ரஃபாவைத் தாக்கிய இஸ்ரேல், கண்டித்த இஸ்லாமிய நாடுகள், அமெரிக்கா சொன்னது என்ன? - காணொளி
இஸ்ரேல் நடத்திய வான் வழித்தாக்குதலில் ரஃபாவில் உள்ள ஐ.நா-வின் இடம்பெயர்ந்தோர் முகாமில் இருந்த 45 பேர் கொல்லப்பட்ட நிகழ்வுக்கு சர்வதேச அளவில் கண்டனம் எழுந்துள்ளது.
இதனை 'எதிர்பாராத துயர நிகழ்வு' என இஸ்ரேல் பிரதமர் கூறினார்.
அதே சமயம் ஹமாஸுக்கு எதிரான போரை தொடரப்போவதாகத் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
இந்தத் தாக்குதலை பாலத்தீன மக்களுக்கு எதிரான இனப்படுகொலையின் கொடூர செயல் என இஸ்லாமிய ஒத்துழைப்பு கூட்டமைப்பு நாடுகள் கூறியுள்ளன.
பல்வேறு நாடுகளும் இந்த தாக்குதலை கண்டித்துள்ளன. இந்த விவகாரத்தில் என்ன நடந்தது என இந்தக் காணொளியில் பார்க்கலாம்.

பட மூலாதாரம், EPA
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)









