இந்தியா: அரசியல் சர்ச்சையாக மாறிய ரூபாய் நோட்டு சிக்கல்
இந்தியாவில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அரசின் திடீர் முடிவு அரசியல் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images
கடந்த செவ்வாய்கிழமையன்று எடுக்கப்பட்ட இந்த முடிவானது பணத்தை பதுக்குபவர்கள் மற்றும் வரி ஏய்ப்பு செய்பவர்களை பிடிக்க உதவியாக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசை கடுமையாக விமர்சிப்பவரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், இது ஒரு மோசடி என்றும், இந்த முடிவு பெரும்பாலும் ஏழைகளைப் பாதிப்பதாகவும் புகார் கூறியுள்ளார்.
கெஜ்ரிவாலின் இந்த கருத்துக்கள் அடிப்படையற்றது என ஆளுங்கட்சியான பாரதீய ஜனதா தெரிவித்துள்ளது.
ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதற்கான தட்டுப்பாடு தொடர்ந்து வருகிறது.
உணவுப் பொருட்கள் வாங்குவதற்கும் எரிபொருள் வாங்குவதற்கும் பணமின்றி தவித்து வருவதாக பல கிராமவாசிகள் தெரிவித்துள்ளனர்.








