இன்ஸ்டாகிராமில் 'யுத்தம்' செய்யும் கோலி - நவீன்; ஓயாத சர்ச்சை - என்ன நடக்கிறது?

பட மூலாதாரம், Getty Images
விராட் கோலி, கம்பீர், நவீன் இடையே கிரிக்கெட் களத்தில் வெடித்த மோதல் தற்போது 'இன்ஸ்டாகிராம் சண்டையாக' உருவெடுத்திருக்கிறது.
ஆனால் இதற்கு கோலி முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மே 10-ம் தேதி ஒரு ரீலை ஷேர் செய்திருக்கிறார். இந்த விவகாரத்தில் ஒருவரையொருவர் தாக்கியது என்ன? ரசிகர்கள் கற்பித்த ஊகங்கள் என்ன என்பதை விளக்கமாக பார்க்கலாம்.
கடந்த மே 1-ம் தேதி லக்னெள மற்றும் ஆர்சிபி அணிகள் மோதிய ஐபிஎல் போட்டியில் விராட் கோலியின் எதிர்வினை ஒன்று அனலை கிளப்பியது.
கடந்த ஏப்ரல் 10-ம் தேதி பெங்களூரு மண்ணில் நடந்த ஐபிஎல் போட்டியில் 1 விக்கெட் வித்தியாசத்தில் லக்னெள ஆர்சிபியை வீழ்த்தியது. அந்த போட்டி முடிந்தபிறகு கம்பீர் பெங்களூர் ரசிகர்களை நோக்கி உதட்டை குவித்து விரல் வைத்து அமைதியாக இருக்கும்படி சைகை செய்தார்.
இதற்கு பதிலடியாக, மே 1-ம் தேதி லக்னெள மண்ணில் நடந்த போட்டியில் க்ரூனால் பாண்டியா விக்கெட் வீழ்த்தப்ட்டதும் உதட்டில் விரல் வைத்த கோலி, 'அமைதியாக இருக்க வேண்டாம் கத்துங்கள்' என்பது போல சைகை செய்தார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1

பட மூலாதாரம், Getty Images
அதே போட்டியில் சிராஜ் ஓவரில் ஒரு பௌன்சர் விவகாரம் பின்னர் விராட் கோலி மற்றும் அப்போது பேட்டிங் செய்துகொண்டிருந்த நவீன் உல்-ஹக் இடையே தகராறாக உருவெடுத்தது. அப்போது விராட் கோலி தனது ஷூவை காண்பித்து சைகை செய்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.
போட்டி முடிந்தபிறகு வீரர்கள் கைகுலுக்கும் நிகழ்வில், நவீன் - கோலி இடையே மீண்டும் வார்த்தை மோதல் வெடித்தது மேக்ஸ்வெல் உள்ளிட்ட வீரர்கள் அப்போது சமாதானப்படுத்தினர். பின்னர் லக்னெள வீரர் கைல் மேயர்ஸுடன் விராட் கோலி சகஜமாக பேசிக் கொண்டிருந்தபோது கம்பீர் வந்து மேயர்ஸை தன் பக்கம் இழுத்துச் சென்றார். சில நொடிகளில் மீண்டும் கம்பீர் - கோலி இடையே மோதல் வெடித்தது. அதே தினத்தில் லக்நௌ கேப்டன் கேஎல் ராகுல் கோலியுடன் பேசிகொண்டிருந்தபோது, நவீனை சமாதானத்துக்கு அழைத்தார். ஆனால் நவீன் மறுத்துவிட்டார்.
இது தொடர்பான வீடியோக்கள் எல்லாமே சமூக வலைதளத்தில் வைரலாகி பெரும் சர்ச்சைக்கும் விவாதத்திற்கும் வித்திட்டன.
மறுநாள் ஐபிஎல் நிர்வாகம் கம்பீர் மற்றும் கோலிக்கு ஐபிஎல் விதிகளை மீறியதால் 100% போட்டி ஊதியத்தை அபராதமாக விதித்தது. நவீனுக்கும் 50% ஊதியம் அபராதமாக விதிக்கப்பட்டது.
ஆனால் இந்த சண்டை சச்சரவுகள் எல்லாம் அன்றோடு முடிந்துவிடவில்லை. இந்த சம்பவத்திற்கு கும்ப்ளே, ஹர்பஜன், கவாஸ்கர் உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் பலர் அதிருப்தி தெரிவித்தனர். அதே தினம் ஆர்சிபி யூட்யூப் பக்கத்தில் வெளியான வீடியோ ஒன்றில், விராட் கோலி லக்னெள உடனான வெற்றிக் கொண்டாட்டத்தில் ''உங்களால் கொடுத்த முடிகிறது எனில் நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும், இல்லையெனில் கொடுக்காதீர்கள்'' எனச் சொன்னார்.
தொடர் விமர்சனங்களுக்கு பிறகு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு ஸ்டோரியை பகிர்ந்திருந்தார் கோலி. அதில் ரோமானிய பேரரசர் ஒருவரின் கருத்தை மேற்கோள் காட்டி வெளியிட்டிருந்தார்.

பட மூலாதாரம், Instagram/Naveen ul haq Murid
''நாம் கேட்கும் எல்லா விஷயங்களும் கருத்துகளே; உண்மை 'அல்ல'. நாம் பார்க்கும் எல்லா விஷயங்களும் கண்ணோட்டமே; உண்மை அல்ல''
இது தான் விராட் கோலி பகிர்ந்த 'ஸ்டோரி'. இதனை ரசிகர்கள் சமீபத்திய சர்ச்சை தொடர்பாக தொடர்புபடுத்திக் கொண்டனர்.
இந்நிலையில் மே ஆறாம் தேதி கம்பீருடன் தான் இருக்கும் ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார் நவீன் உல் ஹக்.
அதில் ''நீங்கள் எப்படி நடத்தப்பட வேண்டுமோ, அப்படி பிறரையும் நீங்கள் நடத்துங்கள், உங்களுடன் மற்றவர்கள் எப்படி பேசவேண்டுமென நினைக்கிறீர்களோ அதே வகையில் நீங்களும் பிறருடன் பேசுங்கள்'' என எழுதியிருந்தார்.

பட மூலாதாரம், naveen_ul_haq Instagram
அதற்கு கம்பீர் ''நீங்கள் யாரோ அப்படியாகவே இருங்கள், மாறாதீர்கள்'' என நவீனுக்கு பதிலளித்திருந்தார்.
இத்துடன் இந்த சண்டை ஓயவில்லை. கடந்த மே ஏழாம் தேதி ஆமதாபாத்தில் லக்னெள மற்றும் குஜராத் அணிகள் மோதின.
இதில் குஜராத் அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதில் குஜராத் அணிக்காக சிறப்பாக செயல்பட்ட விருத்திமன் சாஹா மற்றும் ரஷீத் கானை பாராட்டி இன்ஸ்டாகிராமில் 'ஸ்டோரி' வெளியிட்டிருந்தார் கோலி.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
43 பந்துகளில் 81 ரன்கள் குவித்த சாஹாவை பாராட்டி 'வாட் எ பிளேயர்' என பதிவிட்டார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 3

பட மூலாதாரம், Getty Images
கைல் மேயர்ஸ் அடித்த பந்தை அபாரமாக டைவ் அடித்து கேட்ச் பிடித்த ரஷீத் கானை பாராட்டி ''நான் பார்த்ததிலேயே சிறந்த கேட்ச்களில் ஒன்று'' என பதிவிட்டார் கோலி.
இந்த 'ஸ்டோரிகள்' மீண்டும் சர்ச்சையை கிளப்பின. விராட் கோலி எல்எஸ்ஜியுடனான சண்டையை விடும் மனநிலையில் இல்லை என குஷ்பூ என்ற பயனர் ட்விட்டரில் விராட் கோலி ஸ்டோரியை பகிர்ந்து எழுதியிருந்தார்.
இத்தகைய சூழலில் தான் விராட் கோலியை கிட்டதட்ட நேரடியாக தாக்கும் விதமாக நேற்றைய தினம் இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி பகிர்ந்தார் நவீன்.
மும்பை இந்தியன்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகள் மும்பை வான்கடே மைதானத்தில் மே 10-ம் தேதி மோதின. இதில் ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே விராட் கோலி ஆட்டமிழந்தார். சில நிமிடங்களில் டிவியில் ஆர்சிபி மேட்சை பார்க்கும் புகைப்படத்தோடு மாம்பழ புகைப்படத்தையும் பதிவிட்டு ''ஸ்வீட் மேங்கோஸ்'' என தனது ஸ்டோரியில் எழுதியிருந்தார் நவீன்.
அதுமட்டுமின்றி மும்பை அணி வெற்றி பெறும் தருவாயில், மீண்டும் மேட்ச் பார்க்கும் புகைப்படத்தோடு மேலும் சில மாம்பழங்களை வைத்து ஒரு புகைப்படத்தை பதிவிட்டார். அந்த ஸ்டோரியில் ''இவற்றுடன் இரண்டாவது ரவுண்ட் இது. நான் சாப்பிட்டதிலேயே மிகச்சிறந்த மாம்பழங்களில் ஒன்று'' என பதிவிட்டிருந்தார் நவீன்.

பட மூலாதாரம், Navin Ulhaq
விராட் கோலி பெயரை அவர் குறிப்பிடாதபோதும் ரசிகர்கள் நவீன் உல் ஹக் கோலிக்கு கொடுத்த எதிர்வினையாகவே புரிந்து கொண்ட தமது ஆதரவு மற்றும் எதிர்ப்புகளை பதிவு செய்தனர்.
மும்பை அணியுடனான போட்டியில் தோற்றதால் ஆர்சிபி அணியின் பிளே ஆஃப் வாய்ப்பு சிக்கலாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்தடுத்து சமூகவலைதளங்கள் மூலம் கோலி - நவீன் இடையேயான மோதல் தொடர்வதாக பார்க்கப்பட்டதால், ஜென்டில்மென் கேம் என அழைக்கப்படும் கிரிக்கெட்டுக்கு இது நல்ல அடையாளம் அல்ல என விமர்சனங்கள் எழுந்தன.
இத்தகைய சூழலில் தான் இன்று (மே 10) மீண்டும் ஒரு இன்ஸ்டாகிராம் ஸ்டோரியை பதிவிட்டுள்ளார். அதில் வின்னர்ஸ் மைண்ட்செட் எனும் பக்கத்தின் ரீல் ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த ரீலில் அமெரிக்க நடிகர் கெவின் ஹார்ட் எதிர்மறையில் இருந்து விலகி இருப்பது குறித்து பேசுகிறார். வெறுப்பு, கோபம், எதிர்மறை ஆகியவற்றுக்கு எனக்கு நேரம் இல்லை; ஏனெனில் நான் நிறைய நேர்மறை விஷயங்களுடன் வாழ்கிறேன் என கெவின் பேசியிருக்கிறார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 4

அந்த காணொளியை பகிர்ந்து 'வாசகம்' என எழுதியிருக்கிறார் கோலி.
இந்த ஸ்டோரியோடு இந்த விவகாரம் முற்றுப்புள்ளி வைக்கப்படுமா அல்லது மேற்கோண்டு இன்ஸ்டாகிராம் யுத்தம் தொடருமா என்பதை பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












