தாயகம் திரும்பினார்கள், வட கொரியாவில் தடுத்து வைக்கப்பட்ட மலேசியர்கள்

வட கொரியாவும், மலேசியாவும் தங்களுக்கு இடையில் ஏற்பட்ட ராஜீய முறுகல் நிலையை முடித்துக் கொள்வதற்கானஒப்பந்தத்தை உருவாக்கிய பின்னர், வட கொரியாவை விட்டு வெளியேற தடைவிதிக்கப்பட்டிருந்த 9 மலேசியர்கள் தாயகம் திரும்பியுள்ளனர்.

வட கொரியாவுக்கான மலேசியாவின் கவுன்சிலர் மெகட் நோர் அஸ்ரின் மெட் ஸயின்

பட மூலாதாரம், European Photopress Agency

படக்குறிப்பு, தாயகம் திரும்பியோரில் அடங்கிய வட கொரியாவுக்கான மலேசியாவின் கவுன்சிலர் மெகட் நோர் அஸ்ரின் மெட் ஸயின் (நடுவில்)

கடந்த மாதம் கோலாலம்பூர் விமான நிலையத்தில் வைத்து கொல்லப்பட்ட கிம் ஜாங் நம் தொடர்பாக எழுந்த சர்ச்சையின் விளைவாக இவ்விரு நாடுகளும் தங்கள் நாட்டில் இருந்த அடுத்த நாட்டவர் வெளியேறக் கூடாது என்று தடை விதித்திருந்தன.

விசாரனைக்கு உள்ளாக்கப்பட இருந்த இரண்டு வட கொரியர்கள் மலேசியாவை விட்டு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.

மலேசியா, கிம் ஜங் நம்மின் உடலையும் வட கொரியா அனுப்பியுள்ளது.

கிம் ஜங் நம்மின் கொலையை வட கொரியா திட்டமிட்டு நடத்தியதாக பலத்த சந்தேகம் நிலவுகிறது.

மலேசியாவுக்கு திரும்பியோரை வரவேற்ற மலேசிய வெளியுறவு அமைச்சர் அனிஃபான் அமான் (இளஞ்சிவப்பு கோட் அணிந்திருப்பவர்)

பட மூலாதாரம், European Photopress Agency

படக்குறிப்பு, மலேசியாவுக்கு திரும்பியோரை வரவேற்ற மலேசிய வெளியுறவு அமைச்சர் அனிஃபான் அமான் (இளஞ்சிவப்பு கோட் அணிந்திருப்பவர்)

வட கொரிய தலைவர் கிம் ஜங் உன்னின் ஒன்றுவிட்ட மூத்த சகோதரர் தான் கிம் ஜங் நம். மறைந்த கிம் ஜங் இல்லின் மூத்த மகனான கிம் ஜங் நம், வட கொரியாவை தலைமையேற்று நடத்துவதில் ஏற்பட்ட சர்ச்சையால், தந்தையின் மரணத்திற்கு பின்னர் வட கொரியாவுக்கு வெளியே நாடு கடந்து வாழ்ந்து வந்தார்.

உறவினர்களால் வரவேற்கப்பட்ட 9 மலேசியர்களும், வெள்ளிக்கிழமை அதிகாலையில் கோலாலம்பூர் விமான நிலையத்தில் வைத்து பெரியதொரு ஊடக சந்திப்பை நடத்தினர்.

வட கொரியாவுக்கான மலேசியாவின் கவுன்சிலர் மெகட் நோர் அஸ்ரின் மெட் ஸயின், தூதரக ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் இந்த 9 பேரில் அடங்குகின்றனர்.

வட கொரிய தலைவர் கிம் ஜங் உன்னின் ஒன்றுவிட்ட மூத்த சகோதரர் தான் கிம் ஜங் நம்

பட மூலாதாரம், AP

படக்குறிப்பு, வட கொரிய தலைவர் கிம் ஜங் உன்னின் ஒன்றுவிட்ட மூத்த சகோதரர் தான் கிம் ஜங் நம்

வட கொரியாவை விட்டு வெளியேறக் கூடாது என்று கூறப்பட்டவுடன் தவறு எதுவும் செய்யவில்லை என்பதால் மிகவும் கவலை அடைந்ததாக கவுன்சிலர் தெரிவித்தார்.

ஆனால். வட கொரிய அதிகரிகளால் அவர்கள் யாரும் துன்புறுத்தப்படவில்லை என்றும், எப்போதும் போல இயல்பாக வாழலாம் என்று உறுதியளிக்கப்பட்டது என்றும் அவர் மேலும் கூறினார்.

மலேசிய விமானப்படையால் உறுப்பினர்களால் இயக்கப்பட்ட வணிக ஜெட் விமானத்தில் இந்த 9 பேரும் மலேசியா திரும்பியுள்ளனர்.

மேலதிக தகவல்களுக்கு:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்