கிம் ஜோங் நாம் கொலை: சந்தேக நபர்களில் நால்வர் உளவாளிகள் - மலேசியா
கிம் ஜோங் நாமின் கொலையோடு தொடர்புடையதாக சந்தேகப்படும் வட கொரியாவை சேர்ந்த நான்கு பேரும் உளவாளிகள் என்று நம்புவதாக தென் கொரிய உளவு நிறுவனம் கூறியுள்ளது.

பட மூலாதாரம், AP
வட கொரிய தலைவர் கிம் ஜோங் உன்னின் ஒன்று விட்ட மூத்த சகோதரர் கிம் ஜோங் நாம், கோலாலம்பூர் விமானநிலையத்தில் வைத்து விஷம் தெளித்து கொல்லப்பட்டதாக மலேசிய காவல்துறையினர் தெரிவித்தனர்.
மலேசியாவால் குறிப்பிடப்படும் ஏழு சந்தேக நபர்களில் நான்கு பேர் பியோங்யாங்கின் உள்துறை பாதுகாப்பு அமைச்சகத்திற்காக வேலை செய்வோர் என்று சோல் உளவு துறை அதிகாரிகள் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்திருக்கின்றனர்.
மலேசியாவால் தேடப்படும் வட கொரியர்கள் யார் என்பது தெளிவாக தெரியவில்லை.
இரண்டு வாரங்களுக்கு முன்னர் மலேசிய விமான நிலையத்தின் சோதனை அரங்கில் வைத்து இரு பெண்கள் சந்தித்து பேசிய பின்னர் கிம் ஜோங் நாம் மரணமடைந்தார்.
தொலைக்காட்சி குறும்புக் காட்சியில் பங்குபெறுகிறோம் என்று எண்ணியதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண :பிபிசி தமிழ் யு டியூப்












