You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
குக் வித் கோமாளி தீபா சங்கர் - ”சக போட்டியாளர்கள் என்னை கிண்டல் செய்வார்கள்”
சின்ன சின்ன வேடங்களில் சின்னதிரையில் நடித்து மக்களுக்கு அறிமுகமாகி, பின் வெள்ளித்திரையில் பல படங்களில் நடித்ததன் மூலம், தனக்கென ரசிகர்களை கொண்டுள்ளார் தீபா சங்கர்.
cook with comali என்ற சமையல் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கும் தீபா சங்கர் பிபிசி தமிழ் செய்தியாளர் அபர்ணா ராமமூர்த்திக்கு அளித்த அளித்த நேர்காணலிலிருந்து:
கேள்வி: புகழ் உங்களிடம் எவ்வாறு நடந்து கொள்வர்?
பதில்: சமையல் செய்யும்போது சக போட்டியாளர்கள் என்னிடம் உங்களுக்கு சமையல் செய்யத் தெரியுமா. வீட்டில் சமையல் அரை எங்கு உள்ளது என்றாவது தெரியுமா என்று கேலி செய்தனர்.
புகழ் என்னிடம் நன்றாகப் பேசுவார், போட்டியின்போது அவரிடம் பொருட்களைக் கடனாகக் கேட்டேன் அதற்கு அவர் எல்லாவற்றையும் என்னிடமே கேள், நீ சமையல் செய்வதற்கு வந்தியா அல்லது எல்லாரிடமும் கடன் வாங்க வந்தியா என்று கோபப்பட்டார் என நகைச்சுவையுடன் கூறினார்.
கேள்வி: கோமாளியை சமாளிப்பதில் உள்ள சிரமங்கள் என்ன?
பதில்: சுனிதா என்னிடம் கோமாளியாக வரும்போது ஆங்கில மொழி தெரியாததால் கஷ்டப்பட்டேன். பொருட்களை எடுத்து வர ஆங்கிலத்தில் சொல்லிப் புரிய வைக்கக் கஷ்டப்பட்டேன்.
இவங்களுக்கு ஆங்கிலத்தில் பொருட்களைச் சொல்ல வீட்டில் ஆங்கிலம் கற்றுக் கொண்டு வருவேன். நாங்கள் ஆங்கிலத்தில் உரையாடுவது மக்களை கவர்ந்துள்ளது என்பது சந்தோசமாக உள்ளது.
கேள்வி: உங்களுக்கு கோபம் வருமா?
பதில்: எனக்குக் கோபம் அதிகம் வரும். நான் வீட்டில் என் கணவருடன் சண்டை போடுவேன் ஆனால் பொதுவெளியில் அப்படி நடந்து கொள்ளமாட்டேன். தற்போது, என் கணவருடன் சண்டைபோடுவதை விட்டுவிட்டேன். என் கணவர் என்னைத் திட்டினாலும் நான் கண்டு கொள்ளாமல் போய்விடுவேன்.
கேள்வி: சினிமா வாய்ப்புகள் கிடைப்பது எளிதா?
பதில்: சினிமா துறையில் வாய்ப்புகள் கிடைப்பது என்பது கடினம். கொஞ்சக் காலமாக வாய்ப்புகள் இல்லாததால் ஊருக்கே சென்றுவிட்டேன். ஊரில் தொழில் ஆரம்பித்தோம், ஆனால் அது கைகூடவில்லை. மறுபடியும் சினிமா வாய்ப்புகள் தேடி சென்னை வந்தேன்.
"செம" என்ற படத்தில் வாய்ப்பு கிடைத்தது அதில் நடித்தேன். பின்பு பாண்டிய ராஜ் இயக்கத்தில் 'கடைக்குட்டி சிங்கம்' படத்தில் நடித்ததன் மூலம் தற்போது நிறையப் படங்களில் நடித்து வருகிறேன் என்றார்.
கேள்வி: உங்களுக்குப் பிடித்த நபர் யார்?
பதில்: சிவகார்த்திகேயன் போல் ஒரு நல்ல மனிதரை நான் பார்த்ததே இல்லை. குடும்பத்தில் உள்ள அனைவருமே எனக்கு பிடிக்கும் டாக்டர் படத்தில் அவருடன் இணைந்து நடித்துள்ளேன். டாக்டர் படத்தின் மூலம் நிறைய புது உறவுகளைப் பெற்றுக்கொண்டேன்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்