டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டி: ரோகித் சர்மா எதிர்கொள்ளும் சிக்கல்கள் என்ன?

டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னதாக கேப்டன் ரோஹித் சர்மா எதிர்கொள்ளும் இக்கட்டான சூழல்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா
    • எழுதியவர், விமல்குமார்
    • பதவி, மூத்த விளையாட்டுப் பத்திரிகையாளர்

டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி வந்துவிட்டது.

லீக் கேம்கள், சூப்பர் லீக், ஒழுங்கற்ற வானிலை மற்றும் சவாலான பிட்ச்கள் ஆகியவற்றை எதிர்கொண்டு வலிமைமிக்க எதிர் அணிகளுக்கு எதிராக வெற்றி பெற்று, கிட்டத்தட்ட ஒரு மாதப் போராட்டத்திற்கு பிறகு உலகின் இரண்டு பெரிய கிரிக்கெட் அணிகள் கோப்பையைக் கைப்பற்றும் களத்துக்கு நுழைந்துள்ளன.

இதற்கு முன், 2007 மற்றும் 2022-க்கு இடைப்பட்ட எட்டு உலகக் கோப்பைகளில், இரு அணிகளும் எந்தப் போட்டியிலும் தோல்வி அடையாமல் இறுதிப் போட்டிக்கு முன்னேறியதில்லை.

மற்றொரு சுவாரஸ்யமான உண்மை என்னவென்றால், கிரிக்கெட் வரலாற்றில், முதல் டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியிலும், 9வது டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியிலும் பங்கேற்ற முதல் கிரிக்கெட் வீரராக இந்திய கேப்டன் ரோகித் சர்மா இருப்பார்.

இருப்பினும், இந்த சாதனையை மட்டும் வைத்து ரோகித் திருப்தியடைய மாட்டார்.

அணியின் ஐந்து பாண்டவர்கள்

டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னதாக கேப்டன் ரோஹித் சர்மா எதிர்கொள்ளும் இக்கட்டான சூழல்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, ஹர்திக் பாண்டியா

மகேந்திர சிங் தோனியின் அணி 2007-இல் முதல் கோப்பையை வெல்ல ஒரு இளம் வீரராக, ரோகித் முக்கிய பங்கு வகித்தார்.

நன்கு அறியப்பட்ட நபர்கள் இல்லாத நிலையில், இந்திய ரசிகர்களின் கனவை தோனி எப்படி நிறைவேற்றினார் என்பதை ரோகித் பார்த்திருக்கிறார். 37 வயதில் தனது கடைசி உலகக் கோப்பையை விளையாடும் ரோஹித், இந்தியாவின் மிக வெற்றிகரமான கேப்டன் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதியுள்ளார்.

இதனுடன், ரோகித்தின் அணியில் ஜஸ்பிரித் பும்ரா, விராட் கோலி, டி20 மூத்த வீரர்களான சூர்யகுமார் யாதவ் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் உள்ளனர்.

ஹர்திக் பாண்டியா போன்ற ஒரு சிறந்த வேகப்பந்து வீச்சாளர் இந்திய அணியில் இருப்பதால், அவருக்கு உறுதுணையாக 'எவர்கிரீன் ஸ்பின்’ ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா இருக்கிறார். ஆரம்ப கட்டத்தில் கோலி மற்றும் ரோஹித்துடன் விளையாடிய ஜடேஜா தற்போது இறுதிக்கட்டத்திலும் ஒன்றாக விளையாடி வருகின்றனர்.

கோலியைப் போல டி20 உலகக் கோப்பையை வென்ற அணிக்காக ஜடேஜா இதுவரை விளையாடியதில்லை. ரோகித்தைப் போல் அவர் ஒரு நாள் உலக சாம்பியன் அணிக்காக விளையாடியதில்லை.

சனிக்கிழமையன்று கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி வெற்றி பெற்றால், சமகால இந்திய கிரிக்கெட்டின் ஐந்து பாண்டவர்களுக்கு (கோலி, ரோகித், ஜடேஜா, பும்ரா மற்றும் பாண்டியா) வரலாற்றில் தங்கள் முத்திரையை பதிக்க இது ஒரே வாய்ப்பாக இருக்கும்.

இந்தப் போட்டி தனது நற்பெயருக்கு ஏற்றதாக அமையவில்லை என்ற சூழல் கோலிக்கு நேர்த்தால், ஜடேஜாவின் நிலையும் அப்படிதான் இருக்கும்.

ஆனால், இந்த இரண்டு வீரர்களும் டி20 ஆட்டத்தின் இறுதி போட்டியில் கூட சரியாக விளையாட மாட்டார்கள் என்று உறுதியாக யாராலும் சொல்ல முடியாது.

இவர்களின் அற்புதமான கிரிக்கெட் பயணத்தை ஆரம்பத்தில் இருந்து பார்த்தவர்களுக்கு தெரியும், பல விமர்சனங்களுக்கு மத்தியில் விளையாடிய போது கூட பலமுறை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணிக்கு பெருமை சேர்த்துள்ளனர். இம்முறையும் அப்படி நடக்கலாம்.

டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னதாக கேப்டன் ரோஹித் சர்மா எதிர்கொள்ளும் இக்கட்டான சூழல்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, ரோஹித் சர்மா

இந்திய அணி இக்கட்டான நிலையில் உள்ளதா?

இந்திய அணியில் டி20 போட்டியில் விளையாடும் பதினொரு வீரர்களை பார்க்கும் போது இந்திய அணிக்கு நிச்சயமாக சில குழப்பங்கள் உள்ளன. இறுதி போட்டி வரை முன்னேறியுள்ள இந்தியா, அதன் அணியில் எந்த மாற்றத்தையும் செய்ய விரும்பவில்லை என்பது உண்மைதான்.

ஆனால் ஆல்-ரவுண்டராக அணியில் இடம்பிடித்த ஷிவம் துபே, சுழற்பந்து வீச்சாளர் என்ற நற்பெயரை காப்பாற்ற முடியவில்லை.

இதுபோன்ற சூழ்நிலையில் சஞ்சு சாம்சன் தனது முதல் உலகக் கோப்பை ஆட்டத்தில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், துபே இதுவரை ஒரு ஓவர் மட்டுமே வீசியிருக்கிறார். அந்த ஒரு ஓவரிலும் எதிர் அணியினர் சிறப்பாக விளையாடி ரன்கள் சேர்த்ததால், கேப்டனின் எஞ்சியிருந்த சிறிய நம்பிக்கை அவரது பந்து வீச்சில் இருந்து குறைந்து வருவதாகத் தெரிகிறது.

ஆனால், ரோகித்தால் தனது முன்னாள் கேப்டன் தோனியைப் போல் தைரியமான முடிவுகளை எடுக்க முடியுமா என்பதுதான் கேள்வி. 2007-ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில் வீரேந்திர சேவாக்கிற்குப் பதிலாக யூசுப் பதான் நேரடியாக விளையாடிய முடிவு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னதாக கேப்டன் ரோஹித் சர்மா எதிர்கொள்ளும் இக்கட்டான சூழல்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, விராட் கோலி

கோலி குறித்த சஸ்பென்ஸ்

இரண்டாவது முக்கியமான கேள்வி: விராட் கோலியை மீண்டும் மூன்றாவது இடத்தில் விளையாட வைக்கும் முடிவை அணி நிர்வாகம் கவுரவப் பிரச்சினையாக கருதுகிறதா?

தொடக்க ஆட்டக்காரர்களைத் தவிர, ஒவ்வொரு பேட்ஸ்மேனும் எந்த இடத்திலும் விளையாடத் தயாராக இருக்கிறார்கள் என்று போட்டியின் தொடக்கத்தில் கேப்டன் கூறியது உண்மைதான்.

எனவே, கடைசிப் போட்டியிலும், அதுவும் மிகவும் தீர்க்கமான ஆட்டத்தில், கேப்டன்-பயிற்சியாளர் கோலியை தனது வழக்கமான நிலையில் பேட்டிங் செய்ய களமிறக்குவாரா?

கோலி உண்மையில் மூன்றாவது இடத்தில் விளையாடி அசாதாரணமான ஆட்டத்தை வெளிப்படுத்தினால், ரோஹித்தின் ஜோடியாக யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு பதில் ரிஷப் பந்த் களமிறங்கலாம்.

ரிஷப் பந்த் ஆரம்பத்தில் ஐந்தாவது இடத்தில் விளையாடினார். ஆனால் தற்போது வரை அவர் மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்கிறார். அவர் ஒரு இடது கை பேட்ஸ்மேனாக இருப்பதால், ஒரு போட்டியில் வேறு இடத்தில் விளையாடுவது அவருக்கு அவ்வளவு பெரிய விஷயமாக இருக்காது.

டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னதாக கேப்டன் ரோஹித் சர்மா எதிர்கொள்ளும் இக்கட்டான சூழல்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, ரோஹித் சர்மாவுடன் பும்ரா

இந்தியா பந்துவீச்சு வியூகத்தை மாற்றுமா?

சுழற்பந்து வீச்சை எதிர்கொள்ள தென்னாப்பிரிக்க அணியின் பேட்டிங் ஒப்பீட்டளவில் பலவீனமாக உள்ளது. எனவே லெக் ஸ்பின்னர் யுஸ்வேந்திர சாஹலை களமிறக்குவதை பற்றி அணி சிந்திக்குமா?

இது கொஞ்சம் கவர்ச்சியாகத் தோன்றினாலும், இது பூனைக்கு மணிகட்டுவது போன்றது. அணியில் இருந்து ஜடேஜாவையும் விடுவிக்கும் முடிவை அவர்கள் பரிசீலிக்க முடியுமா?

அப்படி இல்லையென்றால், பும்ராவும் பாண்டியாவும் மட்டும் அணியின் வேகப்பந்து வீச்சாளர்களாக இருப்பார்களா? போட்டியின் மிகவும் திறமையான இந்திய வேகப்பந்து வீச்சாளரும் இடது கை பேட்டருமான அர்ஷ்தீப் சிங்கை நீக்குவதைக் கருத்தில் கொள்ள அணிக்கு தைரியம் உள்ளதா? பெரும்பாலும் இல்லை.

இந்த போட்டியின் முடிவில் வானிலை மற்றும் ஆடுகளம் மீண்டும் முக்கிய பங்கு வகிக்கும்.

பார்படாஸின் ஆடுகளம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு கயானா ஆடுகளத்தை போன்று துல்லியமான திருப்பத்தை வழங்காது. கூடுதலாக, இந்த பவுன்ஸ் ஆடுகளம் டிரினிடாட்டில் இருந்தது போல் சீராக இருக்காது.

இந்த ஆடுகளம் இறுதிப் போட்டியில் பேட்டிங் செய்ய ஏதுவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆன்டிகுவா போன்ற பேட்ஸ்மேன்களுக்கு இந்த ஆடுகளம் உதவிகரமாக இருந்தால், ஐ.பி.எல் போல பவுண்டரி, சிக்ஸர் மழை பொழியும் சுவாரஸ்யத்தை நீங்கள் பார்க்கலாம்.

டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னதாக கேப்டன் ரோஹித் சர்மா எதிர்கொள்ளும் இக்கட்டான சூழல்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா

ஜெய் ஷாவின் கணிப்பு

இறுதியாக, அனைவரும் அமைதியான தொனியில் விவாதிக்கும் ஒரு விஷயம் உள்ளது. பெரிய போட்டிகளில் பட்டத்தை வெல்லும் நிலைக்கு வந்தாலும் கடந்த பத்து ஆண்டுகளாக தோல்வியடைந்து வரும் போக்கை இந்திய அணி முறியடிக்குமா?

கிரிக்கெட்டின் விரும்பத்தகாத நிரந்தர சோக்கர்ஸ் என்று முத்திரை குத்தப்பட்ட தென்னாப்பிரிக்கா, எல்லா காயங்களையும் கடந்து வரலாற்றை எழுத முடியுமா?

இதைச் சொல்வது மிகவும் கடினம்.

ஆனால், பி.சி.சி.ஐ செயலர் ஜெய் ஷா சில மாதங்களுக்கு முன்பே கணித்திருப்பது வெறும் தற்செயல் என்று சொல்லலாம்.

ஜூன் 29-ஆம் தேதி, ரோகித் சர்மா மற்றும் அவரது அணியினர் உலகக் கோப்பையை வெல்வார்கள் என்றும், அவர் தனது அணியை உற்சாகப்படுத்த வி.வி.ஐ.பி சீட்டில் அமர்ந்திருப்பார் என்றும் ஜெய் ஷா கூறியிருந்தார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)