‘ஒரே ஒரு நிமிடம் ஒதுக்குங்கள்’: வாழ்வில் ஒரு முறையேனும் இங்கு செல்ல விரும்பலாம்

அதுவொரு பூங்காவுடைய புகைப்படம். சொர்க்கமென்றால் ஒரு சித்திரம் விரியும்தானே? அப்படியான சித்திரத்தை ஒத்து இருக்கிறது இந்தப் புகைப்படம். (மேலே உள்ள புகைப்படம்)

பிரிட்டன் தேசிய பூங்காக்கள் அமைப்பு அறிவித்த போட்டியில் இந்தப் புகைப்படம்தான் முதல் இடத்தை பெற்று இருக்கிறது.

எழுபதாவது ஆண்டை கொண்டாடும் பிரிட்டன் தேசிய பூங்கா, புகைப்பட போட்டியை அறிவித்திருந்தது.

ஏறத்தாழ 1500 பேர் பிரிட்டன் பூங்காக்களின் வெவ்வேறு தருணங்களை உயிர்ப்புடன் புகைப்படமெடுத்து அனுப்பி இருந்தார்கள்.

இந்த போட்டியில் வரைகலை வல்லுநர் கிரென் மெட்காஃப் எடுத்த புகைப்படம் முதலிடத்தை பிடித்துள்ளது.

போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட வேறு சில புகைப்படங்களையும் இங்கே பகிர்கிறோம்.

இரண்டாவது இடத்தை கரெத் மொன் எடுத்த புகைப்படம் பெற்றிருக்கிறது. இவர் ஸ்நோடோனியா தேசிய பூங்காவின் புகைப்படத்தை எடுத்திருந்தார்.

ஹெலென் ஸ்டோரர் எடுத்த ப்ராட்ஸ் தேசிய பூங்கா புகைப்படமும் இந்த போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்டது.

க்ளோய் சிஃப்ட் தனது மகன்கள் டார்ட்மோர் தேசிய பூங்காகளில் இருக்கும் புகைப்படத்தை அனுப்பி இருந்தார். அந்தப் புகைப்படமும் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது.

ஸ்டீவ் பர்னெட் எடுத்த புகைப்படம் இது. இதனை ஸ்கோமெர் தீவில் உள்ள ஒரு தேசிய பூங்காவில் அவர் எடுத்திருக்கிறார்.

இந்த புகைப்படத்தை புகைப்பட கலைஞர் ஷவுன் டேவே எக்ஸ்மோர் தேசிய பூங்கா அருகே எடுத்திருக்கிறார்.

ஒற்றை குதிரையில் தனிமையில் ஒருவர் செல்வது போல இருக்கும் இந்த புகைப்படத்தை தாமஸ் போன் எடுத்தது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :