நடிகர் சித்தார்த்: "கொலை மிரட்டல் விடுக்கிறார்கள்" - பாஜகவினர் மீது குற்றச்சாட்டு

பட மூலாதாரம், @Actor_Siddharth
தன்னுடைய செல்பேசி எண்ணை பா.ஜ.கவின் தமிழக ஐடி பிரிவு வெளியிட்டதால், கடந்த 24 மணி நேரத்தில் தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் ஏராளமான கொலை மிரட்டல்கள் வருவதாக நடிகர் சித்தார்த் குற்றம்சாட்டியிருக்கிறார்.
இது தொடர்பாக நடிகர் சித்தார்த் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "என்னுடைய செல்பேசி எண்ணை தமிழக பா.ஜ.கவும் பா.ஜ.க. ஐடி செல்லும் வெளியிட்டுள்ளன. இதனால் கடந்த 24 மணி நேரத்தில் எனக்கும் என் குடும்பத்திற்கும் மிரட்டல் விடுத்து 500க்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்திருக்கின்றன. வசவு, பாலியல் துன்புறுத்தல், கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கிறது. அனைத்து எண்களும் பதிவு செய்யப்பட்டு, காவல்துறையிடம் அளிக்கப்பட்டிருக்கிறது.
நான் பேசாமல் இருக்க மாட்டேன். தொடர்ந்து முயற்சித்துப் பாருங்கள்" என்று கூறியுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
மேலும் ஒரு ஸ்க்ரீன் ஷாட்டை வெளியிட்டு, "தமிழக பா.ஜ.கவைச் சேர்ந்தவர்கள் என்னுடைய செல்பேசி எண்ணைக் குறிப்பிட்டு, என்னைத் தாக்கும்படி கூறி வெளியிட்ட பல சமூகவலைதளப் பதிவுகளில் இதுவும் ஒன்று. "இவன் இனிமேல வாயே திறக்கக்கூடாது" என்று கூறியுள்ளார்கள்.
நாம் கோவிட்டிலிருந்து தப்பிவிடலாம். இவர்களிடமிருந்து தப்ப முடியுமா?" என்று மற்றொரு ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார் சித்தார்த்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
நடிகர் சித்தார்த் ஏப்ரல் 27ஆம் தேதி வெளியிட்ட ஒரு ட்விட்டர் பதிவில், "நான் ஒரு கண்ணியமான மனிதன் அல்லது புனிதத் துறவி அல்லது தலைவர் என்று பொய் சொன்னால் அறை விழும்" என்று குறிப்பிட்டிருந்தார். அதற்குக் கீழே, "ஆக்ஸிஜன் இல்லை என பொய் சொல்லும் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறிய செய்தி இணைக்கப்பட்டிருந்தது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 3
சித்தார்த்தின் இந்தப் பதிவுக்கு பா.ஜ.க. ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில்தான் மீண்டும் சித்தார்த் இது தொடர்பாகப் பதிவிட்டிருக்கிறார்.
சித்தார்த்தின் குற்றச்சாட்டு குறித்து தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் தகவல் தொழில் நுட்பம் மற்றும் சமூக வலைதளப் பிரிவின் தலைவர் சி.டி. நிர்மல் குமாரிடம் கேட்டபோது, அவர் சித்தார்த்தின் குற்றச்சாட்டுகளை மறுத்தார்.
"நாங்கள் ஒரு போதும் தனி நபர்கள் சார்ந்த விஷயங்களுக்குப் பதிலளிப்பதில்லை. ஏதாவது கட்சித் தலைவர்கள் குற்றச்சாட்டுகளைத் தெரிவித்தால், அதற்குப் பதிலளிப்போம். ஆகவே இந்த விவகாரத்தில் எங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. தனி நபர்கள் யாராவது செய்திருக்கலாம். அதற்கும் கட்சிக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது.
இதுபோல பா.ஜ.கவைச் சேர்ந்த தலைவர்களின் தொலைபேசி எண்களை பிற கட்சியினர் பல முறை வெளியிட்டிருக்கிறார்கள். ஆனால், பா.ஜ.கவின் ஐடி பிரிவு இதுபோலச் செய்வதில்லை" என பிபிசியிடம் கூறினார் சிடி நிர்மல் குமார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 4
இது தொடர்பாக விளக்கம் ஒன்றையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார் நிர்மல் குமார்.
யார் இந்த சித்தார்த்?
தமிழ் திரைப்படத்துறையில் இயக்குநர் ஷங்கரின் பாய்ஸ் படத்தில் அறிமுக நாயகன்களில் ஒருவராக வந்தவர் சித்தார்த். 42 வயதாகும் அவர், நடிப்புத்துறைக்கு முன்பே உதவி இயக்குநராக இயக்குநர் மணிரத்தினத்திடம் பணியாற்றிய அனுபவம் சித்தார்த்துக்கு உண்டு. பாய்ஸ் படத்தைத் தொடர்ந்து மணிரத்தினத்தின் ஆயுத எழுத்து மற்றும் காதலில் சொதப்புவது எப்படி, ஜிகர்தண்டா, காவிய தலைவன், அரண்மனை-2, சிவப்பு, மஞ்சள், பச்சை அருவம் உள்ளிட்ட படங்களில் சித்தார்த் நடித்திருக்கிறார்.
மும்பையில் வசித்து வரும் அவர், சமூகம் சார்ந்த விவகாரங்களில் மனதில் பட்டதை வெளிப்படையாக தெரிவிக்க தமது ட்விட்டர் பக்கத்தை பயன்படுத்தி வருகிறார். குறிப்பாக, கொரோனா பெருந்தொற்று காலத்தில் அரசின் நடவடிக்கைகளை விமர்சித்து வருகிறார். அதில் சமீபத்தில், உத்தர பிரதேச முதல்வரை குறிப்பிடுவது போல சித்தார்த் பதிவிட்ட ட்வீட், பாஜகவினரால் கடுமையாக எதிர்க்கப்பட்டு வருகிறது.
பிற செய்திகள்:
- ஆக்சிஜன் கேட்டு ட்வீட் செய்ததற்காக இளைஞர் மீது வழக்கு
- ஸ்டெர்லைட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடியில் கோலம்
- கொரோனா சிகிச்சைக்கு வந்த அரசு டாக்டர்களை ஜீப்பில் ஏற்றிய டிஎஸ்பி: கடும் எதிர்ப்பு
- கொரோனா சிகிச்சை உபகரணங்கள்: ஐ.நா உதவியை நிராகரித்த இந்தியா
- பருவநிலை மாற்றம்: ஒரு சிறிய பச்சை கல் நமது எதிர்காலம் குறித்து விடுக்கும் எச்சரிக்கை
- யோகி ஆதித்யநாத்: "கொரோனா ஆக்சிஜனுக்கு தட்டுப்பாடு இல்லை" - பிறகு உயிரிழப்பு அதிகரிப்பது ஏன்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: