வடகொரியாவுக்கு அனுப்பப்படும் கின் ஜோங் நம்மின் உடல்
ஆறு வாரங்களுக்கு முன்பு கொல்லப்பட்ட, வடகொரியத் தலைவரின் ஒன்று விட்ட சகோதரர் கின் ஜோங் நம்மின் உடல், வடகொரியா தலைநகர், பியாங்யாங்குக்கு திரும்ப அனுப்பப்படுவதாக மலேசிய பிரதமர் நஜீப் ரஜாக் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
இறந்தவரின் உறவினர்களிடம் இருந்து, கடிதம் கிடைத்ததை அடுத்து, பிரேதப் பரிசோதனை அதிகாரி உடலை கொடுக்க ஒப்புக்கொண்டதாக அவர் தெரிவித்தார்.
மேலும், வடகொரியாவை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டிருந்த ஒன்பது மலேஷியர்களும், தற்போது தங்கள் வீடுகளுக்கு திரும்பிக் கொண்டிருப்பதாக மலேசிய பிரதமர் தெரிவித்தார்.
கின் ஜோங் நம், கோலாலம்புர் சர்வதேச விமான நிலையத்தில் நஞ்சு கொடுத்துக் கொல்லப்பட்டார்.
அவரது கொலை தொடர்பாக இரண்டு பெண்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்












