பொன்னியின் செல்வன்: சினிமா விமர்சனம்

பட மூலாதாரம், JEYAM RAVI/twitter
நடிகர்கள்: விக்ரம், கார்த்தி, விக்ரம் பிரபு, ஜெயம் ரவி, ஜெயராம், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், பிரகாஷ் ராஜ், ஜெயச்சித்ரா, ஐஸ்வர்யா லக்ஷ்மி, சரத்குமார், பார்த்திபன்; ஒளிப்பதிவு: ரவிவர்மன்; இசை: ஏ.ஆர். ரஹ்மான்; இயக்கம் மணிரத்னம்.
மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, விக்ரம், பிரகாஷ் ராஜ், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோர் நடித்திருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெள்ளிக்கிழமையன்று வெளியாகியிருக்கிறது. இந்தப் படத்திற்கு தற்போது ஊடகங்களில் விமர்சனங்கள் வெளியாகிவருகின்றன.
பொன்னியின் செல்வன் நாவலின் கதை எல்லோருக்கும் தெரிந்ததுதான். இந்தப் படத்தின் கதை என்ன என்பதைப் பார்க்கலாம்: ராஷ்டகூடர்களுடனான போர் முடிந்த பிறகு, தன் நண்பன் வந்தியத்தேவனை அழைக்கும் சோழ நாட்டு பட்டத்து இளவரசன் ஆதித்த கரிகாலன், கடம்பூர் அரண்மனையில் ஏதோ சதித் திட்டம் நடக்கவிருப்பதாகவும் அது என்ன என்பதைத் தெரிந்துகொண்டுவிட்டு, தனது தந்தை சுந்தர சோழனிடமும், சகோதரி குந்தவைப் பிராட்டியிடமும் விஷயத்தைத் தெரிவிக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறான்.
அதேபோல, கடம்பூர் அரண்மனையில் ஒரு சதிக் கூட்டம் பெரிய பழுவேட்டரையர் தலைமையில் நடக்கிறது. அந்தக் கூட்டத்தில், சுந்தர சோழருக்குப் பிறகு ஆதித்த கரிகாலனுக்குப் பதிலாக கண்டராதித்தரின் மகன் மதுராந்தகனை அரசனாக்க வேண்டுமென பேசப்படுகிறது.
இதற்குப் பிறகு, தஞ்சைக்குச் செல்லும் வழியில் பழுவேட்டரையரின் மனைவி நந்தினியைச் சந்திக்கும் வந்தியத்தேவன் அவளிடமிருந்து முத்திரை மோதிரத்தைப் பெறுகிறான். பிறகு சுந்தர சோழரைச் சந்தித்து நடக்கும் சதிகள் பற்றித் தெரிவிக்கிறான். குந்தவையையும் சந்திக்கிறான். அப்போது குந்தவை, வந்தியத்தேவன் இலங்கைக்குச் சென்று தன் சகோதரன் அருள்மொழி வர்மனைச் சந்தித்து அழைத்துவர வேண்டுமெனக் கூறுகிறாள்.

பூங்குழலி உதவியுடன் இலங்கைக்குச் செல்லும் வந்தியத்தேவன் அருள்மொழிவர்மனைச் சந்திக்கிறான். நண்பனாகிறான். இதற்குள், அவனைக் கைது செய்து அழைத்துவர கப்பல்களை அனுப்புகிறார்கள். அந்தக் கப்பல்களில் ஒன்றை பாண்டிய நாட்டு ஆபத்துதவிகள் கைப்பற்றுகிறார்கள். அதில் வந்தியத்தேவனை கட்டிப்போடுகிறார்கள். அவனைக் காப்பாற்ற அதில் ஏறும் அருள்மொழி வர்மனும் வந்தியத்தேவனும் அந்தக் கப்பல் கவிழ்ந்ததும் நீரில் மூழ்குகிறார்கள். அருள்மொழி வர்மன் இறந்துவிட்டதாக சோழநாட்டில் செய்தி பரவுகிறது. இத்துடன் பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் கதை முடிந்தது.

பட மூலாதாரம், 7screenstudios
வழக்கமான காட்சியமைப்பு
ஒரு நாவலைத் திரைப்படமாக்கும்போது சந்திக்கும் பல சிக்கல்களை பொன்னியின் செல்வன் திரைப்படமும் எதிர்கொண்டுள்ளதாக தினமணியின் விமர்சனம் கூறுகிறது.
"பலதரப்பட்ட கதாபாத்திரங்கள் கொண்ட கதைக் களத்தில் யார் யாருக்கு என்ன பாத்திரம், எதற்காக குறிப்பிட்ட பாத்திரம் இப்படி நடந்துகொள்கிறது, அதற்கும் அந்தக் கதாபாத்திரத்திற்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்விகள் முதல் பாதியில் ஆங்காங்கே தொக்கி நிற்கின்றன. ஏனெனில் இளம் ரசிகர்களில் பெரும்பாலானவர்கள் பொன்னியின் செல்வனைப் படித்திருக்க வாய்ப்பில்லை.
திரைப்படத்தின் கதைக் கருவிற்குள் நுழைவதற்கு முன்பாக, கதாபாத்திரங்கள் யார், எதற்காக என்ற எந்த விளக்கமும் பார்வையாளர்களுக்குக் தெளிவாக கடத்தும்படியாக அமையாதது திரைப்படத்திற்கு தொய்வை ஏற்படுத்துகிறது.
பழிவாங்கல், நயவஞ்சகம் என அரசியல் சதுரங்கத்தில் நடக்கும் சம்பவங்கள் போன்றவற்றில் ரசிகர்களுக்கு உணர்வு ரீதியாக நெருக்கத்தை ஏற்படுத்தித்தர படக்குழு முயன்றிருக்கலாம்.

பட மூலாதாரம், MADRAS TALKIES
நாவல் என்ற வகையிலிருந்து கதையை ரசிக்க முயற்சித்தாலும் வழக்கமான காட்சியமைப்புகள் ஏற்கனவே பார்த்த காட்சிகளை நினைவுபடுத்துகின்றன. குறிப்பாக சண்டைக் காட்சிகள் மீண்டும் மீண்டும் தமிழ் சினிமா பார்த்த பழகிப்போன வகைகளிலேயே அமைக்கப்பட்டிருக்கின்றன." என்கிறது தினமணியின் விமர்சனம்.
நடிகர்கள் எப்படி செய்துள்ளார்கள்?
பொன்னியின் செல்வன் நாவலை வாசிக்காதவர்கள் புரிந்துகொள்ளும் வகையிலான விவரங்கள் படத்தில் இல்லை என்கிறது இந்து தமிழ் திசையின் விமர்சனம்.
"நாவலை வாசித்தவர்கள் கட்டமைத்திருக்கும் கற்பனை உலகை எட்ட நினைத்திருக்கும் இயக்குநர் மற்றும் படக்குழுவின் முயற்சி மெச்சத்தக்கது. ஆனால், வாசிக்காதவர்களுக்கு கதையும், மாந்தர்களும் புதிது எனும்போது, அவர்களுக்கான டீடெய்லிங் மிஸ்ஸிங். அதேபோல நாவலை அப்படியே படமாக்காமல், படத்தின் கால அளவிற்கேற்ப பல இடங்கள் கத்தரிக்கப்பட்டு சுருக்கப்பட்டுள்ளன.
படத்தின் பலமே அதன் தேர்ந்த நடிகர்கள் கூட்டம்தான். ஆதித்த கரிகாலனாக நடித்துள்ள விக்ரம். நந்தினியை நினைத்து உருகும் காட்சிகளிலும், களத்தில் புழுதிபறக்க எதிரிகளை களமாடும் காட்சிகளிலும் ஆதித்த கரிகாலனுக்கான உருவமாக காட்சியளிக்கிறார். இடத்திற்கேற்ப தன்னை தகவமைத்து, சாமர்த்திய வீரனாக வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்துகிறார் கார்த்தி. இரண்டாம் பாதியில் கப்பலில் நடக்கும் சண்டைக் காட்சிகள், போர்க் காட்சிகள், தோட்டாதரணியின் கலை ஆக்கம் படத்தின் தரத்தை கூட்டுகின்றன. ரவி வர்மனின் ஒளிப்பதிவில் பிரமாண்ட காட்சி அனுபவம் கண்களுக்கு விருந்து. குறிப்பாக விக்ரம் ஐஸ்வர்யா ராய் குறித்து சிலாகிக்கும் காட்சிகளில் நிலையில்லாமல் முகத்துக்கேற்றபடி நகரும் கேமராவும் அது உருவாக்கும் அனுபவமும் புதுமை.
மொத்தத்தில் நிதானமாக நகரும் திரைக்கதை, சில இடங்களில் பிசகும் கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ், நாவல் வாசிக்காதவர்களுக்கான முழுமையில்லாத காட்சிகள் என சில குறைகள் இருந்தாலும், ரசிகர்களுக்கு காட்சி அனுபவ விருந்து படைக்கிறது பொன்னியின் செல்வன்" என்கிறது இந்து தமிழ் திசை.
சிறப்பான காட்சி - வலுவான கதை சொல்லல்

பட மூலாதாரம், lyca
சிறப்பான காட்சிகளும் வலுவான கதைசொல்லலும் இணைந்த 167 நிமிடங்கள் என இந்தப் படத்தைப் பாராட்டியுள்ளது The Hindu நாளிதழ். சில குறைகளையும் அது சுட்டிக்காட்டியுள்ளது.
"ஆனால், இம்மாதிரி மிகப் பெரிய படத்தில் பிரச்சனை என்னவென்றால், ஒன்றிரண்டு பாத்திரங்களைத் தவிர மற்ற பாத்திரங்களுக்கு மிகக் குறைவாகவே இடம் கிடைக்கும். பூங்குழலிக்கும் இந்தக் கதைக்கும் என்ன தொடர்பு என படம் பார்ப்பவர்கள் யோசிப்பார்கள். அதேபோல வேறு சில பாத்திரங்களும் திடீரென வருகின்றன. ஆழ்வார்க்கடியான் நம்பியாக வரும் ஜெயராம் மட்டுமே மனதில் பதிகிறார். மற்றொரு பிரச்சனை, படத்தில் வரும் பல பாத்திரங்கள் பழந்தமிழ் பேசுகிறார்கள். சாதாரண பார்வையாளர் அதனைப் புரிந்துகொள்வது கடினமாக இருக்கக்கூடும்.
இரண்டாம் பாதியில் வரும் கடல் காட்சிகள் இன்னும் சிறப்பாக எடுக்கப்பட்டிருக்கலாம். தோட்டா தரணியின் கலை இயக்கம் சிறப்பாக இருக்கிறது. ரவி வர்மனின் கேமரா பாத்திரங்களுடனேயே பயணிக்கிறது. ஏ.ஆர். ரஹ்மானின் இசை புதுமையானதாக இருக்கும் அதே நேரம், யுத்த காட்சிகளை உயர்த்திக் காட்டுகிறது. பாடல்கள் கதையின் போக்கிற்கு உதவும் வகையில் இடம்பெற்றுள்ளன.
உறுத்தாத வசனங்கள்
மிகக் குறுகிய காலத்தில் பல விஷயங்கள் நடப்பதால், புத்தகத்தைப் படிக்காதவர்கள் அதைப் புரிந்துகொள்ள சிரமப்பட வேண்டியிருக்கும் என்கிறது டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழின் விமர்சனம்.
"இந்த நாவலில் செய்யப்பட்டிருக்கும் மாற்றங்களும் அது சுருக்கப்பட்டிருக்கும் விதமும் கதையின் போக்கிற்கு உதவுகின்றன. ஜெயமோகனின் வசனங்கள் பழமையானவையாகவும் அதே சமயம் உறுத்தாத வகையிலும் இருக்கின்றன.
படத்தில் நிறைய பாத்திரங்கள் அறிமுகப்படுத்தப்படுவதால் அவர்களுக்கு இடையிலான வரலாறு போன்றவற்றில் நிறைய விளக்கம் தேவைப்படுகிறது. மிகக் குறுகிய காலத்தில் பல விஷயங்கள் நடப்பதாகவும் தோன்றுகிறது. இதனால், புத்தகத்தைப் படிக்காதவர்கள் அதனைப் புரிந்துகொள்ள சிரமப்பட வேண்டியிருக்கும். புதிதாக அறிமுகப்படுத்தப்படும் பாத்திரத்தைப் புரிந்துகொள்வதற்கு முன்பாகவே மற்றொரு பாத்திரம் புதிதாக அறிமுகப்படுத்தப்படுகிறது. இடைவேளை நெருங்கும்போதுதான், படத்தில் எது எப்படி என்பது புரிய ஆரம்பிக்கிறது. அரண்மனை சதி தொடர்பான காட்சிகள் நம்மை வெகுவாக ஆட்கொள்கின்றன.
நடிகர்கள் தேர்வு மிகச் சிறப்பாக அமைந்திருக்கிறது. விளையாட்டுத்தனமான வந்தியத்தேவனாக கார்த்தி சிறப்பாக நடித்திருக்கிறார். நந்தினி பாத்திரத்தில் ஐஸ்வர்யா ராய் மிகவும் பொருந்திப் போகிறார். அதேபோல, விக்ரம், ஜெயம் ரவி, த்ரிஷா ஆகியோரும் அரச குடும்பத்தினராக சிறப்பாகவே நடித்திருக்கிறார்கள்." என்கிறது டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ்.
புத்தகம் படிக்காதவர்களுக்கு...
நிறையப் பாத்திரங்களும் வெவ்வேறு காலகட்டங்களும் வருவதால் புத்தகத்தைப் படிக்காதவர்கள் மிகுந்த கவனத்துடன் படத்தைப் பார்க்க வேண்டும் என்கிறது இந்தியா டுடேவின் விமர்சனம்.

பட மூலாதாரம், LYCAproductions
"ஐந்து பாகங்களைக் கொண்ட பொன்னியின் செல்வனில் எல்லாவற்றையும் மிகத் துல்லியமாக விவரித்திருப்பார் கல்கி. மணி ரத்னம் இயக்கியிருக்கும் இந்த பொன்னியின் செல்வனின் முதல் பாகத்தில், நாவலின் முதல் மூன்று பாகங்களில் இடம்பெறும் சம்பவங்கள் வருகின்றன. தொழில்நுட்ப ரீதியாகப் பார்த்தால் மிக உயர்ந்த தரத்தில் இருக்கிறது இந்தப் படம்.
ஆனால், கதை என்று வரும்போது, இந்த நாவலைப் படித்தவர்களுக்கு உற்சாகம் ஏற்படுத்தாத வகையிலேயே இருக்கிறது. முதல் மூன்று பாகங்களை ஒரே படமாகச் சுருக்கிவிட்டதால், வந்தியத்தேவனைத் தவிர்த்த மற்ற யாருக்கும் பெரிய அளவில் காட்சிகள் இல்லை. தஞ்சாவூரிலிருந்து பழையாறைக்கும் பிறகு இலங்கைக்கும் தாவுகிறது கதை. பாத்திரங்களும் கூடச் சேர்ந்து தாவுகிறார்கள். நிறையப் பாத்திரங்களும் வெவ்வேறு காலகட்டங்களும் வருவதால் புத்தகத்தைப் படிக்காதவர்கள் மிகுந்த கவனத்துடன் படத்தைப் பார்க்க வேண்டும்.
கிராஃபிக்ஸ் காட்சிகள் மிகுந்த உயர் தரத்தில் இருக்கின்றன. வரலாற்றுப் படங்களுக்கென்றே இருக்கும் வழக்கமான பாணியிலிருந்து மாறுபட்டும் இருக்கின்றன. வந்தியத்தேவன் நந்தினியைச் சந்திப்பது, குந்தவை - நந்தினி மோதல், ஆதித்த கரிகாலனின் தனிப் பேச்சு, அருள்மொழிவர்மனுக்கும் வந்தியத்தேவனுக்கும் இடையிலான சண்டை என படத்தில் உச்சகட்டமான தருணங்கள் ஆங்காங்கே உண்டு.
கார்த்தி, ஜெயராம் தவிர, ஐஸ்வர்யா ராய்தான் படம் முழுக்க நிறைந்திருக்கிறார். முதல் ஃப்ரேமிலேயே மனம் கவர்வதால், நந்தினியின் பாத்திரத்திற்கு மிகப் பொருத்தமாக இருக்கிறார். குந்தவையின் பாத்திரத்தில் வரும் த்ரிஷாவும் தனது இருப்பை வலுவாக நிலைநிறுத்தியிருக்கிறார்.
ஐஸ்வர்யா லக்ஷ்மி ஏற்று நடித்திருக்கும் பூங்குழலி பாத்திரத்திற்கு பெரிய முக்கியத்துவம் தரப்படவில்லை. வானதியின் பாத்திரமும் அதேபோலத்தான். ஏ.ஆர். ரஹ்மானின் பின்னணி இசை தனித்துத் தெரிகிறது.
ஒரு முக்கியமான பாத்திரம் யார் என்பதைக் காட்டுவதோடு முதல் பாகம் நிறைவடைகிறது. இதன் இரண்டாம் பாகம் 2023ல் வெளியாகும்" என்கிறது இந்தியா டுடேவின் விமர்சனம்.

சிறப்பான காட்சிகளும் வலுவான கதைசொல்லலும் இணைந்த 167 நிமிடங்கள் என இந்தப் படத்தைப் பாராட்டியுள்ளது The Hindu நாளிதழ். சில குறைகளையும் சுட்டிக்காட்டியுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்