கண்ணாடிப் பாலத்தில் நடுவானில் தொங்கியபடி திருமணம்; சீனாவில் ருசிகரம்
சீன தம்பதியர் ஒருவர் கண்ணாடி பாலத்திலிருந்து நடுவானில் தொங்கிக் கொண்டு தங்கள் திருமணத்தை துணிகர நிகழ்வாக நடத்தியுள்ளனர்.

பட மூலாதாரம், CHINA NEWS SERVICE
ஹுனான் மாகாணம் பிங்ஜாங்கில் உள்ள உலகின் நீளமானதாகவும், திகிலூட்டக்கூடியதுமாக கருதப்படும் ஷின்ஜுசாய் கண்ணாடி பாலத்தில், சீன காதலர் தினமான ஆகஸ்டு 9 ஆம் நாள் இந்த மணமகளும் மணமகனும் திருமணம் செய்து கொண்டனர்.

பட மூலாதாரம், CHINA NEWS SERVICE
தரையிலிருந்து 180 மீட்டர் மேலே நின்ற போதும் அவர்கள் தங்களின் திருமண புகைப்படத்திற்கு புன்கைக்க மறக்கவில்லை.

பட மூலாதாரம், CHINA NEWS SERVICE
சில வாரங்களுக்கு முன்னதாக ஐந்து தம்பதியர் இந்த பாலத்தில் திருமணம் செய்து கொண்டனர் எனினும் அவர்கள் பாலத்தைவிட்டு இறங்கவில்லை.

பட மூலாதாரம், CHINA NEWS SERVICE
சீனாவில் கண்ணாடி பாலங்கள் சமீப காலங்களில் பிரபலமாகி வருவது குறிப்பிடத்தக்கது.

பட மூலாதாரம், CHINA NEWS SERVICE








