இதுதான் பிரிட்டனின் சிறந்த செல்ஃபி புகைப்படம் - அட்டகாச படங்களின் தொகுப்பு

பிரிட்டன் புகைப்படக் கலைஞர்கள் விருது 2017ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. இவ்வாண்டு விருது பெற்ற சில புகைப்படங்களை இங்கே பகிர்கிறோம்.

இந்த ஆண்டு புகைப்பட போட்டிக்காக 3700 பிரிட்டன் புகைப்பட கலைஞர்கள் புகைப்படங்களை அனுப்பி இருந்தனர்.

பறவையின் வாழ்வு பிரிவின் கீழ் ஆட்ரியன் க்ளார்க்கு விருது வழங்கப்பட்டது.

பரிசுபெற்றவர்கள் பட்டியலில் பறவையின் புகைப்படம் மட்டும் இல்லை. லூஸியன் ஹாரிஸுக்கு வயல்வெளியில் இருக்கும் ஒரு பூச்சியை புகைப்படம் எடுத்ததற்காக விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்தப் போட்டியில் மொத்தம் 16 விருதுகள் வழங்கப்பட்டன.

சிறந்த செல்ஃபி புகைப்படத்திற்காகவும் விருது வழங்கப்பட்டது.

இந்த புகைப்படத்தை எடுத்தவர் க்ளைரா.

போட்ரைட் பிரிவில் சாராவுக்கு விருது வழங்கப்பட்டது.

விளையாட்டு புகைப்பட விருது பிரிவில் மைக்குக்கு வழங்கப்பட்டது.

சிறந்த திருமண புகைப்படம் பிரிவில் ஆரான் விருதைப் பெற்றார்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த புகைப்படப் பிரிவில் ஃபிலிப் விருது பெற்றார்.

பிற பிரிவுகளில் வென்ற புகைப்படங்கள்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :