ஃபெஞ்சல் புயல்: தமிழகத்தில் கொட்டித் தீர்க்கும் மழை, எங்கு என்ன நிலை?

காணொளிக் குறிப்பு,

வங்கக்கடலின் தென்மேற்குப் பகுதியில் நிலவும் ஃபெஞ்சல் புயல் இன்று மாலை கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

''புயல் சென்னைக்கு தென்கிழக்கே சுமார் 140 கி.மீ தொலைவிலும், புதுவைக்கு தென்கிழக்கே 140 கி.மீ தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.இது வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று மாலை புதுவைக்கு அருகே கரையை கடக்கும்'' என சென்னையில் உள்ள மண்டல வானிலை ஆய்வு மையத்தின் தலைவர் பாலசந்திரன் கூறியுள்ளார்.

இன்று (நவம்பர் 30) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய ஏழு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், நேற்று (வெள்ளிக்கிழமை) மதியம் 2.30 மணியளவில் புயலாக உருவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இந்த புயலால் 70 முதல் 80 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்திலும் காற்று வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு விவரங்கள் காணொளியில்...

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)