கடல் பாம்பும், ஓர் இளைஞனின் பெருங்கனவும் - நெகிழ்ச்சி பகிர்வு

பட மூலாதாரம், Getty Images
கடந்த வாரம் உலகளவில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை புகைப்படங்களாக தொகுத்து வழங்குகிறோம்.
கடல் பாம்பும், ஒரு இளைஞனின் பெருங்கனவும்
ஆஸ்திரேலியா மீன்பிடி படகில் பணி செய்து வந்த பிரிட்டன் இளைஞர் ஹாரி இவன்ஸ் கடல் பாம்பு கடித்ததில் வியாழக்கிழமை மரணம் அடைந்தார். அதிக விஷமிக்க கடல் பாம்பு மனிதர்களை தீண்டுவதெல்லாம் அரிதினுன் அரிதான செயல்.

பட மூலாதாரம், Getty Images
ஹாரியின் தாய் ஷாரோன், "அவனுக்கு பிடித்த பணியில் பெருங்காதலுடன் பணியாற்றினான். அவர் விட்டோத்தி அல்ல. அவனுக்கு பெருங்கனவு இருந்தது. அவன் குறித்து நாங்கள் பெருமை கொள்கிறோம்" என்று கூறி உள்ளார். ஹாரியின் நண்பர் ஜாக்சன் ஃபேஸ்புக்கில், "நான் சந்தித்தலேயே மிகவும் வேடிக்கையான மனிதன் நீ. எப்போதும் அனைவரையும் சிரிக்க வைத்தாய்" என்று கூறி உள்ளார்.

'வலதுசாரிகளின் வெற்றி'

பட மூலாதாரம், Reuters
தீவிர வலதுசாரி வேட்பாளரான ஜேர் போல்சொனாரோ பிரேசில் அதிபர் தேர்தலில் முதல் சுற்றில் வெற்றி பெற்றுள்ளார். தேவையான 50 சதவீத வாக்குகளை அவர் எடுக்க தவறியதால் இடதுசாரி கட்சியான தொழிலாளர் கட்சி வேட்பாளரை அவர் இரண்டாவது சுற்றில் அக்டோபர் 28 ஆம் தேதி எதிர்கொள்வார்.


'இருபது பேர் பலி'

பட மூலாதாரம், CBS
நியூயார்க்கில் விருந்தொன்றுக்கு சென்ற சொகுசு வாகனம் விபத்துக்குள்ளானதில் இருபது பேர் மரணமடைந்தனர் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர். வாகனத்தில் இருந்த 18 பேரும், நடந்து சென்று கொண்டிருந்த இரண்டு பேரும் பலியானார்கள் என அந்த செய்தி விவரிக்கிறது. விபத்தை நேரில் கண்டவர்கள் ஸ்போர்ட்ஸ் யுட்டிலிட்டி டைப் வாகனமான அந்த சொகுசு ஊர்தி இன்னொரு வாகனத்தில் மோதியதில் இந்த விபத்து நடந்ததாக கூறுகிறார்கள்.


'பல்கேரிய பத்திரிகையாளர் பலி'

பட மூலாதாரம், AFP/TVN Television
பல்கேரிய புலனாய்வு பத்திரிகையாளர் விக்டோரியா மரினோவா கொல்லப்பட்ட விவகாரத்தை போலீஸார் விசாரித்து வருகின்றனர். ரூஸ் நகரத்தில் டான்யூப் நதிக்கரையில் அவரது உடல் சனிக்கிழமை கண்டெடுக்கப்பட்டது. மரணத்திற்கும் இவரது புலனாய்வு பத்திரிகையாளர் பணிக்கும் தொடர்பு இருக்கிறதா என்று இன்னும் தெளிவாக தெரியவில்லை. சர்வதேச அளவில் இவரது மரணம் கவனத்தை ஈர்த்துள்ளது. பலர் இதனை கண்டித்து உரிய விசாரணை கோரி உள்ளனர்.

இண்டர்போலின் தலைவர்

பட மூலாதாரம், AFP
காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்ட இண்டர்போலின் தலைவரை தாங்கள் பிடித்து வைத்திருப்பதாக சீனா உறுதிப்படுத்தியுள்ளது. சில சட்டங்களை மீறிவிட்டதால் அவரிடம் சீனாவின் ஊழல் எதிர்ப்புத் துறை விசாரணை செய்து வருகிறது என அந்நாடு தெரிவித்துள்ளது. இண்டர்போல் அமைந்திருக்கும் ஃபிரான்ஸின் லியான் நகரில் இருந்து சீனாவுக்கு பயணம் மேற்கொண்டபோது அவர் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












