பிரான்ஸ், சீனாவில் என்ன நிலை ? - LIVE Updates
- கொரோனா வைரஸ்: பாதிப்பு எண்ணிக்கை இந்தியாவில் 168ஆக உயர்வு; தமிழகத்தில் நிலவரம் என்ன?
- மலேசியாவில் தவித்தவர்கள் இந்தியா வந்தது எப்படி? - அனுபவங்களை விவரித்த மருத்துவ மாணவர்கள்
- கொரோனா வைரஸ்: தமிழகத்தில் சோதனைகள் மறுக்கப்படுகிறதா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












