பல ஆண்டுகளாக, வீட்டை சுத்தமாக செய்வது உட்பட, வீட்டுவேலைகள் அனைத்தும் பெண்களின் பொறுப்பாகவே பார்க்கப்படுகின்றன.
பல சமூகங்களில் பெண்கள்தான் வீட்டு வேலை செய்ய வேண்டும் என்ற வழக்கத்தை எதிர்த்து கேள்விகள் எழுப்பப்பட்டாலும், சுத்தமாக ஒரு வீட்டை வைத்திருக்கவேண்டும் என்ற சமூக அழுத்தம் இருக்கதான் செய்கிறது. இதற்காக முழுநேரமோ, பகுதிநேரமோ வீட்டுவேலைகளை செய்யும் பணியும் இருக்கிறது.
2016ஆம் ஆண்டு பிரிட்டனில் நடத்தப்பட்ட ஆய்வில், ஊதியம் வழங்கப்படாத சராசரியாக 60% வேலைகளை ஆண்களைவிட பெண்கள் அதிகம் செய்வதாக கண்டறியப்பட்டுள்ளது.
பட்டியலிலுள்ள ஒன்றை தேர்ந்தெடுத்து, அது எவ்வாறு ஒடுக்குமுறையை பறைசாற்றுகிறது என்பதை அறியுங்கள்.
ஒப்பனை
"ஆண்கள் ஒப்பனை இல்லாமல் வீட்டிலிருந்து கிளம்புவதை வைத்து எடை போடப்படுவதில்லை."
"கையில் மோதிரத்தை கொண்டிருக்கும் பெண் இன்னொருவருக்கு சொந்தமானவன் என்பதை குறிக்கும் நிச்சயதார்த்த மோதிரம் பெண்ணியத்துக்கு எதிரானது என்று கருதுகிறேன்" - மட்டில்டே
"இது இளைஞர்களுக்கு, குறிப்பாக இளம் பெண்களின் மன நலத்திற்கு பெரும் பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடியது. அவர்கள் தொடர்ந்து நம்பமுடியாத மற்றும் ஆபத்தான கொள்கைகளை எதிர்நோக்குகின்றனர்." - ரோஷன்
பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறையாக எது பார்க்கப்படுகிறது? பிரீடம் ட்ராஷ்கேன் திட்டத்தின் கருத்தாக்கத்தை தெரிந்துகொண்டு, நீங்கள் உங்களது பரிந்துரையை அளியுங்கள்.
ஐ.நாவை பொறுத்தவரையில், உலகளவில் ஊதியம் வழங்கப்படும் மற்றும் வழங்கப்படாத பணிகளை ஆண்களைவிட பெண்கள் 30 நிமிடங்கள் அதிகம் பணியாற்றுகின்றனர். வளரும் நாடுகளில் இது 50 நிமிடங்களாக உள்ளது.
அதாவது, ஒருவருக்கு தினமும் 8 மணிநேரம் தூக்கம் தேவை என்ற அடிப்படையில் பார்க்கும்போது, ஆண்களைவிட பெண்கள், ஆண்டுக்கு 19 நாட்கள் குறைவான தூக்கத்தையே பெறுகின்றனர்.