உயரம் அதிகமாக உள்ள செருப்புகளை அணிவது, தசைகளுக்கும், எலும்புக்கூட்டிற்கும் பாதிப்பை உருவாக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
இவைகளால் உருவாகும் அசௌகர்யத்தை சரிசெய்ய, ஹீல்களுக்குள் வைக்கப்படும் மென்மையான துணிகளுக்கு இன்னொரு சந்தை உருவாகிறது. இவற்றை அணியாமல் இருப்பதே சுலபமாக இருக்கும் அல்லவா?
இத்தகைய காலணிகள் பெண்களின் கவர்ச்சி, சில நேரங்களில் வலி ஆகியவற்றுடன் தொடர்பு படுத்தப்பட்டு இருந்தாலும், இது தொடக்கத்தில் ஆண்களின் காலணியாகவே இருந்தது. பாரசீகத்தில் (தற்கால இரான்) குதிரையில் பயணித்த வீரர்கள், குதிரை சேண வளையத்தில் தங்களிளை வைத்துக்கொள்ள இது உதவியது.
பட்டியலிலுள்ள ஒன்றை தேர்ந்தெடுத்து, அது எவ்வாறு ஒடுக்குமுறையை பறைசாற்றுகிறது என்பதை அறியுங்கள்.
ஒப்பனை
"ஆண்கள் ஒப்பனை இல்லாமல் வீட்டிலிருந்து கிளம்புவதை வைத்து எடை போடப்படுவதில்லை."
"கையில் மோதிரத்தை கொண்டிருக்கும் பெண் இன்னொருவருக்கு சொந்தமானவன் என்பதை குறிக்கும் நிச்சயதார்த்த மோதிரம் பெண்ணியத்துக்கு எதிரானது என்று கருதுகிறேன்" - மட்டில்டே
"இது இளைஞர்களுக்கு, குறிப்பாக இளம் பெண்களின் மன நலத்திற்கு பெரும் பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடியது. அவர்கள் தொடர்ந்து நம்பமுடியாத மற்றும் ஆபத்தான கொள்கைகளை எதிர்நோக்குகின்றனர்." - ரோஷன்
பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறையாக எது பார்க்கப்படுகிறது? பிரீடம் ட்ராஷ்கேன் திட்டத்தின் கருத்தாக்கத்தை தெரிந்துகொண்டு, நீங்கள் உங்களது பரிந்துரையை அளியுங்கள்.
2016ஆம் ஆண்டில், லண்டன் நகரில் வரவேற்பாளராக பணியாற்றிய ஒரு பெண்மணி ஹை ஹீல் காலணிகளை அணிய மறுத்ததால், பணியிலிருந்து நீக்கப்பட்டார். பிரிட்டனில், பணியிடங்களில் ஊழியர்கள் ஹை ஹீல்ஸ் காலணிகளை கட்டாயம் அணியவேண்டும் என்பதை சட்டவிரோதமாக்கவேண்டும் என்ற கோரிக்கை முன்னெடுக்கப்பட்டது.
சட்டத்தை மாற்ற அரசு மறுத்தபோதிலும், பணியிடங்களில் முறையான ஆடை அணிவது குறித்த வழிகாட்டுதல்களை சீர்திருத்த கடினமாக உழைப்போம் என்று கூறியது.
சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கோல்டன் குளோப் விருது வழங்கும் விழாவில், தனது ஹை ஹீல்ஸ்களை கழட்டினார் நடிகை எம்மா தாம்சன். அவை, பாதங்களுக்கு அதிக வலி கொடுப்பதாக கூறி, வெறும் கால்களோடு சென்று விருது வழங்கினார்.