பாகிஸ்தான்: அரண்மனை போன்ற வீட்டில் மயிலை மட்டும் எடுத்துச் சென்ற நபர் - ஏன்?

பாகிஸ்தானில் நெருக்கடி

பட மூலாதாரம், SOCIAL MEDIA

    • எழுதியவர், முகமது ஹனிஃப்
    • பதவி, செய்தியாளர் மற்றும் ஆய்வாளர்

அந்த நபர் நினைத்திருதால் பாகிஸ்தானின் கார்ப்ஸ் கமாண்டர் வீட்டின் எந்த மதிப்புமிக்க பொருளையும் எடுத்துச் சென்றிருக்கலாம். சுவரில் இருந்த கடிகாரம், கூரையில் தொங்கிக்கொண்டிருக்கும் சரவிளக்கு அல்லது சமையலறையில் இருக்கும் டின்னர் செட் என எதை வேண்டுமானாலும் எடுத்திருக்கலாம். குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டிருந்த உணவுகளைகூட எடுத்திருக்கலாம்.

சோபாவின் டிசைனர் குஷன்கள், சுவர்களில் மாட்டப்பட்டுள்ள விலையுயர்ந்த ஓவியங்கள் அல்லது அலங்கார துப்பாக்கிகள் ஆகியவற்றையும் எடுத்திருக்கலாம்.

பணம், விலையுயர்ந்த வாசனை திரவியங்கள், பூ ஜாடிகள், க்ரிஸ்டல் ஆஷ் ட்ரேக்கள், பட்டுத் திரைசீலைகள் அல்லது மேஜை விளக்குகளை எடுத்துச் சென்றிருக்கலாம். சுவரில் தொங்கும் வரலாற்று நிகழ்வுகளை நினைவுபடுத்தும் படங்களை எடுத்திருக்கலாம்.

ஆனால் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்த அவரின் ஆதரவாளர்கள் லாகூரில் உள்ள பாகிஸ்தானின் கார்ப்ஸ் கமாண்டர் வீட்டை சூழந்தபோது, அங்கிருந்த அத்தனை விலைமதிப்புமிக்க பொருட்களை எல்லாம் விட்டுவிட்டு சிலர் மயில்களை தூக்கிச் சென்றுள்ளனர்.

அங்குள்ள ஒருவரிடம் 'நீங்கள் என்ன செய்கிறீர்கள்' என்று ஒரு ஒளிப்பதிவாளர் கேட்டதற்கு, 'எங்கள் சொத்து திருடப்பட்டுள்ளது. அதை நாங்கள் இப்போது திரும்ப எடுத்துச்செல்கிறோம்' என்று அப்பாவித்தனமாக பதிலளித்தார் மயிலை எடுத்துச் சென்ற அந்த நபர்.

பாகிஸ்தானின் வரலாற்றில் இப்படி நடந்திருக்க வாய்ப்பில்லை. இங்கு பிரதமர் சிறைக்கு செல்வது, பிரதமர் தூக்கிலிடப்பட்டது, தலைவர்கள் உயிர் தியாகிகளாவது, நாட்டை விட்டே துரத்தப்படுவது போன்ற பல சம்பவங்கள் செய்தித்தாள்களின் தலைப்புச் செய்திகளாக மாறியுள்ளன.

அரசியல்வாதிகள் இங்கு பல ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். எந்த நீதிபதியும் அவர்களை அழைத்து ’அவர்கள் செய்த குற்றம் என்ன’ என்று கேட்கவில்லை.

ஆனால் பாகிஸ்தானின் கமாண்டரின் வீட்டின் உட்புறம் எப்படி இருக்கிறது என்பதை மக்கள் பார்த்த இந்த நிகழ்வு வரலாற்றில் முதல்முறையாக நடந்துள்ளது. அவர் வீட்டில் எத்தனை படங்கள் உள்ளன, நீச்சல் குளம் எவ்வளவு பெரியது, நேர்த்தியாக வெட்டப்பட்ட எத்தனை மரங்கள் உள்ளன என்று மக்கள் இப்போதுதான் பார்த்தனர்.

X பதிவை கடந்து செல்ல, 1
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு, 1

கார்ப்ஸ் கமாண்டரின் வீட்டின் உண்மையான பெயர் 'ஜின்னா ஹவுஸ்' என்பதும் மக்களுக்கு இப்போதுதான் தெரியவந்துள்ளது. பாகிஸ்தானின் தந்தை முகமது அலி ஜின்னாவால் இந்த வீடு ஒரு காலத்தில் வாங்கப்பட்டது.

ஜமாத்-இ-இஸ்லாமி, தெஹ்ரீக்-இ-லப்பைக் மற்றும் முஸ்லீம் லீக் ஆகிய எல்லா கட்சிகளுமே, தாங்கள்தான் முகமது அலி ஜின்னாவின் உண்மையான வாரிசுகள் என்று கூறிக்கொள்கின்றன.

முன்னாள் பிரதமர் இம்ரான் கான், இரண்டாம் முகமது அலி ஜின்னாவைப் போன்றவர் என்று கூறப்படுகிறது. ஆனால் ஜின்னாவின் சொத்தைப் பெறுபவர்தான் அவருடைய உண்மையான வாரிசு.

எனவே ஜின்னாவின் உண்மையான வாரிசு யார் என்பதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம். அவர்தான் லாகூரின் கார்ப்ஸ் கமாண்டர். இவர் ஜின்னா வாங்கிய வீட்டில் வசிக்கிறார்.

X பதிவை கடந்து செல்ல, 2
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு, 2

லாகூரில் உள்ள முதல்வர் இல்லத்தில் யார் இருந்தாலும் லாகூரின் உண்மையான ராஜா கார்ப்ஸ் கமாண்டர்தான். அதனால் அவருடைய வீட்டின் பிரம்மாண்டத்தையும் செழிப்பையும் யாரும் சந்தேகிக்க முடியாது.

பொதுவாக மயில்களை பணக்காரர்கள் மற்றும் அதிக ஆர்வமுள்ளவர்கள் வளர்க்கிறார்கள். தங்கள் வீடுகளில் பெரிய தோட்டங்களை வைத்திருப்பவர்கள், இந்த தோட்டங்களில் மயில்கள் நடமாடுவதைப் பார்த்து தங்களை சிறிய முகலாய பேரரசர்களாக உணர்கிறார்கள்.

வாலை ஆட்டியபடி குழந்தைகளுடன் விளையாடும் பூனை, நாய் போன்ற செல்லப் பிராணி அல்ல மயில். அது மக்களிடமிருந்து விலகிச் செல்கிறது. 'என்னைப் பார், நான் மிகவும் அழகாக இருக்கிறேன்' என்று அது சொல்லும். மயில் உற்சாகமாக இருக்கும்போது, அது தனது தோகையை விரித்து அழகாக நடனமாடும்.

X பதிவை கடந்து செல்ல, 3
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு, 3

கார்ப்ஸ் கமாண்டர் வீட்டிலிருந்த மயில் சாந்த குணம் கொண்டது. வீட்டில் எப்போதாவது நெருப்பு பிடித்திருந்தால், வீட்டை யாராவது சூறையாடியிருந்தால், மக்கள் அங்குகூடி கோஷம் எழுப்பியிருந்தால் ஒருவேளை மயில் கத்துவதற்கு கற்றுக்கொண்டிருக்கலாம். ஆனால் கோர் கமாண்டர் வீட்டு தோட்டத்தில் மயில் இதையெல்லாம் எப்போதுமே கேட்டதே இல்லை.

கையில் மயிலுடன்ஊடகம் ஒன்றிடம் பேசிய அந்த நபர் முகத்தில் முகமூடி அணிந்திருந்தார். அந்த மயில் அகப்பட்டிருந்த வீட்டுச் சிறையில் இருந்து அதனை காப்பாற்றுவதாக எண்ணி அவர் அதை எடுத்து சென்றிருக்கலாம். அரண்மனை போன்ற வீட்டிலிருந்து விலையுயர்ந்த பொருட்களை எடுத்துச் செல்வதற்கு பதிலாக மயிலை மடியில் வைத்து எடுத்துச்சென்றிருப்பதால் அவர் நிச்சயமாக மென்மையான உள்ளம் கொண்டவராக இருக்க வேண்டும்.

தற்போது பாகிஸ்தான் நீதிமன்றங்களில் ஆயிரக்கணக்கான ஊழல் வழக்குகள் நடந்து வருகின்றன. கமாண்டர் வீட்டிற்குள் நுழைந்து கலவரம் செய்தவர்களை பயங்கரவாதிகள் என்று அழைக்கிறார்கள்.

இத்தனை விவாதங்களுக்கு மத்தியிலும் மயில் மற்றும் மயில் திருடன் பற்றி மட்டுமே எனக்கு கவலை. மயிலுக்கு தனது புதிய வீட்டில் சரியான உணவு கிடைக்குமா, அது அங்கு வசதியாக வாழ முடியுமா என்று நான் சிந்திக்கிறேன். ஏனெனில் அதன் புதிய வீடு கமாண்டரின் வீட்டை விட மிகவும் சிறியதாகவே இருக்கும்.

தீப்பிடித்த வீட்டிலிருந்து ஒரு உயிரைக் காப்பாற்றியதற்காக அந்தத் நபரை பாராட்ட வேண்டும். ஆனால் அந்தத் திருடன் இதுவரை காவல் நிலையத்தை பார்த்திருக்க மாட்டார் என்பது நிச்சயம். தற்சமயம் காவல் துறையினர் அவரைத் தேடிக் கொண்டிருப்பார்கள். அவர் போலீஸ் சீருடையை திரைப்படங்களில் மட்டுமே பார்த்திருப்பார். எனவே திருடனின் எதிர்காலம் என்னவாக இருக்கும்?

பாகிஸ்தானில் சிலருக்கு இம்ரான் கானின் உயிர் பற்றிய கவலை, யாரோ சிலருக்கு அரசின் எதிர்காலத்தைப் பற்றிய கவலை, வேறு சிலருக்கு கோர் கமாண்டரின் வீடு எரிக்கப்பட்டது பற்றிய கவலை.

ஆனால் என்னுடைய கவலை, மயிலையும் மயில் திருடனையும் பற்றியது.

நாட்டில் புரட்சி கொண்டு வர வேண்டுமானால் கொண்டு வாருங்கள், தேர்தல் வேண்டுமானால் நடத்துங்கள். ஆனால் மயிலையும் மயில் திருடனையும் தனியே விட்டுவிடாதீர்கள்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: