#Pray_for_Nesamani போன்று ட்விட்டரில் ட்ரெண்டாகும் #Pray_for_Samuthirakani

பட மூலாதாரம், Twitter
ஃபேஸ்புக்கில் உள்ள Civil Engineers Learners என்ற பக்கத்தில், கடந்த வருடம் மே 27ஆம் தேதியன்று சுத்தியல் ஒன்றின் படத்தை வெளியிட்டு, இதை உங்கள் நாட்டில் எப்படி அழைப்பீர்கள் எனக் கேட்கப்பட்டிருந்தது. அந்தப் படத்தின் கீழ், துபாயில் வசிக்கும் தமிழரான விக்னேஷ் பிரபாகர் என்பவர், "இதை நாங்கள் சுத்தியல் என்று அழைப்போம்.
இதை எதன் மீதாவது அடித்தால் டங், டங் என சத்தம் வரும். ஜமீன் பங்களாவில் வேலை பார்க்கும்போது பெயிண்ட்டிங் கான்ட்ராக்டர் நேசமணியின் தலையை அவரது அண்ணன் மகன் இதை வைத்து உடைத்துவிட்டார். பாவம்." எனக் குறிப்பிட்டிருந்தார். அடுத்தடுத்த கமென்ட்களில், நேசமணிக்காக பிரார்த்தனை செய்யவும் என்ற பொருளில், #Pray_for_Nesamani என்ற ஹாஷ்டாகையும் பயன்படுத்தியிருந்தார்.
சித்திக் இயக்கத்தில் விஜய், சூர்யா, வடிவேலு, ரமேஷ் கண்ணா ஆகியோர் நடித்த ஃப்ரண்ட்ஸ் திரைப்படத்தில் கட்டட வேலைகளைச் செய்யும் கான்ட்ராக்டராக வரும் வடிவேலுவின் தலையில் ரமேஷ் கண்ணா சுத்தியலைப்போடும் காட்சியையே விக்னேஷ் பிரபாகர் வேடிக்கையாகக் குறிப்பிட்டிருந்தார். அந்தப் படத்தில் வடிவேலுவின் பெயர் நேசமணி. ரமேஷ் கண்ணாவின் பெயர் கிருஷ்ணமூர்த்தி.

பட மூலாதாரம், Civil Engineers Learners
சிறிது சிறிதாக பிரபலமான இந்த ஹாஷ்டாக் சென்னையிலும் பிறகு உலக அளவிலும் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆக ஆரம்பித்தது. இதே போன்று தற்போது #Pray_for_Samuthirakani என்கிற ஹாஷ்டாக் வைரலாகி வருகின்றது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
கொரோனா அச்சம் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பலரும் சமூக வலைதளங்களில் பொழுதுபோக்குக்காக பல்வேறு விஷயங்களை செய்து வருகிறார்கள். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் ட்விட்டர் பக்கத்தில் யாரோ ஒருவர் சமுத்திரக்கனியின் பெயரைக் குறிப்பிட்டு மீம் போட்டிருக்கிறார். அவரைத் தொடர்ந்து பலரும் சமுத்திரக்கனியின் பெயரைக் குறிப்பிட்டு மீம்ஸ் போடத் தொடங்கியிருக்கிறார்கள்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2

X பதிவின் முடிவு, 3
சமுத்திரக்கனியை பல்வேறு கதாபாத்திரங்களுடன் இணைத்து #Pray_for_Samuthirakani என்கிற ஹாஷ்டாக்குடன் சிலர் பதிவிட்டு வருகிறார்கள். இந்த ஹாஷ்டாக் சென்னை அளவிலும், இந்திய அளவிலும் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆக ஆரம்பித்துள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: