உலகப் பார்வை: பிரிட்டனின் உள்துறைச் செயலர் பதவி விலகல்

கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம்.

பிரிட்டனின் உள்துறை செயலர் பதவி விலகல்

சட்டவிரோத குடியேற்றங்களை தடுக்கும் நோக்கத்தில் "கவனக்குறைவுடன் எம்பிக்களை வழிநடத்திய" பிரிட்டனின் உள்துறைச் செயலர் அம்பர் ரட் தவறுக்கு பொறுப்பேற்று அப்பதவியிலிருந்து விலகியுள்ளார்.

வரலாறு படைத்த அவெஞ்சர்ஸ் ஹாலிவுட் திரைப்படம்

சமீபத்தில் வெளியான "அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார்" என்ற ஹாலிவுட் திரைப்படம் வெளியான முதல் வார இறுதியில் 630 மில்லியன் டாலர்களை வசூல் செய்து உலகளவில் புதிய வரலாற்றை படைத்துள்ளதாக மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

இரானை பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் மக்ரோங்

இரான் அதிபர் ஹசன் ரூஹானி தொலைபேசி வழியாக பேசிய பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மக்ரோங் இரான் அணுசக்தி சம்பந்தமான பேச்சுவார்த்தையை துவக்க வேண்டுமென்று வலியுறுத்தினார். அதற்கு பதிலளித்த ஹசன் தற்போது நடைமுறையில் இருக்கும் ஏழு நாடுகளுக்கிடையேயான ஒப்பந்தத்தில் எவ்வித மாற்றத்தையும் மேற்கொள்ள முடியாதென்று தெரிவித்தார்.

ஸ்ப்ரின்ட் நிறுவனத்தை வாங்குகிறது டி-மொபைல்

அமெரிக்க தொலைத்தொடர்பு நிறுவங்களில் மூன்றாவது இடத்தை வகிக்கும் டி-மொபைல் நிறுவனம் நான்காவது இடத்திலுள்ள தனது போட்டியாளரான ஸ்ப்ரின்ட் நிறுவனத்தை 26 பில்லியன் டாலர்களுக்கு வாங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: