மாஸ்டர் திரைப்படம்: ட்விட்டரில் சர்வதேச அளவில் டிரெண்டான நடிகர் விஜயின் MasterThirdLook

சர்வதேச அளவில் டிரெண்டாகி உள்ளது மாஸ்டர் திரைப்படத்தின் மூன்றாவது போஸ்டர்.

நடிகர் விஜயும், விஜய் சேதுபதியும் ஆக்ரோஷமாக கத்தும் புகைப்படங்களை கொண்ட அந்த போஸ்டரை விஜய் ரசிகர்கள் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

இந்த போஸ்டர், படம் குறித்த எதிர்பார்ப்பை தூண்டுவதாக கூறுகிறார்கள் ரசிகர்கள்.

இதுவரை மாஸ்டர் படத்தின் மூன்று போஸ்டர்கள் வெளியாகி உள்ளன. மூன்றாவதாக வெளியான இந்த போஸ்டரில்தான் விஜய் சேதுபதி புகைப்படமும் இடம்பெற்றுள்ளது.

ஏப்ரல் மாதம் திரைக்கு வரும் இந்த படத்தை எக்ஸ்.பி. ஃபிலிம் கிரியேட்டர்ஸ் தயாரிக்கிறது. மாநகரம், கைதி திரைப்படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.

கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் லோகேஷ் இயக்கிய அவியல் குறும்படம் 2016ஆம் ஆண்டு வெளியாகிப் பரவலாக பாராட்டை பெற்றது.

சுந்தர பாண்டியன், பேட்ட திரைப்படத்தைத் தொடர்ந்து விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கும் படம் இது.

தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் திரைப்படங்களுக்குப் படத்தொகுப்பாளராக பணிபுரியும் ஃபிலோமின் ராஜ்தான் மாஸ்டர் படத்திற்கும் எடிட்டர்.

கத்தி படத்தை அடுத்து விஜயுடன் இணைகிறார் இசையமைப்பாளர் அனிருத்.

யுத்தம் செய், முகமூடி, தீரம் அதிகாரம் ஒன்று, அடங்க மறு ஆகிய படங்களின் ஒளிப்பதிவாளரான சத்யன் சூர்யன் இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

இப்போது வெளியான போஸ்டர் வரவேற்கப்படும் அளவுக்கு சிலர் சமூக ஊடகங்களில் கிண்டலும் செய்து வருகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: