உணர்ச்சிகள் மனிதர்களுக்கு மட்டுமானது அல்ல - விளக்கும் புகைப்படங்கள்

இந்த வருடத்தின் கானுயிர் புகைப்படக் கலைஞருக்கான போட்டியில் மக்களின் விருப்பமாக இந்த சிங்கங்களின் புகைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன.

ஆண் சிங்கங்கள் இரண்டு ஒன்றோடு ஒன்று பாசமாக முட்டிக் கொள்வது போலான அந்த புகைப்படம் மக்களின் விருப்பமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

சிங்கங்கள் என்றால் கம்பீரமாகதான் உலா வர வேண்டுமா என்ன? என்று கேள்வி கேட்பது போன்று உள்ளது இந்த புகைப்படம்.

இந்த புகைப்படம் தொழில்முறை புகைப்படக் கலைஞர் டேவிட் லாயிடால் எடுக்கப்பட்டது. இந்த புகைப்பட போட்டிக்கு மொத்தம் 45,000 புகைப்படங்கள் தேர்வுக்காக அனுப்பப்பட்டன.

அதில் 25 புகைப்படங்கள் இங்கிலாந்தின் தேசிய வரலாற்று அருங்காட்சியகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டு, மக்கள் தேர்வுக்காக வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

"எனது இந்த புகைப்படம் தேர்வு செய்யப்பட்டது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. ஏனென்றால் உணர்ச்சிகள் மனிதர்களுக்கானது மட்டுமல்ல என்பதை இது விளக்குகிறது," என்கிறார் புகைப்படக் கலைஞர் டேவிட் லாயிட்.

"விலங்குகளுக்கும் உணர்வுகள் உண்டு என்பதை மனிதர்களும் புரிந்துகொள்ள வேண்டும் என்பதே எனது விருப்பம்" என்கிறார் அவர்.

சிங்கங்களின் புகைப்படங்களுடன் இந்த நான்கு புகைப்படங்களும் பெரும் வரவேற்பை பெற்றன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :