மலேசியாவில் வட கொரியர்களுக்கு விசா இல்லாத பயண சலுகை ரத்து: கிம் கொலை எதிரொலி?
வட கொரிய மக்களுக்கு தங்கள் நாட்டில் அனுமதித்திருந்த விசா இன்றி பயணம் செய்யும் சலுகையை மலேசியா நிறுத்தியுள்ளது.

பட மூலாதாரம், ROYAL MALAYSIA POLICE
பாதுகாப்பு காரணங்களை மேற்கோள்காட்டி மலேசிய துணை பிரதமர் அஹ்மத் ஜாஹித் ஹமீதி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
வட கொரிய தலைவரின் உறவினரான கிம் ஜோங்-நாம் கொலையில் தொடர்புள்ளதாக சந்தேகித்து பல வடகொரியர்களை மலேசியா தேடி வரும் சூழலில், விசா இன்றி பயணம் செய்வதை நிறுத்தும் நடவடிக்கையை அந்நாடு எடுத்துள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் 13-ஆம் தேதியன்று, முகத்தில் வி எக்ஸ் எனப்படும் நரம்பு மண்டலத்தைத் தாக்கும் கொடிய விஷமான வி எக்ஸ் ரசாயனம் தாக்கப்பட்டு, வட கொரிய தலைவரின் ஒன்றுவிட்ட மூத்த சகோதரர் கிம் ஜோங்-நாம் உயிரிழந்தார்.
கடந்த புதன்கிழமையன்று, இந்த கொலை தொடர்பாக இரு பெண்கள் மீது கிம்மின் கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், AP
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் உள்ள விமான நிலையத்திலிருந்து பயணம் செய்ய கிம் தயாராகிக் கொண்டிருந்த போது வியட்நாமை சேர்ந்த டுவான் தி உவங் மற்றும் இந்தோனீஷியாவை சேர்ந்த சீட்டி அய்ஷ்யா ஆகியோர் அவருடைய முகத்தில் கொடியை விஷமான வி எக்ஸ் ரசாயனத்தை பூசியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்












