செளதி அரசர்களை நெட்ஃப்ளிக்ஸில் கலாய்த்த இந்திய வம்சாவளி நடிகர் - நீக்கப்பட்ட காட்சி

செளதி அரசு ஆட்சியாளர்களை கலாய்த்த ஒரு நையாண்டி காட்சியை நெட்ஃப்ளிக்ஸ் நீக்கி உள்ளது.

அமெரிக்க நகைச்சுவை நடிகர் ஹசன் மின்ஹஜ் நடிக்கும் அந்த பேட்ரியாட் ஆக்ட் எனும் அந்த தொடரில்தான் இந்த நையாண்டி காட்சி இடம்பெற்றிருந்தது.

நகைச்சுவை நடிகர் ஹசன் மின்ஹஜ் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்.

செளதி அதிகாரிகள் அளித்த புகாரை தொடர்ந்து இந்த காட்சி நீக்கப்பட்டுள்ளது.

இதனை பிரிட்டன் ஃப்னான்சியல் டைம்ஸ் நாளிதழிடம் உறுதிபடுத்தி உள்ளது நெட்ஃப்ளிக்ஸ்.

தாங்கள் கலை சுதந்திரத்தை உறுதியாக ஆதரிப்பதாகவும், அதே நேரம் உள்ளூர் சட்டத் திட்டங்களுக்கு கட்டுப்பட வேண்டி உள்ளதாகவும் நெட்ஃப்ளிக்ஸ் கூறி உள்ளது.

நெட்ஃப்ளிக்ஸிலிருந்து நீக்கப்பட்டு இருந்தாலும் யு - டியுப்பில் இந்த காட்சிகளை செளதி மக்கள் காண முடியும்.

நீக்கப்பட்ட அந்தக் காட்சியில், பத்திரிகையாளர் ஜமால் கொல்லப்பட்ட விவகாரத்தில் செளதி முடி இளவரசர் முகமது பின் சல்மானை கடுமையாக விமர்சித்திருந்தார்.

ஜமால் கஷோக்ஜி

இஸ்தான்புல்லில் உள்ள சௌதி தூதரகத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதியன்று, ஜமால் கொலை செய்யப்பட்டார்.

ஜமால் செளதி ஆட்சியாளர்களை கடுமையாக விமர்சித்துவந்தார்.

ஜமால் கஷோக்ஜி கொல்லப்பட்ட விவகாரத்தில் ரியாத் 11 பேரை கைது செய்துள்ளது. ஆனால், இந்த கொலை தொடர்பான முடி இளவரசர் மீதான குற்றச்சாட்டுகளை மறுக்கிறது.

ஏமன்

அந்த தொடரில் நீக்கப்பட்ட காட்சியில் ஏமன் பிரச்சனையில் செளதியின் பங்கையும் விமர்சித்திருந்தார் ஹசன் மின்ஹஜ்.

காட்சி நீக்கப்பட்டதற்கு எதிராக விமர்சனங்களும் எழுந்துள்ளன

வாஷிங்டன் போஸ்ட் ஆசிரியர் இதனை மூர்க்கதமான செயல் என்று அவர் பகிர்ந்துள்ள ட்விட்டில் விமர்சித்துள்ளார்.

செளதியில் பத்திரிகை சுதந்திரம்

பத்திரிகை சுதந்திரத்தில் மோசமான இடத்தில் செளதி உள்ளது.

180 நாடுகளில் 169-வது இடத்தில் அந்நாடு உள்ளதாக Reporters Without Borders என்ற பத்திரிகையாளர்கள் அமைப்பு கூறுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: