டி20: அரையிறுதி போட்டியில் எந்த அணிகள் மோதுகின்றன, அதிக ரன், அதிக விக்கெட் எடுத்த வீரர்கள் - முழு விவரம்

டி20 உலகக்கோப்பை

பட மூலாதாரம், Getty Images

அமெரிக்காவிலும், மேற்கிந்தியத் தீவுகளிலும் டி20 உலகக்கோப்பைப் போட்டிகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளன. கத்துக்குட்டி அணிகளுடன், வலிமையான பாகிஸ்தான், நியூசிலாந்து, இலங்கை ஆகிய அணிகள் லீக் சுற்றுடன் வெளியேறிவிட்டன.

சூப்பர் 8 சுற்றில் ஆஸ்திரேலியா, வங்கதேசம் ஆகிய அணிகளுடன் போட்டியை நடத்தும் நாடுகளான மேற்கிந்தியத் தீவுகள், அமெரிக்கா ஆகியவையும் வெளியேறியுள்ளன.

அரையிறுதிப் போட்டிக்கு இந்தியா, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன.

ஜூன் 27ஆம் தேதி காலை நடைபெறும் போட்டியில், ஆப்கானிஸ்தான் அணியை தென் ஆப்ரிக்கா அணி எதிர்கொள்கிறது. சூப்பர் 8 சுற்றில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி முதல் முறையாக அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ள ஆப்கன் அணி, இறுதிப் போட்டிக்கு முன்னேறும் முனைப்புடன் களம் காண இருக்கிறது.

இந்திய நேரப்படி இரவு 8 மணிக்குத் தொடங்கும் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது.

அரையிறுதிப் போட்டிகள்

டி20 உலகக்கோப்பை

பட மூலாதாரம், BBC/Getty Images

படக்குறிப்பு, முதல் அரையிறுதி போட்டி

டி20 கிரிக்கெட் உலகக்கோப்பையின் முதலாவது அரையிறுதிப் போட்டியில் ஆப்கானிஸ்தான் தென் ஆப்ரிக்காவை எதிர்கொள்கிறது.

டி20 உலகக்கோப்பை

பட மூலாதாரம், BBC/Getty Images

படக்குறிப்பு, இரண்டாவது அரையிறுதிப் போட்டி

டி20 கிரிக்கெட் உலகக்கோப்பையின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி, இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது.

சூப்பர் 8 முடிவுகள்

சூப்பர் 8 சுற்றின் முடிவுகள் மற்றும் புள்ளிப்பட்டியல் கீழே தரப்பட்டுள்ளன.

டி20 உலகக்கோப்பை
டி20 உலகக்கோப்பை
டி20 உலகக்கோப்பை

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

டி20 உலகக்கோப்பை
படக்குறிப்பு, குரூப் 1 சுற்றிலிருந்து இந்தியா, ஆஃப்கானிஸ்தான் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.
டி20 உலகக்கோப்பை
படக்குறிப்பு, குரூப் 2 சுற்றிலிருந்து தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.

அதிக ரன் எடுத்த வீரர்கள்

  • குர்பாஸ் (ஆஃப்கானிஸ்தான்) - 281 ரன்
  • டிராவிஸ் ஹெட் (ஆஸ்திரேலியா) - 255 ரன்
  • இப்ராஹிம் ஜாத்ரன் (ஆஃப்கானிஸ்தான்) - 229 ரன்
  • நிகோலஸ் பூரன் (மே.இ.தீவுகள்) - 228 ரன்
  • ஆன்ட்ரிஸ் கோஸ் (அமெரிக்கா) - 219 ரன்

அதிக விக்கெட் எடுத்த வீரர்கள்

  • ஃபஸல்ஹக் ஃபரூக்கி (ஆஃப்கானிஸ்தான்) - 16 விக்கெட்
  • அர்ஷ்தீப் சிங் (இந்தியா) - 15 விக்கெட்
  • ரஷித் கான் (ஆஃப்கானிஸ்தான்) - 14 விக்கெட்
  • ரிஷத் ஹூசைன் (வங்கதேசம்) - 14 விக்கெட்
  • நவீன் உல் ஹக் (ஆஃப்கானிஸ்தான்) - 13 விக்கெட்

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)