இரு கொரிய அதிபர்களின் ஆத்மார்த்த சந்திப்பின் புகைப்படத் தொகுப்பு

வட கொரிய அதிபர் கிம் ஜாங்-உன், தென் கொரிய தலைவர் முன் ஜே-இன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வட கொரிய அதிபர் கிம் ஜாங்-உன்னிற்கு தென் கொரியா சிறப்பான வரவேற்பை அளித்தது

1953ஆம் ஆண்டு நடைபெற்ற கொரிய போரின் முடிவிலிருந்து, கொரிய தீபகற்பத்தை பிரிக்கும் ராணுவ எல்லைகளை கடந்து முதல் முறையாக தென் கொரியாவில் கால் பதித்திருக்கிறார் வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன்.

2000 மற்றும் 2007ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற உச்சி மாநாடுகளுக்கு பிறகு, இரு நாட்டு உறவும் சமீப மாதங்களில் மேம்பட்டு வருவதே தற்போது நடைபெறும் இந்த சந்திப்புக்கு காரணமாகும்.

வட கொரிய அதிபர் கிம் ஜாங்-உன், தென் கொரிய தலைவர் முன் ஜே-இன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கொரியாவின் ராணுவமயமற்ற பகுதியில் வட கொரிய தலைவர் கிம்முக்காக காத்திருக்கும் தென் கொரிய அதிபர் முன் ஜே-இன்

நிகழ்ச்சி நிரல் பட்டியல் முதல் விருந்து வரையான இந்த மாநாட்டின் எல்லா விபரங்களும் தெளிவாக திட்டமிடப்பட்டுள்ளன.

இந்த சந்திப்பு, ஜூன் மாத தொடக்கத்தில் நடைபெறவுள்ள வட கொரிய அமெரிக்க பேச்சுவார்த்தைக்கு இந்த சந்திப்பு ஒரு முன்னோட்டம் என்றும் கூறப்படுகிறது.

வட கொரிய அதிபர் கிம் ஜாங்-உன், தென் கொரிய தலைவர் முன் ஜே-இன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தென் கொரிய அதிபர் தனது நாட்டின் எல்லையில் நின்றபடியே கிம் ஜாங்-உன்னை வரவேற்றார். "நான் உங்களை சந்திப்பது குறித்து மகிழ்ச்சியடைகிறேன்" என முன் கிம்மிடம் கூறியதாக ஏஎஃப்பி செய்தி முகமை தெரிவிக்கிறது.

இந்த இருநாட்டு தலைவர்களும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி ஒரு தசாப்த காலத்திற்கு மேலாக ஆகிவிட்ட நிலையில், வட கொரியாவின் அணு மற்றும் ஏவுகணை தொழில்நுட்பங்கள் மிகவும் முன்னேறிவிட்டதால் அணு ஆயுதங்களை கைவிடுவது தொடர்பாக வட கொரியாவோடு இப்போது ஒப்பந்தம் செய்ய முயல்வது மிகவும் கடினமாக இருக்கும் என்று தென் கொரியா தெரிவித்திருந்தது.

வட கொரிய அதிபர் கிம் ஜாங்-உன், தென் கொரிய தலைவர் முன் ஜே-இன்

பட மூலாதாரம், Korea Summit Press Pool/Getty Images

படக்குறிப்பு, தென் கொரியாவுக்குள் காலடி எடுத்து வைக்கும் வட கொரிய அதிபர் கிம் ஜாங்-உன்
வட கொரிய அதிபர் கிம் ஜாங்-உன், தென் கொரிய தலைவர் முன் ஜே-இன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தென் கொரிய அதிபரை தனது நாட்டு எல்லைக்குள் வருமாறு அழைப்பு விடுத்த கிம், பின்னர் வட கொரியா எல்லைக்குள் இருநாட்டு தலைவர்களும் கைக்குலுக்கி கொண்டனர்
வட கொரிய அதிபர் கிம் ஜாங்-உன், தென் கொரிய தலைவர் முன் ஜே-இன்

பட மூலாதாரம், EPA/KOREA SUMMIT PRESS POOL

படக்குறிப்பு, அதிபர் கிம் ஜாங்-உன்னை கைப்பிடித்து அழைத்து செல்லும் தென் கொரிய அதிபர்
வட கொரிய அதிபர் கிம் ஜாங்-உன், தென் கொரிய தலைவர் முன் ஜே-இன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வட கொரிய அதிபர் கிம் ஜாங்-உன் மற்றும் தென் கொரிய அதிபர் முன் ஜே-இன் குழந்தைகளுடன் புகைப்படம் எடுத்துகொண்ட காட்சி
வட கொரிய அதிபர் கிம் ஜாங்-உன், தென் கொரிய தலைவர் முன் ஜே-இன்

பட மூலாதாரம், PA/KOREA SUMMIT PRESS POOL

படக்குறிப்பு, தென் கொரியா சார்பில் வட கொரிய அதிபர் கிம் ஜாங்-உன்னிற்கு சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது
வட கொரிய அதிபர் கிம் ஜாங்-உன், தென் கொரிய தலைவர் முன் ஜே-இன்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, ஒருமணி நேரமாக இருதலைவர்களும் தனியாக பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், அவர்கள் என்ன பேசினார்கள் என்பதை தெரிந்துகொள்ள இந்த உலகமே ஆர்வமுடன் காத்துக் கொண்டிருக்கிறது
வட கொரிய அதிபர் கிம் ஜாங்-உன், தென் கொரிய தலைவர் முன் ஜே-இன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வட கொரியாவின் ஏவுகணை சோதனைகளால் தான் எதிர்காலத்தில் விரைவாக எழுந்து கொள்ளும் சூழல் வராது என்று உறுதி செய்வதாக கிம் தெரிவித்துள்ளார்.
வட கொரிய அதிபர் கிம் ஜாங்-உன், தென் கொரிய தலைவர் முன் ஜே-இன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கிம் ஜாங்-உன் உணவு இடைவேளைக்காக வட கொரியா புறப்பட்ட போது உடன் வந்த பாதுகாப்பு படையினர்
வட கொரிய அதிபர் கிம் ஜாங்-உன், தென் கொரிய தலைவர் முன் ஜே-இன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இருநாட்டு கொரிய அதிபர்களின் சந்திப்பு காரணமாக உற்சாகத்திலிருக்கும் தென் கொரியர்கள்
வட கொரிய அதிபர் கிம் ஜாங்-உன், தென் கொரிய தலைவர் முன் ஜே-இன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வட கொரிய அதிபர் கிம் ஜாங்-உன் மற்றும் தென் கொரிய தலைவர் முன் ஜே-இன் செடிக்கு தண்ணீர் ஊற்றும் காட்சி

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: