பிக் பாஸ் சீசன் 3 ஃபினாலே: லொஸ்லியா குறித்த கமலின் கவிதை, படவாய்ப்பை பெற்ற தர்ஷன் - முக்கிய தருணங்கள்

பட மூலாதாரம், Hotstar
பிக் பாஸ் சீசன் 3 வெற்றியாளராக மலேசியாவை சேர்ந்த முகேன் ராவ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
முகேன் 7 கோடியே 64 லட்சம் வாக்குகளை பெற்றதாகவும், சாண்டி 5 கோடியே 83 லட்சம் வாக்குகளை பெற்றதாகவும் கமல் அறிவித்தார்.

பட மூலாதாரம், MUGEN RAO / FB
அடுத்த இரு இடங்களில் லொஸ்லியாவும், ஷெரீனும் பிடித்தனர்.
பிக் பாஸ் சீசன் 3 கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியில் சில முக்கிய தருணங்களை இங்கே தொகுத்துள்ளோம்.
கமல் எழுதிய கவிதைகள்
பிக்பாஸ் வீட்டுக்குள் சென்ற கமல் ஹாசன், அவர் கைப்பட எழுதிய கவிதை கடிதத்தை லொஸ்லியா, முகேன், சாண்டி மற்றும் ஷெரீனுக்கு வழங்கினார்.
சாண்டி குறித்து கமல் எழுதிய கடிதத்தில் , "உள்ள போறப்ப மாஸ்டர் சாண்டி...இப்ப நீட்டா போயிட்டப் பார் அதையும் தாண்டி, 105 நாளா நீ கத்துனது எல்லாம்... இன்னும் நல்லவனா உன்னை மாத்திடும் பாரு... சென்னைநாயக்கர் பட்டணம் இல்லை இந்த செந்தமிழ் நாடே இதை நம்புது பார்..." என்று குறிப்பிட்டு இருந்தார்.

பட மூலாதாரம், twitter.com/ManirathinamTh1
"நண்பர்கள் கொஞ்சமாய் குறைத்த பெயர் கொண்ட லியா, வெளி உலகம் வியக்குது உன்னை விளங்கு 'லியா'?... பெருகிவரும் ஆதரவும் புரிய 'லியா'? புகழ் மழையில் நனைந்திட நீ துடிக்க 'லியா'? சிகரம் தொட நீ ரெடியா லாஸ் 'லியா'?" என்ற கவிதையை எழுதி லொஸ்லியாவுக்கு பரிசளித்தார்.
ஷெரீன் குறித்து ஆங்கிலத்தில் கவிதை எழுதி இருந்தார் கமல்.
அதில், "Blinded or Blind folded you never loss kindness or yourself. What you lost is few pounds you brought in to this house. What you gained is you will be happily counting on the way to success and your bank" என்று எழுதி இருந்தார்.
"பாட்டுக்கு பாட்டெடுத்து நீ பாடுவதைக் கேட்டிடவே உன் நாட்டிலும் ஆள் இருக்கு என் நாட்டிலுமே ஆள் இருக்கு வந்தவரை வாழ வைக்கும் பல சான்றுகளும் இங்கு இருக்கு மற்றதெல்லாம் நினையாம நல்லா பணிவுடனே வெற்றி தொடு" என்று முகேன் குறித்து எழுதி இருந்தார்.
'நிகழ்வுக்கு வராத மதுமிதா, சரவணன்'

பட மூலாதாரம், Hotstar
பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியிலிருந்து பாதியில் வெளியேற்றப்பட்ட சரவணனும், மதுமிதாவும் கிராண்ட் பிக் பாஸ் சீசன் 3 ஃபினாலே நிகழ்ச்சிக்கு வரவில்லை. இவர்களைத் தவிர ஃபாத்திமா பாபு, மோகன் வைத்யா, சேரன் பிக்பாஸிலிருந்து முதலில் வெளியேறிய வனிதா முதல் இறுதியாக வெளியேறிய தர்ஷன் வரை அனைத்து பங்கேற்பாளர்களும் கலந்து கொண்டனர்.
'சிறப்பு விருந்தினராக ஸ்ருதியும், ரித்விகாவும்'
பிக்பாஸ் சீசன் 3 ஃபினாலே நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஸ்ருதியும், ரித்விகாவும் கலந்து கொண்டு பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றனர்,.
ரித்விகா பிக்பாஸ் வீட்டிலிருந்து கிளம்பும் போது ஷெரீனையும், ஸ்ருதி லொஸ்லியாவையும் உடன் அழைத்து வெளியேறினர்.

பட மூலாதாரம், Hotstar
'பாடிய கமல்'
பிக் பாஸ் சீசன் 3 கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியில் வனிதா விஜயகுமார் சொடக்கு மேல சொடக்கு போடுது என்ற பாடலுக்கு நடனம் ஆடினார். ராஜேஷ் வைத்யா வீணை வாசிக்க நடிகர் கமல்ஹாசன் நினைவே ஒரு சங்கீதம் பாடலை நிகழ்வில் பாடினார்.அது போல கஸ்தூரியும், சாக்ஷி அகர்வாலும் ஒரு பாடலுக்கு நடனம் ஆடினர்.
'லொஸ்லியாவுக்கு வாக்களிக்காத சேரன்'
பிக்பாஸ் வீட்டில் இருந்தவர்கள் இந்த நால்வரில் அதாவது, 'ஷெரீன், லொஸ்லியா, சாண்டி, முகேன்' - இவர்களில் யாரையாவது ஒருவரைத் தேர்ந்தெடுக்கலாம் என்றால் யாரைத் தேர்ந்தெடுப்பீர்கள் என கமல் கேட்டார். அதில் பெரும்பாலானவர்கள் முகேனையே தேர்ந்தெடுத்தார்கள் சேரன் உட்பட.

பட மூலாதாரம், Hotstar
வனிதாவும் கவினும் லொஸ்லியாவை தேர்ந்தெடுத்தார், பலர் முகேனை தேர்ந்தெடுத்துவிட்டதால் நான் சாண்டியைத் தேர்ந்தெடுக்கிறேன் என சாண்டியைத் தேர்ந்தெடுத்தார் தர்ஷன், மீரா மிதுனும் சாண்டியை தேர்ந்தெடுத்தார்.
'சாண்டியை தேர்ந்தெடுத்த ஷெரீன்'
சாண்டி, லாஸ்லியா, முகேன் பெயர் எழுதப்பட்ட 3 ஜாடிகளில் அவர்களுக்கு வழங்க விரும்பும் மதிப்பெண் அடிப்படையில் ஒரு திரவத்தை ஊற்றும்படி ஷெரீனிடம் கமல் கேட்டார் சாண்டிக்கு அதிகமாகவும் அடுத்த இடத்தை முகேனுக்கும் மூன்றாவது இடத்தை லாஸ்லியாவுக்கும் கொடுத்தார் ஷெரீன்.
'கேம் சேஞ்சர் கவின்'
பிக்பாஸ் சீசன் 3 ஃபினாலே நிகழ்வில் கவினுக்கு 'கேம் சேஞ்சர் கவின்' விருது வழங்கப்பட்டது.
வனிதாவுக்கு 'கட்ஸ் அண்ட் கிரிட்ஸ்' விருதும், சேரனுக்கு 'மோஸ்ட் டிசிப்ளின்மேன்' விருதும், ஷெரீனுக்கு 'பெஸ்ட் பட்டி' விருதும், தர்ஷனுக்கு 'ஆல் ரவுண்டர்' விருதும் வழங்கப்பட்டது.

பட மூலாதாரம், Facebook/hotstar
'சினிமா வாய்ப்பும், வனிதாவும்... தர்ஷனும்'
பிக்பாஸ் மேடையிலேயே கமலிடம் சினிமா வாய்ப்பு கேட்டார் வனிதா. மழுப்பலாக பதில் சொன்ன கமல், தர்ஷனுக்கு வாய்ப்பளித்தார். இனி தர்ஷனும் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் குடும்பத்தில் ஒருவரென கூறி, ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் பேட்ச்சை அவருக்கு அணிவித்தார்.

BiggBoss 3 winner Mugen's unheard story | அன்பு அனாதை இல்லை முகேன் - மனங்களை வென்ற வெற்றியாளரின் கதை
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு

பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












