‘திருவிழா, போராட்டம்’ - இப்படித்தான் இருந்தது கடந்தவார உலகம்

கடந்த வாரம் உலகளவில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை புகைப்படங்களாக தொகுத்து வழங்குகிறோம்.

போராடும் பெண்கள்

போராடும் பெண்கள்

பட மூலாதாரம், TIMOTHY A. CLARY / AFP

அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதியாக பிரெட் கேவனோவை அதிபர் டொனால்டு டிரம்ப் முன்னிறுத்தியதை அடுத்து கடந்த வாரம் அமெரிக்காவில் பல இடங்களில் பெண்கள் போராட்டங்களை முன்னெடுத்தனர்.

Presentational grey line

திருவிழா

திருவிழா

பட மூலாதாரம், CLODAGH KILCOYNE/ REUTERS

அயர்லாந்தில் உள்ள க்ளார்கால்வே அரண்மனயில் நடைபெற்ற திருவிழாவில் துணிகளுக்கு எம்பிராய்டரி செய்யும் பெண்கள்.

Presentational grey line

சுனாமி பாதிப்பு

சுனாமி பாதிப்பு

பட மூலாதாரம், HOTLI SIMANJUNTAK / EPA

இந்தோனீசியாவில் 1400க்கு மேலானோரை பலிவாங்கிய நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்ட பள்ளிவாசல் ஒன்று.

Presentational grey line

காற்று வாங்கும் நாய்குட்டி

காற்று வாங்கும் நாய்குட்டி

பட மூலாதாரம், ELOISA LOPEZ / REUTERS

உலக விலங்குகள் தினத்தை முன்னிட்டு பிலிப்பைன்ஸ் மணிலாவில் நடைபெற்ற விலங்குகளுக்கான அழகு நிகழ்ச்சி ஒன்றில் தன் நாய்க்கு மின்விசிறி வீசும் பெண்.

Presentational grey line
Presentational grey line

உள்கட்டமைப்பை மேம்படுத்து

உள்கட்டமைப்பை மேம்படுத்து

பட மூலாதாரம், GULSHAN KHAN / AFP

மோசமான உள்கட்டமைப்பு, வீட்டு வசதி மற்றும் போதை மருந்து ஆகியவற்றுக்கு எதிராக தென் ஆப்ரிக்கா ஜோக்னபெர்க் புறநகர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்.

Presentational grey line

விண்வெளி பயணம்

விண்வெளி பயணம்

பட மூலாதாரம், MAXIM SHIPENKOV / AFP

ஆறுமாத விண்வெளி பயணத்தை முடித்துக் கொண்டு இரண்டு அமெரிக்க விண்வெளி வீரர்கள் மற்றும் ஒரு ரஷ்ய விண்வெளி வீரர் சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து பூமி திரும்பினர்.

Presentational grey line

50-வது நினைவு தினம்

50-வது நினைவு தினம்

பட மூலாதாரம், CRISTOPHER ROGEL BLANQUET / GETTY

பாதுகாப்பு படை வீரர்களால் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் 50 வது நினைவு தினத்தை நினைவுக்கூரும் போராட்டத்தில் கடைகளை சேதமாக்கும் செயற்பட்டாளர்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :