அதிக மேக்அப்புடன் வேலைக்கு செல்லும் பெண்கள், சக பெண் ஊழியர்களை விட அதிக சம்பளம் வாங்குவதாக சமீபத்திய அமெரிக்க ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
500 பில்லியன் டாலர் மதிப்புள்ள அழகுசாதனத் தொழில், அழகு குறித்த, அசாத்தியமான எதிர்பார்ப்புகளை உருவாக்குவதாக விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். சில ஆசிய நாடுகளில், சருமத்தை வெண்மையாக்கும் பல அழகு சாதன பொருட்களுக்கான விளம்பரங்களும் இதில் அடங்கும்.
அழகுசாதன பொருட்களுக்காக நடத்தப்படும் விளம்பர பிரசாரங்கள், பல இடங்களில் போராட்டங்களின் மையமாக உள்ளன. இத்தகைய விளம்பரங்களில் வெளியாகும் புகைப்படங்கள், அதிகமாக எடிட்டிங் செய்யப்படுவதால், சாதாரணப் பெண்களும் தங்களை ஒரு தொழில்முறை மாடலோடு ஒப்பிடுக்கொள்ளும் நிலை உருவாகிறது என்று செயல்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.
பட்டியலிலுள்ள ஒன்றை தேர்ந்தெடுத்து, அது எவ்வாறு ஒடுக்குமுறையை பறைசாற்றுகிறது என்பதை அறியுங்கள்.
ஒப்பனை
"ஆண்கள் ஒப்பனை இல்லாமல் வீட்டிலிருந்து கிளம்புவதை வைத்து எடை போடப்படுவதில்லை."
"கையில் மோதிரத்தை கொண்டிருக்கும் பெண் இன்னொருவருக்கு சொந்தமானவன் என்பதை குறிக்கும் நிச்சயதார்த்த மோதிரம் பெண்ணியத்துக்கு எதிரானது என்று கருதுகிறேன்" - மட்டில்டே
"இது இளைஞர்களுக்கு, குறிப்பாக இளம் பெண்களின் மன நலத்திற்கு பெரும் பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடியது. அவர்கள் தொடர்ந்து நம்பமுடியாத மற்றும் ஆபத்தான கொள்கைகளை எதிர்நோக்குகின்றனர்." - ரோஷன்
பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறையாக எது பார்க்கப்படுகிறது? பிரீடம் ட்ராஷ்கேன் திட்டத்தின் கருத்தாக்கத்தை தெரிந்துகொண்டு, நீங்கள் உங்களது பரிந்துரையை அளியுங்கள்.
அமெரிக்காவில் பெண்களின் வாக்குரிமைக்காக போராடியவர்களே, ஆரம்பகாலத்தில் உதட்டுசாயங்களை பயன்படுத்தியவர்கள். பெண்கள் மிகவும் அடக்கமுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்ற சமூக எதிர்பார்ப்புக்கு எதிராக இதை முன்னெடுத்தனர். தற்போது, சமூகத்தின் எதிர்பார்ப்பிற்கு எதிராக போராடும் வகையில் பெண்கள் பலரும் `மேக் அப்` அணியாமல் தங்களின் புகைப்படங்களை சமூக தளங்களில் பதிவிடும் நிலை உள்ளது.