இந்தோனீசியா நிலநடுக்கத்தில் 384 பேர் பலி, தொடரும் நில அதிர்வுகள்

பாலு நகரில் நிகழ்ந்த நிலநடுக்கத்திற்கு பின்னர் மக்கள் திறந்தவெளியில் வாழ்ந்து வருகின்றனர்.

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு, பாலு நகரில் நிகழ்ந்த நிலநடுக்கத்திற்கு பின்னர் மக்கள் திறந்தவெளியில் வாழ்ந்து வருகின்றனர்.

இந்தேனீசியாவின் சுலாவெசி தீவில் நிகழ்ந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்திற்கு பிறகு வலுவான நில அதிர்வுகள் ஏற்படுவது தொடர்ந்து வருகின்றது,

இந்தோனீசியாவில் வெள்ளிக்கிழமை 7.5 என்ற அளவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியில் சிக்கி குறைந்தது 384 பேர் உயிரிழந்துள்ளனர். 500 பேர் காயமடைந்துள்ளனர்.

டஜன்கணக்கானோரை காணவில்லை. பாலு நகரில் இடிந்துள்ள கட்டட இடிபாடுகளில் சிலர் சிக்குண்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

இந்நிலையில், காயமடைந்தோருக்கு சம்பவ இடத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், AFP/GETTY IMAGES

படக்குறிப்பு, இந்நிலையில், காயமடைந்தோருக்கு சம்பவ இடத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இறந்தோரின் உடல்கள் தெருக்களில் கிடக்கின்றன. மருத்துவமனைகள் சேதமடைந்துள்ளதால் காயமுற்றோர் முகாம்களில் சிகிச்சை அளிக்கப்படுகின்றனர்.

வெள்ளிக்கிழமை நிகழ்ந்த நிலநடுக்கத்திற்கு பிறகு விமானம் ஒன்று பாதுகாப்பாக மேலெழுந்து பறப்பதை உறுதி செய்த பின்னர், பாலு நகர விமான நிலையத்தின் வான்வழி போக்குவரத்து கட்டுப்பாட்டாளர் உயிரிழந்துள்ளார்.

இந்த நகரில் ஏற்பட்டுள்ள உயிரிழப்பும், சேதங்களும் இன்னும் முழுமையாக தெரியவில்லை.

தெருக்களில் பிணங்கள்

பட மூலாதாரம், Reuters

இந்தோனீசியாவின் சுலாவெசி தீவிலுள்ள பாலு என்ற பகுதியில் சுமார் 2 மீட்டர் உயரத்துக்கு எழுந்த சுனாமி அலைகள் அங்கிருந்தவர்களை கடலுக்குள் இழுத்து சென்றது.

மக்கள் அச்சத்தில் அலறியடித்துக்கொண்டு ஓடுவது போன்ற பல காணொளிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

கடந்த மாதம் இந்தோனீசியாவின் மற்றொரு தீவான லோம்போக்கில் தொடர்ச்சியாக பல நிலநடுக்கங்கள் உணரப்பட்டது. குறிப்பாக, ஆகஸ்டு மாதம் 5ஆம் தேதி நிகழ்ந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால் மட்டும் அதிகபட்சமாக 460க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இந்தோனீசியா நிலநடுக்கம்: கரை ஒதுங்கும் சுனாமியில் அடித்துச்செல்லப்பட்ட உடல்கள்

பட மூலாதாரம், AFP

நேற்று ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் அதைத்தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியில் சிக்கி குறைந்தது 384 பேர் உயிரிழந்திருக்கலாம் என்று இந்தோனீசியாவின் பேரிடர் மீட்பு படை தெரிவித்துள்ளது.

"தகவல் தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளதால், சேத விவரங்கள் சரிவர கிடைக்கவில்லை. சுனாமி பேரலைகளால் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்ட பலரது உடல்கள் தொடர்ந்து கரையொதுங்கி வருவதால் உயிரிழந்தோர் எண்ணிக்கையை சரியாக கணக்கிட இயலவில்லை" என்று இந்தோனீசிய பேரிடர் மீட்புப் படையின் செய்தித்தொடர்பாளர் சுடோபோ புர்வோ நுகரோஹோ ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் கூறினார்.

இந்தோனீசியா நிலநடுக்கம்: கரை ஒதுங்கும் சுனாமியில் அடித்துச்செல்லப்பட்ட உடல்கள்

பட மூலாதாரம், MUHAMMAD RIFKI

பெரும்பாலான உயிரிழப்புகள் நிலநடுக்கத்தினால் ஏற்பட்டுள்ளதா அல்லது சுனாமியால் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்த தெளிவான தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை.

இலங்கை
இலங்கை

சுனாமி பெரியளவில் தாக்கிய பாலு என்ற பகுதியில் மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். தகவல் தொடர்பும், உள்ளூர் விமான நிலையத்தின் ஓடுபாதையும் பாதிக்கப்பட்டிருந்தாலும், மீட்புப்பணிகள் தொடங்கியுள்ளதாகவும், ஹெலிகாப்டர்கள் தரையிறங்குவதில் எவ்வித பிரச்சனையும் இல்லை என்றும் இந்தோனீசிய அரசின் அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்தோனீசியாவின் சுலாவெசி தீவின் மத்திய பகுதியை மையமாக கொண்டு பூமிக்கு கீழே 10 கிலோ மீட்டர் ஆழத்தில், உள்ளூர் நேரப்படி மாலை 6 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி அமைப்பு கூறியுள்ளது.

இந்தோனீசியா நிலநடுக்கம்: கரை ஒதுங்கும் சுனாமியில் அடித்துச்செல்லப்பட்ட உடல்கள்

பட மூலாதாரம், EPA

நிலநடுக்கத்தை தொடர்ந்து விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை ஒரே மணிநேரத்தில் திரும்ப பெறப்பட்டது.

நிலநடுக்கம் ஏற்பட்ட சுலாவெசி தீவின் மத்திய பகுதியிலிருந்து சுமார் 80 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள பாலு என்ற பகுதியில் எழுந்த சுனாமி அலைகள் அங்குள்ள மசூதி உள்பட பல கட்டடங்களை சூழ்வதை தற்போது வெளியாகியுள்ள காணொளிகள் காட்டுகின்றன.

இலங்கை
இலங்கை

"குழப்பம் நிறைந்த சூழ்நிலையை சமாளிக்க முடியாமல் மக்கள் இடிந்து விழுந்த கட்டடங்கள் மற்றும் தெருக்களில் ஓடி வருகின்றனர். மேலும், சுனாமி அலைகளால் அடித்துவரப்பட்ட கப்பல் ஒன்று கரையை தட்டியுள்ளது" என்று இந்தோனீசியாவின் வானிலை மற்றும் பூகோளவியல் அமைப்பின் தலைவர் தீவொரிடா கார்னவாட்டி கூறியுள்ளார்.

2004 டிசம்பர் 26-ம் தேதி இந்தோனீசியாவின் சுமத்ரா கடற்பரப்பில் நிகழ்ந்த ஒரு மிகப் பெரிய நிலநடுக்கத்தால் தூண்டப்பட்ட மிக மோசமான சுனாமியால் இந்தியப் பெருங்கடலில் 2.26 லட்சம் பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் 1.2 லட்சம் பேருக்கு மேல் இந்தோனீசியாவை சேர்ந்தவர்கள்.

இந்தோனீசியா நிலநடுக்கம்: கரை ஒதுங்கும் சுனாமியில் அடித்துச்செல்லப்பட்ட உடல்கள்
YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :