உதிரி பாகங்களை கொண்டு மாணவர்கள் உருவாக்கிய விமானம் மற்றும் பிற செய்திகள்

தென்னாப்பிரிக்காவில் 20 பதின்வயது மாணவர்கள் உருவாக்கிய விமானம் தனது முதல் பயணத்தின் முதல் நிறுத்தத்தை அடைந்துள்ளது.
தென்னாப்பிரிக்காவின் கேப் டவுனில் இருந்து எகிப்தின் கெய்ரோ நகரம் வரையிலான சுமார் 12,000 கிலோமீட்டர் தொலைவை அடைய ஆறு வாரங்கள் ஆகும்.
ஆயிரக்கணக்கான விமானம் தயாரிப்பதற்கான உதிரி பாகங்களை இணைத்து 20 பதின்வயது மாணவர்கள் நான்கு பேர் அமரக்கூடிய ஸ்லிங்-4 விமானத்தை கட்டமைத்தனர்.
நீங்கள் நினைத்தால் எதையும் செய்ய முடியும் என்று ஆப்பிரிக்காவுக்கு உணர்த்தவே இந்த முயற்சி என்று இதன் 17 வயது பெண் விமானி மேகன் வெர்னர் கூறியுள்ளார்.
நாங்கள் செய்ததை என்னால் நம்ப இயலவில்லை. இந்த விமானம் என் குழந்தையை போன்றது என்கிறார் இதை உருவாக்கிய குழுவில் இருந்த 15 வயது மாணவி ஆக்நஸ் சீமெலா.

இந்திய அணி வெற்றி

பட மூலாதாரம், BCCI/TWITTER
உலகக் கோப்பை வரலாற்றில் இதுவரை இரு அணிகளும் 7 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இந்த ஆறிலும் இந்திய அணியே வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்திவருகிறது
விரிவாகப் படிக்க: இந்தியா Vs பாகிஸ்தான்: 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்தியா

அமெரிக்காவுக்கு இந்தியா பதிலடி

பட மூலாதாரம், Getty Images
அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதியாகும் 28 பொருட்களுக்கு, நேற்று (ஞாயிற்றுகிழமை) முதல் அதிக வரி விதிக்கப்படும் என்று இந்தியா அறிவித்துள்ளது.
எஃகு மற்றும் அலுமினியம் உள்ளிட்ட இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு அதிக வரிகளில் இருந்து விலக்கு அளிக்க அமெரிக்கா மறுத்ததைத் தொடர்ந்து இந்தியா இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.

'பெளத்த சின்னம் பொறித்த ஆடை'

பட மூலாதாரம், Getty Images
தான் அணிந்திருந்த ஆடையொன்றில் அச்சிடப்பட்டிருந்த வடிவத்தைக் காரணம் காட்டி, தன்னை போலீஸார் கைது செய்து, தடுத்து வைத்திருந்தமைக்கு எதிராக, இலங்கை மத்திய மாகாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் வழக்கு ஒன்றினை தாக்கல் செய்துள்ளார்.
விரிவாகப் படிக்க: 'பெளத்த சின்னம் பொறித்த ஆடை' - நீதிமன்றத்தை நாடும் இலங்கை பெண்

வேகமாக அழிந்து வரும் தாவரங்கள்

பட மூலாதாரம், REBECCA CAIRN WICKS
கடந்த 250 ஆண்டுகளில் காடுகளில் இருந்த சுமார் 600 தாவர இனங்கள் அழிந்து போயிருக்கின்றன என்று விரிவான ஒரு ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.
இந்த எண்ணிக்கை உண்மையிலேயே அழிந்து போன இனங்களின் எண்ணிக்கையே தவிர, உத்தேச மதிப்பீட்டு அடிப்படையிலானது அல்ல. பறவைகள், பாலூட்டிகள் மற்றும் நீர் நில வாழ் உயிரினங்களில் ஒட்டுமொத்தமாக அழிந்து போன எண்ணிக்கையைவிட இது இரு மடங்கு அதிகம்.
விரிவாகப் படிக்க: வேகமாக அழிந்து வரும் தாவரங்கள் - எச்சரிப்பது என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












