ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வீராங்கனைகளை அப்புறப்படுத்திய காவல்துறை

பட மூலாதாரம், Getty Images
ஜந்தர் மந்தரில் கடந்த ஒரு மாதகாலமாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வீரங்கனைகள் இன்று புதிய நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணியாகச் செல்லவிருந்த நிலையில் காவல்துறையால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வீராங்கனை சாக்ஷி மாலிக், காவல்துறையினர் தங்களை அப்புறப்படுத்தியது மட்டுமல்லாமல் தங்களின் கூடாரங்களை அழித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
என்ன நடந்தது?
டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராடிக் கொண்டிருந்த மல்யுத்த வீரர், வீராங்கனைகள் புதிய நாடாளுமன்ற கட்டடத்தை நோக்கி பேரணியாகச் செல்ல முயன்றபோது, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து பேரணியாகச் சென்ற மல்யுத்த வீரர், வீராங்கனைகள் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அவர்களை காவல்துறையினர் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்று வண்டியில் ஏற்றி அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
சில தினங்களாக, இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷனுக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டில், நடவடிக்கை எடுக்கக் கோரி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் டில்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வந்தனர்.
இன்று புதிய நாடாளுமன்ற கட்டடம் திறப்பு விழா நடைபெற்ற நிலையில், மல்யுத்த வீரர்கள் தாங்கள் போராடிக்கொண்டிருக்கும் ஜந்தர் மந்தர் பகுதியிலிருந்து புதிய நாடாளுமன்ற கட்டடம் வரை பேரணி செல்ல இருப்பதாக முன்பே அறிவித்திருந்தனர்.
இதை முன்னிட்டு டெல்லியின் சிங்கு எல்லை, திக்ரி எல்லை, அம்பாலா எல்லை, காஜிபூர் எல்லையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி பேரணி செல்ல முயன்ற தங்களை காவல்துறை தடுத்து நிறுத்தியது மட்டுமின்றி, தங்களிடம் தவறாக நடந்துகொண்டதாகவும் மல்யுத்த வீரர்கள் குற்றம் சாட்டினர்.

பட மூலாதாரம், Getty Images
"நாட்டில் ஜனநாயகம் கொல்லப்படுகிறது"
காவல்துறை எங்களிடம் தவறாக நடந்து கொள்கிறார்கள் என்று கூறிய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, "நாட்டில் ஜனநாயகம் கொல்லப்படுகிறது. சிறையில் இருக்க வேண்டியவர்கள் சுதந்திரமாகத் திரிகிறார்கள், ஆனால், அமைதியாகப் போராட்டம் நடத்தும் எங்களை காவல்துறை தடுத்து நிறுத்துகிறார்கள்," என்றார்.
மல்யுத்த வீரர்களை மட்டுமல்லாது அவர்களது ஆதரவாளர்களையும் காவல்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இந்தச் சம்பவத்தின்போது, மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் இட்டிருந்த ட்விட்டர் பதிவில், மல்யுத்த வீரர்கள் மற்றும் வயதான தாய்மார்கள் அனைவரையும் கைது செய்த போலீசார், ஜந்தர் மந்தரில் எங்கள் அணிவகுப்பை கலைக்கத் தொடங்கியுள்ளனர். எங்கள் உடைமைகள் எடுக்கப்படுகின்றன," என்று குறிப்பிட்டிருந்தார்.
மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக பேரணியில் கலந்துகொள்ள இருந்த விவசாயிகளும் தடுத்து நிறுத்தப்பட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
மல்யுத்த வீரர்கள் மரியாதைக்குரியவர்கள். ஆனால், நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவில் தடை உண்டாக்குவதை அனுமதிக்கமாட்டோம் என்று டெல்லி போலீஸ் இந்தச் சம்பவம் குறித்து விளக்கமளித்துள்ளது.
டெல்லியின் சட்டம் ஒழுங்கைக் கண்காணிக்கும் சிறப்புக் காவல் படையின் ஆணையர் திபேந்திர பதக், “நாங்கள் எங்கள் விளையாட்டு வீரர்களை மதிக்கிறோம். ஆனால், புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவுக்கு ஏற்படக்கூடிய எந்தத் தடையையும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம்,” என்று கூறியுள்ளார்.
“நாங்கள் என்ன தவறு செய்தோம்?”
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
இதற்கிடையே, “ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்திய மல்யுத்த வீரர், வீராங்கனைகளை அப்புறப்படுத்தும் பணியை டெல்லி போலீசார் தொடங்கிவிட்டனர்,” என்று மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் தெரிவித்துள்ளார்.
“மல்யுத்த வீரர்கள், வயதான தாய்மார்கள் அனைவரையும் தடுத்து நிறுத்திவிட்டு, இப்போது ஜந்தர் மந்தரில் எங்கள் அணிவகுப்பை வேரோடு பிடுங்கி எறியத் தொடங்கியுள்ளனர். எங்கள் உடைமைகள் அகற்றப்படுகின்றன. இது என்ன வகையான போக்கிரித்தனம்?” என்று அவர் பேட்டியளித்துள்ளார்.
இதுகுறித்து பஜ்ரங் புனியா, “எந்த அரசாங்கமாவது தங்கள் நாட்டின் சாம்பியன்களை இப்படி நடத்துமா? நாங்கள் என்ன குற்றம் செய்தோம்?” என்று தனது ட்விட்டர் பதிவில் கேள்வியெழுப்பியுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
விவசாயிகளும் தடுத்து நிறுத்தம்
டெல்லி ஜந்தர் மந்தரில் வீராங்கனைகளின் புதிய நாடாளுமன்ற கட்டடம் நோக்கிய பேரணிக்கு ஆதரவு தெரிவிக்க முயன்ற பாரதிய கிசான் சங்கத்தின் தலைவர் ராகேஷ் திகைத் தலைமையிலான விவசாயிகள் டெல்லி காவல்துறையினரால் காசியாபாத் எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.
தற்போது டெல்லி காசியாபாத் எல்லையில் ராகேஷ் திகைத் தலைமையில் விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
“அனைத்து விவசாயிகளும் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். இனி அடுத்து என்ன செய்வது என்று யோசிப்போம்” என திகைத் தெரிவித்துள்ளார்.
புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு முன்பாக போராட்டம் நடத்த மல்யுத்த வீராங்கனைகள் அழைப்பு விடுத்திருந்த நிலையில், இதற்கு ஆதரவு தெரிவித்து விவசாயிகள் வருவார்கள் என்பதால் எல்லைகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. அதுமட்டுமல்லாமல் டெல்லியில் பல்வேறு பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

பட மூலாதாரம், YEARS
அகற்றப்படும் உடைமைகள்
ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீராங்கனைகள் கடந்த வாரங்களில் போராட்டம் நடத்தி வந்த பகுதியிலிருந்து கூடாரங்கள், குளிரூட்டிகள் மற்றும் பிற பொருட்கள் அகற்றப்பட்டன.
மல்யுத்த வீராங்கனைகள் மற்றும் பிற போராட்டக்காரர்களை புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் முன்பு மகாபஞ்சாயத்து நடத்தவிடாமல் தடுத்த பிறகு, டெல்லி போலீசார் போராட்டத் தளத்தில் போடப்பட்டிருந்த கூடாரங்களை அகற்றிவிட்டு, அதிலிருந்து குளிரூட்டிகள் மற்றும் இதர பொருட்களை லாரிகளில் ஏற்றிச் சென்றனர்.
இன்று மதியம் இரண்டு மணி வரைக்கும் ஜந்தர் மந்தரில் எதுவும் நடக்கவில்லை என்று சம்பவ இடத்திலிருந்த பிபிசி செய்தியாளர் அபினவ் கோயல் தெரிவித்தார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 3
பேரணி தொடங்கியதும் போலீசார் போராட்டக்காரர்கள பேருந்துகளில் ஏற்றி அழைத்துச் சென்றனர். போராட்டம் நடந்துகொண்டிருந்த இடத்திலிருந்து மல்யுத்த வீரர், வீராங்கனைகள் அப்புறப்படுத்தப்பட்டனர்.
மறியல் நடந்த இடத்திலிருந்து மெத்தைகள், குளிரூட்டிகளை போலீசார் வாகனத்தில் நிரப்பிக் கொண்டிருந்தார்கள். மறியல் நடைபெற்ற இடத்திற்குச் செல்லும் அனைத்து சாலைகளிலும் டெல்லி போலீசார் தடுப்புகளை அமைத்தனர். அந்த இடத்திற்குச் செல்ல ஊடகங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
சட்டம் ஒழுங்கை மீறிய குற்றச்சாட்டின் பேரில் வினேஷ் போகாட், சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா ஆகியோரை டெல்லி போலீசார் கைது செய்தனர். மல்யுத்த வீரர், வீராங்கனைகள் உள்ளிட்ட போராட்டக்காரர்களை பேருந்துகளில் ஏற்றிய பிறகு, அந்த இடத்திலிருந்த அவர்களது உடைமைகளை அகற்ற காவல்துறை உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து கூடாரங்கள், கட்டில், குளிரூட்டிகள், பாய்கள், தார்பாய்களை போலீசார் பலவந்தமாக அகற்றினர்.
"இது முற்றிலும் தவறானது"
“வீராங்கனைகள் பெற்ற பதக்கங்கள் நமது நாட்டின் பெருமை. வீராங்கனைகளின் கடின உழைப்பால் நாட்டின் பெருமை கூடியது. ஆனால் இரக்கமே இல்லாமல் பூட்ஸ்களுக்கு அடியில் நமது வீராங்கனைகளின் குரல்களை ஒடுக்கும் அளவிற்கு பாஜக அரசின் மூர்க்கத்தனம் அதிகரித்துவிட்டது. இது முற்றிலும் தவறு. இந்த அரசின் இரக்கமற்ற தன்மையையும், இழைக்கும் அநீதியையும் மொத்த நாடும் பார்த்து கொண்டிருக்கிறது” என பிரியங்கா காந்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
வீராங்கனைகள் தடுத்து வைக்கப்பட்டது குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள மேற்கு வங்க முதல்வர் மமதா பேனர்ஜி, “சாக்ஷி மாலிக், வினேஷ் போகத் மற்றும் பிற வீராங்கனைகளிடம் டெல்லி காவல்துறை தவறாக நடந்து கொண்டது. நமது வீராங்கனைகளை இவ்வாறு நடத்துவது வெட்கக் கேடானது. நான் வீராங்கனைகளுக்கு ஆதரவாக நிற்கிறேன். டெல்லி காவல்துறை அவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












