ஆஸ்கர் விருதுகள் - சிறந்த நடிகருக்கான விருதை வென்றார் வில் ஸ்மித்

சிறந்த நடிகர் - வில் ஸ்மித்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சிறந்த நடிகர் - வில் ஸ்மித்

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் 94வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது.

இதுவரை வழங்கப்பட்ட விருதுகளில், சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு, சிறந்த படத்தொகுப்பு, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த பின்னணி இசை, சிறந்த சவுண்ட், சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் ஆகிய பிரிவுகளில், 'டுன்' என்ற திரைப்படம் விருதுகளை குவித்துள்ளன. சிறந்த அனிமேஷன் படமாக, டிஸ்னி தயாரித்த 'என்காண்டோ' (Encanto) திரைப்படம் தேர்வாகியுள்ளது.

சிறந்த நடிகருக்கான விருதை, 'கிங் ரிச்சர்ட்' என்ற திரைப்படத்திற்காக நடிகர் வில் ஸ்மித் வென்றுள்ளார். சிறந்த நடிகைக்கான விருதை, 'தி ஐஸ் ஆஃப் டாமி ஃபயே' திரைப்படத்திற்காக, நடிகை ஜெசிகா சாஸ்டெய்ன் வென்றுள்ளார்.

ஆறு விருதுகளைப் பெற்ற திரைப்படம் - டுன்

பட மூலாதாரம், WARNER BROS

படக்குறிப்பு, ஆறு விருதுகளைப் பெற்ற திரைப்படம் - டுன்

சிறந்த துணை நடிகைக்கான விருது, 'வெஸ்ட் சைட் ஸ்டோரி' திரைப்படத்தில் நடித்த ஹரியானா டிபோஸ் என்ற நடிகை வென்றுள்ளார். இவர் நடிப்பு பிரிவில், ஆஸ்கர் விருது பெறும் முதல் குயர் பெண் என்பது குறிப்பிடத்தக்கது. கோடா திரைப்படத்திற்காக நடிகர் டிராய் காஸ்டர் சிறந்த துணை நடிகராக தேர்வு செய்யப்பட்டார்.

Oscar 2022

பட மூலாதாரம், Getty Images

இம்முறை, ஜென் ஷாம்பியன் இயக்கிய 'தி பவர் ஆஃப் டாக்' என்ற திரைப்படம் 12 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

YouTube பதிவை கடந்து செல்ல, 1
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு, 1

கடந்த ஆண்டு சவுண்ட் ஆஃப் மெட்டலுக்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ரிஸ் அகமது, அனீஸ் கரியாவின் லைவ் ஆக்சன் குறும்படமான தி லாங் குட்பைக்காக இந்த ஆண்டு முதல் அகாடமி விருதை வென்றுள்ளார்.

'கோடா'வில் மீனவர் மற்றும் தந்தையாக நடித்ததற்காக சிறந்த துணை நடிகருக்கான அகாடமி விருதை வென்ற முதல் காது கேளாதவர் என்ற பெருமையை டிராய் கோட்சூர் பெற்றார். இந்த வெற்றி அவருக்கு ஒரு உணர்ச்சிகரமான தருணமாக அமைந்தது. நிகழ்ச்சி மேடையில் பேசிய டிராய் கோட்சூர், விருது பெற்றதற்காக தனது தந்தைக்கு நன்றி தெரிவித்தார். எனது தந்தையே எனது 'ஹீரோ' என்று அவர் அழைத்தார். 53 வயதாகும் டிராய் கோட்சூர், தனது மிகப்பெரிய ரசிகர்கள் தனது மனைவி மற்றும் மகள் என்று கூறினார். இந்த விருதை காதுகேளாத நிலையில் பிள்ளைகளை வளர்த்தெடுக்கும் கோடா சமூகத்துக்கு அர்ப்பணிப்பதாக டிராய் கோட்சூர் தெரிவித்தார்.

ஜப்பானின் 'டிரைவ் மை கார்' படம், சிறந்த சர்வதேச அம்சத்திற்கான ஆஸ்கர் விருதை வென்றுள்ளது. மனைவியை இழந்த நபருக்கும் அவருக்கு ஹிரோஷிமாவைச் சுற்றி காண்பிக்க வாடகைக்கு அமர்த்தப்பட்ட பெண்ணுக்கும் இடையிலான பிணைப்பை காண்பிக்கும் வகையில் இந்த படம் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

சிறந்த அனிமேஷன் திரைப்படம் - என்காண்டோ

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சிறந்த அனிமேஷன் திரைப்படம் - என்காண்டோ

க்ரூயெல்லா படத்திற்காக ஜென்னி பீவன் சிறந்த ஆடை வடிவமைப்பிற்கான ஆஸ்கர் விருதை வென்றுள்ளார். அவர் சிறந்த ஆடை வடிவமைப்பிற்கான அகாடமி விருதுக்கு பதினொரு முறை பரிந்துரைக்கப்பட்டார், எ ரூம் வித் எ வியூ (1985) படத்திற்காக மூன்று விருதுகளை வென்றார், அதற்காக அவர் ஜான் பிரைட்டுடன் மேட் மேக்ஸ்: ப்யூரி ரோடு (2015) படத்துக்கான விருதை பகிர்ந்தார். இதேபோல க்ரூல்லா (2021) படத்துக்காக சிறந்த ஆடை வடிமைப்பாளர் விருதையும் இவர் வென்றுள்ளார்.

ஆஸ்கர் விழாவில் யுக்ரேனுக்காக பகிரப்பட்ட செய்தி

ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில் யுக்ரேன் மக்களுக்கு ஆதரவைத் தெரிவிக்கும் வாசகங்கள் திரையிடப்பட்டன. முன்னதாக இந்த விழாவில் யுக்ரேனிய அதிபர் ஸெலென்ஸ்கி காணொளி காட்சி வாயிலாக தோன்றிப் பேசுவார் என்று கூறப்பட்டது. ஆனால் அதற்குப் பதிலாக, திரையில் சில இடம்பெற்ற வாசகங்களில் "மோதல் காலங்களில் நமது மனிதாபிமானத்தை வெளிப்படுத்த திரைப்படம் ஒரு முக்கியமான வழியாகும், உண்மையில் மில்லியன் கணக்கான குடும்பங்கள் யுக்ரேனில் உணவு, மருத்துவ பராமரிப்பு, சுத்தமான நீர் மற்றும் அவசர சேவைகளின் தேவைக்காக காத்திருக்கின்றன," என்று கூறப்பட்டிருந்தது.

ஆஸ்கர் விருதுகள் - பட்டியல்:

சிறந்த நடிகர் - வில் ஸ்மித் (திரைப்படம் - கிங் ரிச்சர்ட்)

சிறந்த நடிகை - ஜெசிகா சாஸ்டெய்ன் (திரைப்படம் - தி ஐஸ் ஆஃப் டாமி ஃபயே)

சிறந்த திரைப்படம் - கோடா

சிறந்த இயக்குனர் - ஜென் ஷாம்பியன் (திரைப்படம் - தி பவர் ஆஃப் டாக் )

சிறந்த அனிமேஷன் திரைப்படம் - என்காண்டோ

சிறந்த படத்தொகுப்பு - ஜோ வாக்கர் (திரைப்படம் - டுன்)

சிறந்த துணை நடிகை - ஹரியானா டிபோஸ் (திரைப்படம் - வெஸ்ட் சைட் ஸ்டோரி)

சிறந்த துணை நடிகர் - டிராய் காஸ்டர் (திரைப்படம் - கோடா)

சிறந்த தழுவல் திரைக்கதை - சியான் ஹேதர் (திரைப்படம்- கோடா )

சிறந்த திரைக்கதை - சர் கென்னித் ப்ரானா (திரைப்படம் - பில்ஃபெஸ்ட்)

சிறந்த ஆடை வடிவமைப்பு - ஜென்னி பீவன் (திரைப்படம் - க்ரூயெல்லா)

சிறந்த சர்வதேச திரைப்படம் - டிரைவ் மை கார்

சிறந்த ஆவணப்படம் - சம்மர் ஆஃப் சோல்

சிறந்த பின்னணி பாடல் - நோ டைம் டூ டை (பில்லி ஐலிஷ் மற்றும் ஃபினியஸ் ஒ'கனல்)

சிறந்த பின்னணி இசை - ஹன்ஸ் ஸிம்மர் (திரைப்படம் - டுன்)

சிறந்த ஒளிப்பதிவு - க்ரெக் ஃப்ராசர் (திரைப்படம் - டுன்)

சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் - டுன்

சிறந்த சவுண்ட் - டுன்சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு - டுன்

சிறந்த ஒப்பனை மற்றும் சிகையலங்காரம் - தி ஐஸ் ஆஃப் டாமி ஃபயே

சிறந்த லைவ் ஆக்சன் குறும்படம் - தி லாங் குட்பை

சிறந்த அனிமேஷன் குறும்படம் - தி விண்ட்ஷில்ட் வெப்பர்

சிறந்த ஆவண குறும்படம் - தி குயின் ஆஃப் பாஸ்கெட்பால்

YouTube பதிவை கடந்து செல்ல, 2
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு, 2

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :