சினிமா செய்திகள்: காலாவுக்கு பிறகு தனுஷின் அடுத்த திட்டம் என்ன?

சினிமா

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியிருக்கும் காலா படத்தை தனுஷ் தயாரித்துள்ளார். இந்த படத்தை ஜூன் 7ம் தேதி வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளானர். அதுக்கான பணிகளில் தனுஷ் தீவிரமாக இறங்கியுள்ளார். காலா படத்தை ரிலீஸ் செய்துவிட்டு தான் நடித்துவரும் மாரி 2, வட சென்னை, எனை நோக்கி பாயும் தோட்டா படங்களில் கவனம் செலுத்த திட்டமிட்டிருக்கிறார்.

இந்த படங்களின் வேலைகளோடு பாவர் பாண்டி வரிசையில் ஒரு படத்தை இயக்க தனுஷ் முடிவெடுத்துள்ளார். அதுக்கான வேலைகள் ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என்று கூறப்படுகிறது. அதேபோல் ஹிந்தியில் தன்னை அறிமுகப்படுத்திய ஆனந்த் எல் ராய்-யின் அடுத்த படத்தில் நடிக்கவும் தனுஷ் ஒப்பந்தமாகியுள்ளார்.

இது தவிர வேலையில்லா பட்டதாரி 3 படத்தை எடுக்கவும் தனுஷ் திட்டமிட்டிருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதை முடித்த பின் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் தனுஷ் நடிப்பார். இந்த படங்களின் வேலைகள் அடுத்தடுத்து தொடங்கவுள்ளதாக தனுஷ் தரப்பில் கூறப்படுகிறது.

Presentational grey line

விறுவி்று விஸ்வாசம்

அஜித்

அஜித் - சிவா கூட்டணியில் உருவாகும் விஸ்வாசம் படத்தின் முதல்கட்ட சூட்டிங் ஹைத்ராபாத்தில் தொடங்கியது. அங்கு அமைக்கப்பட்டிருக்கும் செட்டில் நடைப்பெற்ற முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், அடுத்தக்கட்ட சூட்டிங்கை மும்பையில் நடத்த இயக்குனர் சிவா திட்டமிட்டுள்ளார். அதற்கான வேலைகளும் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் அஜித்தோடு, நயன் தாரா, ரோபோ சங்கர், தம்பி ராமையா, ரமேஷ் திலக் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இந் நிலையில், காலா படத்தில் ரஜினிகாந்துக்கு மருமகளாக நடித்துள்ள சாக்‌ஷி அகர்வால் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார் என்று கூறப்படுகிறது. அவரின் காட்சிகள் மும்பையில் நடக்கவுள்ள இரண்டாம்கட்ட படப்பிடிப்பில் படமாக்க இயக்குனர் சிவா திட்டமிட்டுள்ளாராம்.

Presentational grey line

தந்தை மகன் நடிப்பில் சந்திரமெளலி

சினிமா

நவரச நாயகன் கார்த்திக் மற்றும் அவருடைய மகன் கவுதம் கார்த்திக் ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் படம் மிஸ்டர் சந்திரமெளலி. இந்த படத்தை தீராத விளையாட்டுபிள்ளை, சமர், நான் சிகப்பு மனிதன் ஆகிய படங்களை இயக்கிய திரு இயக்கியுள்ளார். மேலும் ரெஜினா ஹீரோயினாக நடித்துள்ளார். இந்த படத்துக்கான சூட்டிங் சென்னை, தாய்லாந்த் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று முடிந்து. இதை தொடர்ந்து போஸ்ட் புரெடெக்‌ஷன் வேலைகளில் வேகமாக நடைப்பெற்று வந்தது. அந்த வேலைகள் தற்போது முழுமையாக முடிவடைந்துவிட்டதால், ஜூன் 6ம் தேதி மிஸ்டர் சந்திரமெளலி படத்தை திரைக்கு கொண்டுவர படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இதற்கு அடுத்த நாள் ரஜினி நடித்திருக்கும் காலா படம் வெளியாகிறாது. ஆனால் அந்த படத்திற்கு டிக்கெட் கிடைக்காத ரசிகர்கள் தங்கள் படத்திற்கு வருவார்கள் என்ற நம்பிக்கையில் காலாவோடு மிஸ்டர் சந்திரமெளலி படத்தை களமிறக்குகிறார் தயாரிப்பாளர் தனஞ்செயன். இந்த படத்தில் பொழுது போக்கு விஷயங்களோடு எமோஷனையும் கலந்து படமாக்கியுள்ளதாக இயக்குனர் திரு கூறியுள்ளார். மேலும் இந்த படத்தில் நடிகர்களின் பங்களிப்பு சிறப்பாக இருந்ததாகவும் பெருமிதத்தோடு கூறியுள்ளார் திரு.

Presentational grey line

ஆர்.கே நகர். அரசியல் நையாண்டி

சினிமா

இயக்குனர் வெங்கட் பிரபு தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ஆர்.கே நகர். அரசியலை நையாண்டி செய்து எடுக்கப்பட்டிருக்கும் இந்த படத்தை சரவணராஜன் இயக்கியிருக்கிறார். இவர் ஏற்கனவே இயக்கிய வடக்கறி படம் தோல்வியடைந்ததால் அதிக கவனத்தோடு ஆர்.கே நகர் படத்திற்கு திரைக்கதை எழுத்தியிருக்கிறார். ஆர்.கே நகர் இடைதேர்தல் சம்பவங்களளோடு ஒத்துப்போகும் கதை என்பதால் படத்திற்கு அந்த தொகுதியின் பெயரை தலைப்பாக வைத்துள்ளனர். வைபவ் ஹீரோவாக நடித்திருக்கும் ஆர்.கே நகர் படத்தில் சென்னை 28 பார்ட் 2 படத்தில் ஹீரோயினாக நடித்த சனா அல்தாஃப் மற்றும் விஜய் வசந்துக்கு ஜோடியாக நடித்த அஞ்சனா கீத்தி ஆகியோர் ஹீரோயின்களாக நடித்துள்ளனர். இந்த படத்தின் ட்ரைலர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது படத்தை வெளியிட தயாரிப்பாளரும் இயக்குனருமான வெங்கட் பிரபு தயாராகிவருக்கிறார். மேலும் அதற்கான தேதியை விரைவில் அறிவிப்பை வெளியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. வெங்கட் பிரபு தான் இயக்காத ஒரு படத்தை முதல் முதலில் தயாரிப்பது இந்த படத்தைதான் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ஆர்.கே நகர் படத்தை வெற்றியடைய செய்ய பல வழிகளில் திட்டமிட்டிருவருகிறார் வெங்கட் பிரபு.

Presentational grey line

விக்ரம் பிரபு - நிர்மல்குமார் கூட்டணியின் ஆக்‌ஷன் த்ரில்லர்

நிர்மல் குமார்- விக்ரம் பிரபு
படக்குறிப்பு, நிர்மல் குமார்- விக்ரம் பிரபு

விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகி நல்ல விமர்சனத்தோடு தயாரிப்பாளருக்கு லாபத்தையும் கொடுத்த படம் சலீம். இந்த படத்தை நிர்மல்குமார் என்பவர் இயக்கியிருந்தார். சலீம் படத்தை தொடர்ந்து அவர் இயக்கிய சதுரங்க வேட்டை 2 படம் சில பிரச்சனைகளால் வெளியாகாமல் உள்ளது. இந்த நிலையில் நிர்மல்குமார் தன்னுடைய அடுத்த திரைப்படத்திற்கு தயாராகியுள்ளார். அவர் இயக்கும் மூன்றாவது படத்தில் விக்ரம் பிரபு ஹீரோவாக நடிக்கிறார். இதற்கான பேச்சுவார்த்தைகள் அனைத்தும் முடிந்து முதல்கட்ட வேலைகள் தொடங்கியுள்ளது. விக்ரம் பிரபு - நிர்மல்குமார் இணையும் புதிய படம் ஆக்‌ஷன் த்ரில்லர் வகையில் உருவாகவுள்ளது என்று கூறப்படுகிறது. விக்ரம் பிரபு நடிப்பில் இறுதியாக வெளியான வீர சிவாஜி, சத்ரியன், நெருப்புடா உள்ளிட்ட எந்த படமும் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியடையவில்லை. இதனால் நிர்மல்குமார் இயக்கும் புது படம் அவரை மீண்டும் வெற்றி பாதைக்கு அழைத்துவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Presentational grey line

நிண்ட தேடலுக்கு பிறகு கிடைத்த "ஜிப்சி" நாயகி

கூக்கு, ஜோக்கர் ஆகிய படங்களை இயக்கியவர் ராஜூ முருகன். முதல் இரண்டு படங்கள் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த இவர், நடிகர் ஜீவாவை நாயகனாக வைத்து "ஜிப்சி" என்ற படத்தை இயக்கவுள்ளார். இதற்கான நடிகர்கள் தேர்வு தற்போது நடைப்பெற்று வருகிறது. அழுத்தமான கதையை அழகாக படமாக்கும் ராஜூ முருகன், தன்னுடைய கதைக்கு தக்குந்த முகங்களை நடிகர்களை தேர்வு செய்வதில் வல்லவர். இந்த நிலையில் தற்போது மாஹாராஷ்டிராவை சேர்ந்த நடாஷா சிங் என்ற மாடலை ஜிப்சி படத்திற்கு நாயகியாக தேர்வு செய்துள்ளார். நீண்ட நாட்களலாக நடிப்பெற்று வந்த நடிகை தேர்வு தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இதில் கிராமத்துத்தில் இருந்து வரும் கூச்சம் சுபாவம் கொண்ட பெண்ணின் வாழ்கை ஹீரோவை சந்தித்தபின் மாறுவதுபோல் இவரின் கதாபாத்திரம் எழுதப்பட்டுள்ளதாம். ஜிப்சி படத்தின் சூட்டிங் விரைவில் தொடங்கவுள்ளது.

Presentational grey line

அருவி இயக்குநரின் அடுத்த படைப்பு

ட்ரீம் வாரியர்ஸ்

ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாகி வெற்றியடைந்த படம் அருவி. இந்த படத்தை அறிமுக இயக்கினர் அருண் புரஷோத்தமன் இயக்கியிருந்தார். அதேபோல் அதிதி பாலன் நயகியாக அறிமுகமானார். விளம்பர செலவுடன் 2 அரை கோடி ரூபாய் பட்ஜெட்டில், நிறைவோடு எடுக்கப்பட்ட இந்த படம் தயாரிப்பாளருக்கு நிறைவான லாபத்தை கொடுத்தது.

இதை தொடர்ந்து தன்னுடைய அடுத்தப்படத்திற்கான கதை எழுதி வந்தார் அருண் புரஷோத்தம்மன். அந்த பணிகள் முடிவடைந்த நிலையில் தற்போது படப்பிடிப்பை தொடங்கியுள்ளார். அருண் புரஷோத்தம்மனின் அடுத்த படத்தை ரெமோ, வேலைக்காரன் ஆகிய படங்களை தயாரித்த ஆர்.டி ராஜா தயாரிக்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: