வாழ்க்கையில் சிங்கிளாக வாழ்வது பலமா, பலவீனமா?

ஓர் உறவுமுறையில் இல்லாமல் தனித்து இருப்பதால் அதிக நன்மைகள் இருப்பதாக கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த பெல்லா டிபோலோ என்ற ஆராய்ச்சியாளர் கண்டறிந்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள கட்டுரையில், நாம் நினைப்பதைவிட ஓர் உறவுமுறையில் இல்லாமல் தனியாக இருப்பதால் பல நன்மைகள் இருப்பதாகவும், அது அந்த நபருக்கு மட்டுமின்றி அவர் சார்ந்த சமூகத்திற்கும் நன்மைகள் இருப்பதாகவும் அதில் அவர் கூறியுள்ளார்.

பெல்லா டிபோலோ ஆராய்ச்சியின் முக்கிய வெளிப்பாடுகள் சிலவற்றைப் பார்க்கலாம்.ள்

  • தனித்து இருப்பதால் பிறருடைய வாழ்க்கையை மேம்படுத்த முடியும்.
  • அமெரிக்காவில் தனித்து (சிங்கிளாக) வாழ்பவர்கள் திருமணமானவர்களை காட்டிலும் நண்பர்கள் மற்றும் பக்கத்து வீடுகளில் வசிப்பவர்களுக்கு அதிகளவில் பாரபட்சமின்றி உதவுவது, சரிசமமாக பழகுவது மற்றும் ஊக்கப்படுத்துபவர்களாக இருக்கிறார்கள்.
  • சகோதர, சகோதரி மற்றும் பெற்றோர்களுடன், திருமணமானவர்களை காட்டிலும் அதிக நெருக்கமாகவும், ஆதரவாகவும் தனித்து வாழும் நபர்கள் இருப்பார்கள்.
  • தனியாக அல்லது பிறருடன் சேர்ந்து வாழும் தனி நபர்கள் திருமாணமானவர்கள் காட்டிலும் சமூக சேவை நிறுவனங்கள், கல்வி குழுக்கள், மருத்துவமனைகள் மற்றும் கலை சார்ந்த நிறுவனங்கள் ஆகியவற்றில் அதிகம் தன்னார்வ தொண்டு பணியில் ஈடுபடுவார்கள்.
  • நண்பர்கள் மற்றும் குடும்பத்தாருடன் அதிக நேரம் செலவிடுவதில் தனித்து இருக்கும் நபர்கள் விரும்புவார்கள் என்றும், இவர்களுடைய வாழ்வு அதிக திருப்திகரமாக இருக்கும் என்றும் பெல்லா டிபோலோ கூறுகிறார்.
  • திருமணமானவர்களுடன் ஒப்பிடும் போது சிங்கிளாக இருப்பவர்களின் தனிப்பட்ட வளர்ச்சி என்பதும் சிறப்பானதாக இருக்கும்.
  • தனித்து வாழ்பவர்கள் தனிமைப்படுத்தப்பட்டது போன்று உணர மாட்டார்கள், சோகமாகவோ அல்லது தனிமையாகவோ இருக்க மாட்டார்கள் என்று டிபோலோ கூறுகிறார்.

இவற்றையும் படிக்கலாம்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்