"சீனாவின் நியாயமற்ற வணிக கொள்கைகளுக்கு எதிராகப் போராட்டம்": டிரம்ப் பேச்சு

பட மூலாதாரம், Drew Angerer/Getty images
இன்று செவ்வாய்க்கிழமை ஐ.நாவில் உரையாற்றிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், எதிர்காலம் உலகமயவாதிகளுக்குமானது அல்ல என்றும், எதிர்காலம் தேச பக்தர்களுக்கானது என்றும் தெரிவித்துள்ளார்.
செளதி அரேபியாவில் சமீபத்தில் எண்ணெய் நிறுவனத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலால் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றங்கள் நிலவி வரும் சூழலில் டிரம்ப் இன்று ஐ.நாவில் உரையாற்றியுள்ளார்.
டிரம்பின் இந்த உரை சுமார் 40 நிமிடங்கள் நீடித்தது.
அதிபர் டிரம்பின் அமெரிக்க மற்றும் உலக குடியேற்ற பாதுகாப்புவாதத்தை விமர்சிக்கின்ற மனித உரிமைகள் குழுக்கள் மற்றும் குடியேற்றத்தை அனுமதிக்க அழைப்புவிடுப்போருக்கு எதிரான நிலைப்பாடு என்றுதான் எடுத்துக்கொள்ள முடியும்.
தங்களின் எல்லைகளை மூடிவைக்க எல்லா நாடுகளுக்கும் உரிமை உள்ளது என்றும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
சீனா கொண்டிருக்கும் நியாயமற்ற வணிக கொள்கைகளுக்கு எதிராக போராடி வருவதாக தெரிவிததுள்ள அதிபர் டிரம்ப், சீனாவோடு ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்த முயல்வதாக கூறியுள்ளார்.
எந்தவொரு நாட்டுடனும் மோதலை உருவாக்க அமெரிக்கா விரும்பவில்லை என்று டிரம்ப் கூறினார். எல்லா நாடுகளும் ஆற்ற வேண்டிய கடமை உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
அமெரிக்காவுக்கு சாவு என்று இரானில் முழக்கம் எழுப்பப்பட்டதாக குற்றஞ்சாட்டிய டிரம்ப், செமிட்டிக் எதிர்ப்பு மனப்பான்மை இரானில் தூண்டப்படுவதை அமெரிக்கா பொறுத்துக்கொள்ளாது என்றார்.
பிற நாடுகளை அச்சுறுத்துவதை இரான் நிறுத்திவிட்டு, மக்களை முதன்மைப்படுத்தி செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
வடகொரிய தலைவர் கிம் ஜாங்-உன்னிடம் வடகொரியா அணு ஆயுதங்கள் இல்லாமல் ஆக வேண்டும் என்று தெரிவித்துள்ளதாக அவர் கூறினார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












