You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சிவகார்த்திகேயன்: 'கலக்கப்போவது யாரு' முதல் `டாக்டர்’ வரை - பிறந்தநாள் சிறப்பு பகிர்வு
எந்த ஒரு சினிமா பின்புலமும் இல்லாமல் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்குள் நுழைந்தவர் சிவகார்த்திகேயன். இன்று (பிப்ரவரி 17, அவருடைய 35ஆவது பிறந்தநாள். சிவகார்த்திகேயன் கடந்து வந்த பாதை குறித்த ரீவைண்ட் இதோ!
- திருச்சியில் கல்லூரியில் படிக்கும்போது தான் தனக்குள் இருந்த மிமிக்ரி கலைஞனை சிவா கண்டறிந்திருக்கிறார்.
- எம்பிஏ படிப்பதற்காக சென்னை வந்தவர் நண்பர்களின் அறிவுரைப்படி 'கலக்கப்போவது யாரு' நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். அவருக்குள் இருந்த நகைச்சுவை உணர்வும், மிமிக்ரி கலையும் 'கலக்கப்போவது யாரு' டைட்டிலை அவருக்கு பெற்றுக் கொடுத்தது.
- 'கலக்கப்போவது யாரு' நிகழ்ச்சி தான் சிவா வாழ்க்கையின் திருப்புமுனை என்றே சொல்லலாம். ஆமாம், அந்த நிகழ்ச்சி மூலமாக விஜய் டிவி தொகுப்பாளராக அறிமுகமாகிறார். பின்னர் தொகுப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடர்ந்தார்.
- விஜய் டிவியில் நட்சத்திர தொகுப்பாளரான சிவகார்த்திகேயன், விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளை அவருக்கே உரித்தான நகைச்சுவை பாணியில் தொகுத்து வர சின்னத்திரை ரசிகர்களை சம்பாதித்தார்.
- 2012ஆம் ஆண்டு இயக்குநர் பாண்டிராஜ் இயக்கிய 'மெரினா' திரைப்படத்தின் மூலம் நாயகனாக வெள்ளித்திரைக்குள் காலடி எடுத்து வைத்தார்.அதைத் தொடர்ந்து வரிசையாக பட வாய்ப்பு வர அதனை சரியாக பயன்படுத்திக் கொண்டார்.
- 'ரெமோ' படத்தில் பெண் வேடமிட்டு நடித்து குழந்தைகளுக்கு பிடித்தமான நடிகர் பட்டியலில் இடம் பிடித்து விட்டார்.
- அம்மா பேச்சை மீறாதவர் சிவா. குடும்பத்தினருடன் கலந்தாலோசிக்காமல் முக்கிய முடிவுகளை எடுக்க மாட்டாராம்.
- படத்தில் நடிக்க வருவதற்கு முன்னரே தன்னுடைய அத்தை மகளான ஆர்த்தியை திருமணம் செய்து கொண்டார்.
- சிவா எப்பொழுதும் என் வாழ்வில் மகிழ்ச்சியான தருணம் எதுவென கேட்டால், என் மகள் பிறந்த நாளை மட்டும் தான் சொல்லுவேன் எனப் பல பேட்டிகளில் குறிப்பிட்டிருக்கிறார்.
- சிவா தன்னுடைய மகள் ஆராதனாவை 'கனா' திரைப்படத்தில் பாட வைத்தது அவருடைய ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்டாக அமைந்தது.
- ஆராதனாவிற்கு தமிழ் கற்றுக் கொடுக்க வேண்டும் என்பது சிவாவின் ஆசையாம்.
- எதிர்நீச்சல் படத்தில் இடம்பெற்றுள்ள பாடலில் வருகிற 'ஜோக்கர் இப்போ ஹீரோவானேன்' என்கிற வரியை நிஜ வாழ்க்கையில் சாத்தியப்படுத்தி பலருக்கும் முன்னுதாரணமாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அவருடைய பிறந்தநாளான இன்று இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'டாக்டர்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட இருக்கிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: