செர்னோபிள் அணு உலை விபத்து: 24,000 ஆண்டுகள் மக்கள் வசிக்க முடியாத பகுதியில் சூரிய மின்சாரம் உற்பத்தி

செர்னோபில்

பட மூலாதாரம், Reuters

1986-ம் ஆண்டு அப்போதைய சோவியத் ஒன்றியத்தில் நடந்த செர்னோபிள் அணு உலை வெடிப்பு விபத்து சர்வதேச அளவில் அணு உலைகளின் பாதுகாப்பு குறித்த காத்திரமான உரையாடல்கள் தொடங்கக் காரணமாக இருந்தது.

1986 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 ஆம் தேதி அதிகாலை வெடித்தது அணு உலை. இதன் காரணமாக கதிர்வீச்சு அண்டை நாடுகளுக்கும் பரவியது. இப்போதும் அணு உலை அமைந்துள்ள இடத்தில் பல பகுதிகள் பாதுகாக்கப்பட்ட இடமாகத்தான் உள்ளன.

கைவிடப்பட்ட அந்த பகுதியில் சூரிய சக்தி ஆலையை உக்ரைன் அமைத்துள்ளது.

அது தொடர்பான புகைப்படங்களையும் தகவல்களையும் இங்கே பகிர்கிறோம்.

செர்னோபிள் அணு உலை விபத்து ஏற்பட்ட பகுதியில் சூரிய மின்சக்தி ஆலை அமைந்துள்ள இடம்.

Presentational grey line
மின்சக்தி

பட மூலாதாரம், Reuters

1986 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 ஆம் தேதி அதிகாலை செர்னோபிள் வளாகத்தில் இருந்த 4 அணு உலைகளில் ஒன்று வெடித்து.

Presentational grey line
செர்னோபில்

கதிர்வீச்சானது ஐரோப்பிய அண்டை நாடுகளுக்கும் பரவியது. இதன் காரணமக தைராய்டு புற்று நோய் அதிகரித்தது.

Presentational grey line
செர்னோபில்

அணு உலை அமைந்துள்ள பகுதியின் சுற்றுவட்டாரத்தில் உள்ள 1000 சதுர கிலோமீட்டர் பொதுமக்களுக்கு தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது.

Presentational grey line
செர்னோபில்

பட மூலாதாரம், AFP

செர்னோபிள் அணு உலை 2000 ஆம் ஆண்டு மூடப்பட்டது.

Presentational grey line
Presentational grey line
சூரிய மின் சக்தி

பட மூலாதாரம், Reuters

கைவிடப்பட்ட அந்த இடத்தில் சூரியமின் சக்தி ஆலை அமைக்க உக்ரைன் அரசு முடிவு செய்தது.

Presentational grey line
செர்னோபில்

பட மூலாதாரம், EPA

இங்கு தயாரிக்கப்படும் மின்சாரம் 2000 வீடுகளுக்கு வழங்கப்படும்.

Presentational grey line
செர்னோபில்

செர்னோபிள்ளில் விபத்துக்கு உள்ளான அந்த குறிப்பிட்ட பகுதியில் 24,000 ஆண்டுகளுக்கு மக்கள் வசிக்க முடியாது.

Presentational grey line

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :