இந்தியா Vs பாகிஸ்தான்: 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்தியா

உலகக் கோப்பை வரலாற்றில் இதுவரை இரு அணிகளும் 6 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இந்த ஆறு போட்டிகளிலும் இந்திய அணியே வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்திவருகிறது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. இணைந்திருந்ததற்கு நன்றி!

    இந்தியா பாகிஸ்தான் உலகக் கோப்பை போட்டி நேரலையில் பிபிசி தமிழுடன் இணைந்திருந்ததற்கு நன்றி. இரவு வணக்கம்!

  2. , ஏழாவது முறையாக பாகிஸ்தானை தோற்கடித்த இந்தியா

    உலகக் கோப்பை வரலாற்றில் இதற்கு முன்னதாக பாகிஸ்தானுடன் மோதிய ஆறு போட்டிகளுடன், இன்றும் ஏழாவது முறையாக இந்தியாவே வெற்றி பெற்றுள்ளது.

  3. இந்தியா வெற்றி - சில அழகிய தருணங்கள்

    அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்திய ஹார்திக் பாண்டியா

    பட மூலாதாரம், BCCI/TWITTER

    படக்குறிப்பு, அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்திய ஹார்திக் பாண்டியா
    தனது முதல் உலகக் கோப்பை போட்டியில் முதல் பந்தில் தனது முதல் விக்கெட்டை வீழ்த்திய விஜய் சங்கர்

    பட மூலாதாரம், BCCI/TWITTER

    படக்குறிப்பு, தனது முதல் உலகக் கோப்பை போட்டியில் முதல் பந்தில் தனது முதல் விக்கெட்டை வீழ்த்திய விஜய் சங்கர்
    உலகக் கோப்பை 2019 : தனது இரண்டாவது சதத்தை பதிவு செய்த ரோகித் ஷர்மா

    பட மூலாதாரம், BCCI/TWITTER

    படக்குறிப்பு, உலகக் கோப்பை 2019 : தனது இரண்டாவது சதத்தை பதிவு செய்த ரோகித் ஷர்மா
    அரை சதம் அடித்தார் கே.எல் ராகுல்

    பட மூலாதாரம், BCCI/TWITTER

    படக்குறிப்பு, அரை சதம் அடித்தார் கே.எல் ராகுல்
    அரை சதத்தை கடந்த விராட் கோலி

    பட மூலாதாரம், BCCI/TWITTER

    படக்குறிப்பு, அரை சதத்தை கடந்த விராட் கோலி
  4. வெற்றி பெற்றது இந்தியா

    89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்தியா (DLS). இரண்டாவது இன்னிங்ஸ் மழை காரணமாக 40 ஓவர்களாக குறைக்கப்படட்து

    இந்தியா

    பட மூலாதாரம், Lancashire Cricket / Twitter

  5. மீண்டும் 11:40 மணிக்கு தொடங்குகிறது ஆட்டம்; 40 ஓவர்களாக குறைப்பு

    மழை காரணமாக நிறுத்தப்பட்ட போட்டி, இந்திய நேரப்படி மீண்டும் 11:40 மணிக்கு தொடங்குகிறது. 40 ஓவர்களாக இந்த ஆட்டம் குறைக்கப்பட்டுள்ளது.

    30 பந்துகளில் பாகிஸ்தான் அணி, 136 ரன்கள் எடுக்க வேண்டும்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  6. மீண்டும் மழை: நின்றது ஆட்டம்

    35 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 166 ரன்களை பாகிஸ்தான் குவித்துள்ளது. இந்நிலையில் மீண்டும் மழையால் ஆட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  7. விஜய் சங்கர் பந்தில் அவுட் ஆன கேப்டன் சர்ஃபராஸ்

    விஜய் சங்கர் பந்துவீச்சில் ஸ்டம்ப் அவுட் ஆனார் பாகிஸ்தான் அணியில் கேப்டன் சர்ஃபராஸ் அஹமத்.

    விஜய் சங்கரின் முதல் உலகக் கோப்பை போட்டி இது. புவனேஷ்வர் குமார் காயமடைந்ததை அடுத்து பந்து வீச்சுக்காக போலி விஜய் சங்கரை தேர்வு செய்தார்.

    தனது முதல் பந்தில் முதல் விக்கெட் எடுத்த விஜய், தற்போது இரண்டாவது விக்கெட்டை எடுத்துள்ளார்.

  8. 30 ஓவர்கள் முடிவில் 140 - 5

    30 ஓவர்கள் முடிவில் ஐந்து விக்கெட்டுகள் இழப்பிற்கு பாகிஸ்தான் அணி 140 ரன்களை எடுத்துள்ளது.

    பாகிஸ்தான்

    பட மூலாதாரம், Pakistan Cricket/Twitter

  9. அடுத்தடுத்து விக்கெட் வீழ்ச்சி

    ஒரே ஓவரில் அடுத்தடுத்த பந்துகளில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார் ஹார்திக் பாண்டியா.

    மொஹமத் ஹஃபீஸ் அவுட்டானதை தொடர்ந்து ஷோயப் மாலிக்கும் அவுட்டானார்.

    பாண்டியா

    பட மூலாதாரம், BCCI/TWITTER

  10. பாண்டியா பந்து வீச்சில் அவுட்டான ஹஃபீஸ்

    ஹார்திக் பாண்டியா பந்துவீச்சில் விஜய் சங்கர் கேட்ச் பிடிக்க மொஹமத் ஹஃபீஸ் அவுட் ஆனார்.

  11. விக்கெட் வேட்டையில் குல்தீப்

    குல்தீப் பந்து வீச்சில் சாஹல் கேட்ச் பிடிக்க ஃபகர் சமான் அவுட் ஆனார்.

    கடந்த 24ஆவது ஓவரில் பாபரை அவுட் ஆக்கிய குல்தீப், தொடர்ந்து சமானையும் அவுட் ஆக்கினார்.

  12. இரண்டாவது விக்கெட்டை வீழ்த்தினார் குல்தீப் யாதவ்

    குல்தீப் யாதவ் பந்து வீச்சில் போல்ட் ஆனார் பாபர் அசாம்.

    57 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 48 ரன்கள் எடுத்தார் பாபர்.

    குல்தீப்

    பட மூலாதாரம், BCCI / TWITTER

  13. அரை சதம் அடித்தார் ஃபகர் சமான்

    60 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸருடன் அரை சதம் அடித்தார் ஃபகர் சமான்

    சமான்

    பட மூலாதாரம், Pakistan Cricket/Twitter

  14. 20 ஓவர்கள் முடிவில் 87 - 1

    20 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 87 ரன்கள் எடுத்துள்ளது பாகிஸ்தான் அணி. ஃபகர் சமான் மற்றும் பாபர் கூட்டணி நிதானமாக விளையாடி வருகிறது.

    பாபர்

    பட மூலாதாரம், PAKISTAN CRICKET / TWITTER

  15. 13 ஓவர்கள் முடிவில் 50 ரன்கள்

    பாகிஸ்தான் அணி 13 ஓவர்கள் முடிவில் 50 ரன்களை கடந்துள்ளது.

  16. 10 ஓவர்கள் முடிவில் 38 - 1

    10 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 38 ரன்களை எடுத்துள்ளது பாகிஸ்தான் அணி.

  17. புவனேஷ்வர் குமாருக்கு காயம்

    இந்தியாவின் முக்கிய பந்து வீச்சாளரான புவனேஷ்வர் குமாருக்கு காயம் ஏற்பட்டதை தொடர்ந்து அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பதாக தெரிகிறது.

    அவருக்கு பதிலாகவே அவரது ஓவர்கள் விஜய் சங்கருக்கு அளிக்கப்பட்டுள்ளது.

    அவர் மீண்டும் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

  18. முதல் விக்கெட்டை இழந்தது பாகிஸ்தான்

    விஜய் சங்கர் பந்துவீச்சில் அவுட்டானார் இமாம் உல் ஹாக்.

    விஜய்

    பட மூலாதாரம், BCCI/TWITTER

  19. தொடங்கியது இரண்டாவது இன்னிங்ஸ்

    337 ரன்கள் இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியுள்ளது.

    இமாம் மற்றும் ஃபகர் சமான் இருவரும் ஆட்டத்தை தொடங்கவுள்ளனர்.

    புவனேஷ்வர் குமார் பந்து வீசுகிறார்.

  20. இந்திய அணி: யார் யார் எவ்வளவு ரன்?

    விவரம்