அஜித் 60: 'வி' வரிசையில் இன்னொரு அஜித் படம்

பட மூலாதாரம், SATHYAJOTHIFILMS/TWITTER
ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் திரைப்படத்துக்கு 'வலிமை' என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
ஏகே-60 அதாவது அஜித் 60 என்ற பெயரில் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டான இந்த திரைப்படத்தின் படபூஜை இன்று (வெள்ளிக்கிழமை) சென்னையில் நடைபெற்றதாக செய்திகள் கூறுகின்றன.
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரின் தயாரிப்பில் வெளிவரும் இந்த படத்தை இயக்கும் ஹெச். வினோத், கடைசியாக அஜித் நடித்து வெளிவந்த 'நேர்கொண்ட பார்வை' படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் வழக்கறிஞராக நடித்த அஜித், இந்த படத்தில் காவல் துறை அதிகாரியாக நடிக்கிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ட்விட்டரின் சென்னை ட்ரெண்ட்ஸில் முதல் நான்கு இடங்களையும் வலிமை படம் குறித்தவையே பிடித்துள்ளன.
அஜித் படத்துக்கு வலிமை என பெயர் வைக்கப்பட்டது குறித்த ஹாஸ்டேக் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் உலக அளவில் ஆறாவது இடத்தில் உள்ளது.

பட மூலாதாரம், TWITTER
வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என ஆங்கில 'வி' வரிசையில் அண்மையில் அஜித் நடித்து படங்கள் வெளிவந்த நிலையில், இம்முறை வலிமை என மற்றொரு 'வி' வரிசை அஜித் படம் வெளியாகிறது.
இந்த படத்தலைப்பு குறித்த அறிவிப்பு வெளியானதையொட்டி, அஜித் ரசிகர்கள் அதனை மகிழ்வுடன் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1

X பதிவின் முடிவு, 2

பிறசெய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்