திருமணத்திற்கும், தேனிலவுக்கும் ஊக்கத்தொகை தரவுள்ள சீனா

திருமணத்திற்கும், தேனிலவுக்கும் ஊக்கத்தொகை தரவுள்ள சீனா

பட மூலாதாரம், Getty Images

சீனாவின் வடக்கில் உள்ள ஷாங்க்ஷி மாகாணம் திருமணம் செய்துகொள்வதை ஊக்குவிக்கும் முயற்சியாக திருமணம் மற்றும் தேனிலவு செலவுகளுக்காக ஆண்டுக்கு 15 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவிடவுள்ளது.

குறைந்து வரும் திருமணங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

புதுமணத் தம்பதிகள் நகைகள், வீட்டு உபயோக பொருட்கள் உள்ளிட்டவற்றை வாங்க, நிதி உதவிக்கு விண்ணப்பிக்க செல்பேசி செயலி ஒன்றை அம்மாகாண அரசு அறிமுகம் செய்துள்ளது.

திருமணத்திற்கும், தேனிலவுக்கும் ஊக்கத்தொகை தரவுள்ள சீனா

பட மூலாதாரம், Getty Images

இதேபோன்றதொரு திட்டத்தை அறிமுகம் செய்ய குய்ச்சோ மாகாண அரசும் திட்டமிட்டு வருகிறது.

அங்கு நடைபெறும் திருமணங்களில் 60 சதவீதம் காலம் கடந்த திருமணங்கள் என்று சீன அரசு கருதும் வயதிலேயே நிகழ்கின்றன.

பெண்ணுகளுக்கு 23 வயதும், ஆண்களுக்கு 25 வயதும் திருமண வயதாக சீனாவில் கருதப்படுகிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :