இத்தாலி 78 ஆயிரம் கோடி ரூபாயை மிச்சப்படுத்த என்ன செய்திருக்கிறது தெரியுமா? மற்றும் பிற செய்திகள்

பட மூலாதாரம், Getty Images
'இத்தாலி எடுத்த முடிவு'
கணிசமான அளவுக்குச் செலவைக் குறைக்க இரு அவைகளிலும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைக்க முடிவு செய்திருக்கிறது இத்தாலி. இதற்குச் சாதகமாக அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர்.

பட மூலாதாரம், EPA
இத்தாலி கீழ் அவையில் இப்போது 600 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இந்த எண்ணிக்கை 400ஆகக் குறைகிறது. அதுபோல செனட்டர்கள் எண்ணிக்கை 315லிருந்து 200ஆகக் குறையும். இதனை தம் தேர்தல் வாக்குறுதியாகக் கூறி இருந்தது ஃபைவ் ஸ்டார் இயக்கம். இது இப்போது ஆளுங்கட்சி கூட்டணியில் முக்கிய அங்கன் வகிக்கிறது. இதன் மூலமாக அடுத்த பத்து ஆண்டுகளில் ஒரு பில்லியன் ஈரோ பணத்தை மிச்சப்படுத்த முடியும் என்கிறது அக்கட்சி.
ஆனால், இது ஜனநாயகத்தைப் பலவீனப்படுத்தும் செயல் என்கிறார்கள் விமர்சகர்கள்.

'ரஃபால் போர் விமான டயரில் எலுமிச்சை பழம் வைத்து பூஜை'

பட மூலாதாரம், ANI
இந்தியாவிடம் அதிகாரபூர்வமாக ஒப்படைக்கப்பட்ட ரஃபால் போர் விமானத்திற்கு இன்று 'ஷாஸ்த்ரா பூஜை' செய்தார் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங். பிரான்ஸிடம் இருந்து இந்தியா வாங்குவதாக ஒப்புக்கொண்ட 36 ரஃபால் போர் விமானங்கள் இன்று இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டன. அந்த விமானங்களின் டயர்களுக்கு அடியில் எலுமிச்சை பழங்கள் வைத்து பூஜைகள் செய்யப்பட்டன.

வன்னியர் இட ஒதுக்கீடு: திமுக - பாமக மோதல் - நடப்பது என்ன?

பட மூலாதாரம், M.K.STALIN/FACEBOOK
அடுத்து வரும் சட்டமன்றப் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றால், வன்னியர் இட ஒதுக்கீடு கோரி நடந்த போராட்டத்தில் உயிர் நீத்தவர்களுக்கும், முன்னாள் அமைச்சர் ஏ. கோவிந்தசாமிக்கும் மணி மண்டபம் அமைக்கப்படும் என்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு அளிக்கப்படும் என்றும் தி.மு.க. அறிவித்ததையடுத்து பா.ம.கவும் தி.மு.கவும் அறிக்கை யுத்தத்தில் இறங்கியுள்ளன.
விரிவாகப் படிக்க:வன்னியர் இட ஒதுக்கீடு: திமுக - பாமக மோதல் - நடப்பது என்ன?

காற்றிலிருந்து விமான எரிபொருள் தயாரிக்க ஏற்பாடு

பட மூலாதாரம், CLIMEWORKS
"இதுதான் விமான போக்குவரத்தின் எதிர்காலம்" என்று கூறுகிறார் காற்றிலுள்ள கரியமில வாயுவை ஜெட் ரக விமானங்களின் எரிபொருளாக மாற்றும் திட்டத்தை முன்னெடுத்துள்ள நிறுவனத்தை சேர்ந்த ஒஸ்கர் மீஜெரிங்க்.உலகின் சில விமான நிலையங்களின் நிர்வாகங்களுடன் சேர்ந்து, கார்பன்-டை-ஆக்ஸைடு எனப்படும் கரியமில வாயுவை உறிஞ்சி, உலகின் முதல் வர்த்தக ரீதியிலான ஜெட் விமான எரிபொருளை தயாரிப்பதற்கு இவரது நிறுவனம் முயன்று வருகிறது.
விரிவாகப் படிக்க:காற்றிலிருந்து விமான எரிபொருள் தயாரிக்க ஏற்பாடு: கனவுத் திட்டமா? கற்பனைக் கோட்டையா?

"கும்பல் கொலை நாட்டின் பெயரை கெடுக்கப் பயன்படுத்தப்படுகிறது"

பட மூலாதாரம், Getty Images
'கும்பல்கொலை' என்பது இந்தியாவுக்கு அன்னியமான ஒன்று என்று தெரிவித்துள்ளார் ஆர்.எஸ்.எஸ். எனப்படும் ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங் தலைவர் மோகன் பாகவத்.தசராவை ஒட்டி ஆர்.எஸ்.எஸ். தலைமையிடம் அமைந்துள்ள நாக்பூரில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பேசிய மோகன் பாகவத், சில வன்முறை சம்பவங்களை கும்பல் கொலை என்று கூறி இந்தியாவின் பெயரையும், இந்து சமூகத்தின் பெயரையும் கெடுக்க பார்க்கின்றனர்.

Rafale: ஓம் என்று எழுதி ரஃபேலுக்கு ஆயுத பூஜை செய்த இந்திய அமைச்சர் | Rajnath singh shashtra pooja
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












