“எங்கள் நாட்டை பிளவுப்படுத்தும் முயற்சி தோல்வியடையும்” - சீன அதிபர்

சீனாவை பிளவுப்படுத்துவதற்கு எடுக்கப்படும் எந்தவொரு முயற்சியும் தோல்வியடையும் என்று அந்நாட்டின் அதிபர் ஷி ஜின்பிங் தெரிவித்திருக்கிறார்.

ஷி ஜின்பிங்

பட மூலாதாரம், Lintao Zhang/Getty Images

நாடாளுமன்றத்தில் ஆற்றிய தேசியவாத நிறைவுரையில், உலக அளவில் முன்னேறி வரும் நாடு என்று சீனாவை பற்றி அதிபர் ஷி ஜின்பிங் குறிப்பிட்டுள்ளார்.

தைவான் மற்றும் ஹாங்காங் போன்ற இடங்களில் இருந்து வருகின்ற பிரிவினைவாத முயற்சிகளுக்கு பலமான எச்சரிக்கையாக இந்த உரை பார்க்கப்படுகிறது.

சீனா அதனுடைய வளர்ச்சியை பற்றி நிறைவடைய முடியாது என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

வர்த்தகத்தில் உலக அளவில் ஒத்துழைப்பு மேற்கொள்ள சீன ஆவலாக உள்ளது என்பதை தெரிவிப்பதற்கு, ஓராண்டுக்கு ஒருமுறை நடத்தக்கூடிய செய்தியாளர் சந்திப்பை சீனப் பிரதமர் லி கெச்சியாங் பயன்படுத்தியுள்ளார்.

தைவானின் பிளவுப்படுத்தும் முயற்சிகளை தjடுக்கும் என்று சீனா தெரிவித்துள்ளது.

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு, தைவானின் பிளவுப்படுத்தும் முயற்சிகளை தjடுக்கும் என்று சீனா தெரிவித்துள்ளது.

சீனா அதனுடைய பொருளாதாரத்தை மேலதிகமாக திறந்து, உள்ளூர் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் சீனாவின் பெரிய சந்தையில் நியாயமான முறையில் போட்டியிடும் திறனை உறுதி செய்யும் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

கடந்த காலத்திலும் சீன ஆட்சியாளர்கள் இதே மாதிரியான உறுதிமொழிகளை வழங்கியுள்ளனர்.

சமீபத்திய பாதுகாப்புவாத சொல்லாடல்கள் மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகத்தின் சுங்கவரி கட்டணங்கள் பற்றிய அச்சுறுத்தல்களுக்கு முரண்பட்டு சீனப் பிரதமரின் இந்த கூற்றுகள் வந்துள்ளன.

சீனா: சோகத்தில் முடிந்த திருட்டு முயற்சி (காணொளி)

காணொளிக் குறிப்பு, சீனா: சோகத்தில் முடிந்த திருட்டு முயற்சி

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: