எரியும் தார் பந்துகளில் சிக்கிய காட்டு யானைகள் புகைப்படத்திற்கு சர்வதேச விருது

இரண்டு யானைகள்

பட மூலாதாரம், Biplab Hazra/Sanctuary Wildlife Photography Awards

படக்குறிப்பு, பற்றி எரியும் தீயுடன், உயிரை காக்க மனிதர்களிடமிருந்து தப்பி ஓடும் யானைகள்

(எச்சரிக்கை: இந்த புகைப்படம் சிலருக்கு சங்கடத்தை தரலாம்)

தங்களுக்கு தீ வைத்த ஒரு குழுவிடமிருந்து தப்பியோடும் இரண்டு யானைகளின் புகைப்படம் வனவிலங்கு புகைப்பட போட்டியொன்றில் முதன்மையான பரிசை வென்றுள்ளது.

மனிதர்கள் - யானைகள் இடையிலான மோதல்கள் நிறைந்த இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் பிப்லாப் ஹஸ்ரா என்பவர் எடுத்த அப்புகைப்படத்தில் தன் காலில் பற்றி எரியும் தீயுடன் யானைக்குட்டி ஒன்று, மற்றொரு யானையுடன் சேர்ந்து தங்களது உயிரை காப்பாற்றிக் கொள்ள ஓடுகிறது.

விருதை அறிவித்த சான்சுரி என்னும் இதழ் "இதுபோன்ற அவமானங்கள் ... வழக்கமானதுதான்" என்று தெரிவித்துள்ளது.

பாங்குரா என்ற மாவட்டத்தில் எடுக்கப்பட்ட விருது பெற்ற படத்திலுள்ள இரண்டு யானைகளுக்கு என்ன நடந்தது என்பது தெளிவாக தெரியவில்லை.

யானைகள் காரணமாக ஏற்படும் மனித மரணங்கள் பற்றிய செய்தி அடிக்கடி இந்த மாவட்டத்திலிருந்து வருகிறது.

மனிதர்கள் - யானைகள் மோதல்களுக்கு இதுவும் ஒரு காரணமென்று அந்தப் புகைப்படத்துடன் கூடிய விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

பிப்லாப் ஹஸ்ரா இந்த புகைப்படத்தை எடுத்துக் கொண்டிருந்தபோது, "ஊளையிடும் ஒரு ஆடவர் கூட்டம்" இரண்டு யானைகளை நோக்கி "எரியும் தார் பந்துகள் மற்றும் பட்டாசுகளை" எறிந்ததாக அக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காணொளிக் குறிப்பு, சாதாரண பொருட்களின் அசாத்திய கண்டுபிடிப்புகள்: அசத்தும் இந்தியர்

"குழப்பமான" சூழ்நிலையில் யானைக்குட்டியானது கத்திக் கொண்டே ஓடியதை அவர் நினைவுக் கூர்கிறார்.

"பல நூற்றாண்டுகளாக துணைக் கண்டத்தைச் சுற்றி வரும் இந்த புத்திசாலித்தனமான மற்றும் மென்மையான சமூக விலங்குகளின் நரகம், இப்போது இங்குதான் இருக்கின்றது" என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த புகைப்படம் சமூக ஊடகங்களில் அதிக கவனத்தை ஈர்த்தது.

பங்குராவில் வசிக்கும் மைனாக் மசூம்டெர் என்பவர், யானைகளின் வாழ்விடங்கள் கடுமையான அழிவுக்கு" உள்ளாக்கப்படுவதற்கும் அவை மோசமான துஷ்பிரயோகங்கள் மற்றும் சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்படுவதற்கு அந்த கிராமத்தினரே பொறுப்பு என்று கருத்துத் தெரிவித்துள்ளார்.

ஆனால், பயிர்கள் மற்றும் விவசாய நிலங்களை சேதப்படுத்துவதும், அப்பாவி மக்களை கொல்வது யானைகளுக்கு பேரழிவை ஏற்படுத்துவதாக அவர் கூறினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :